Advertisement

நாம் எப்படி வாழ வேண்டும்? வாத்தாகவா அல்லது கழுகாகவா? – மனதை தொட்டு சிந்தனையை தூண்டும் ஒரு நிமிட கதைகள் இரண்டு

வெளியூர் செல்ல வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். காரில் ஏறும் போது எனது கவனத்தை ஈர்த்தது காரின் பின்னால் ஒட்டி இருந்த ஆங்கில வாக்கியம் – “வாத்தா? அல்லது கழுகா? நீங்களே முடிவு செய்யுங்கள் (Duck or Eagle, you decide)”. அடுத்து கவனத்தை கவர்ந்தது (Clean and shiny) பளிச்சென்று சுத்தமாக இருந்த கார் ஓட்டுநர். நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார். அவரே வந்து கார் கதவை திறந்து என்னை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு மட்டும் தெளிவான பதில்.  அந்த ஓட்டுனரின் அழகிய செயல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக வாடகை கார் ஓட்டுநர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்டத்தோடு. இந்த ஓட்டுநர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார். பட்டதாரியும் கூட.

“அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா?” என்றேன். “இல்லை சார். நானும் மற்ற ஓட்டுநர்கள் போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு” என்றார் ஓட்டுநர். “எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்?” என்றேன்.

“கருத்தரங்கம் ஒன்றுக்கு செல்லும் வாடிக்கையாளர் ஒருவரோடு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு சென்று இருந்தேன். சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த கருத்தரங்கம் என்னை மாற்றி விட்டது” என்றார் ஓட்டுநர்.

“என்ன கருத்தரங்கம்? என்றேன். “உங்களை நீங்களே உயர்த்திக்  கொள்வது எப்படி? கருத்தரங்கத்தில் சொன்ன பல அறிவுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது என்னவெனில், காலையில் எழுந்திருக்கும் போதே இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது. வாத்தாக இருக்காதீர்கள் கழுகாக இருங்கள். வாத்துகள் சத்தம் போட்டு புகார்களை மட்டுமே எழுப்புகின்றன. கழுகுகள் கூட்டத்திற்கு மேலே பறக்கின்றன என் ஆங்கிலத்தில் சொன்னார்கள். (If you get up in the morning expecting a bad day, you will. Don’t be a Duck Be an Eagle. The ducks only make noise and complaints. The eagles soar above the group) அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது” என்றார் ஓட்டுநர்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ் )

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
“உணவகங்கள் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்பது குறித்த தங்கள் கருத்துக்களை நுகர்வோர் பூங்காவிற்கு அனுப்ப இறுதி நாள்: 21-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
மறைந்து வரும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் எவை?” என்பது குறித்த தங்கள் கருத்துக்கள் பூங்கா இதழுக்கு அனுப்ப இறுதி நாள்: 21-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

“என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன். நான் வாத்து (Duck) போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் கழுகு (Eagle) போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன். எல்லா வாடிக்கையாளர்களிடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன். மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்” என்றார் ஓட்டுநர்.

அவர் சொன்னது உண்மைதான். எந்த வேலையாக இருந்தாலும், நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே, (behaviour and involvement) நம்மை உயர்த்தும்.  உயர உயர வாழ்வில் கழுகு போல பறக்க வைக்கும். இப்பொழுது நம் முன்னால் இருக்கும் ஒரே கேள்வி : நாம் எப்படி வாழ வேண்டும்? வாத்தாகவா அல்லது கழுகாகவா? (Duck or Eagle ?) முடிவு எடுக்க வேண்டியது நாமே.

அறிவுபூர்வமாக பேசினால் பிரச்சனைகளை சமாளிக்கலாம்!

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். ‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று மன்னர் மறுத்தார்.

‘சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் ‘இது ஆணுமில்லை பெண்ணுமில்லை’ இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். 

பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். ‘பேராசைக்காரன்…! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்’ என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்…’நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது’ என்றான். இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: எப்போதும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குவதாக நாம் பெறக்கூடிய அறிவு அமையும் என்பதில் ஐயமில்லை.

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
 
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
 
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles