மாணவர்களும் இளைஞர்களும் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழக பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. 

பள்ளிகளில் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் அறிவு தேடல்  முக்கியமானதாகும். படித்து முடித்த பின்னரும் நல்லவற்றை தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாம் கற்றுக்கொண்ட அறிவை சமூக முன்னேற்றத்திற்காக பரப்ப வேண்டும். அறிவைத் தேடுவதும் பெற்ற அறிவை சமூகத்துக்காக சமூக வளர்ச்சிக்காக பரப்புவதும் நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வித்திடும் அம்சங்களாகும். நல்லாட்சியும் அமைதியும் இல்லாமல் சமூகத்தில் அனைத்து மனிதர்களும் மகிழ்ச்சியாக வாழ இயலாது. அறிவு பரவலே தேசம் காக்கும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

நல்லாட்சியும் அமைதியும் அடிப்படையான  உண்மையான ஜனநாயகத்தை  பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது.  உலகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பள்ளிகளும் வாக்காளரியலை போதிக்க வேண்டும். வாக்காளரியல் என்றால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்ல, சர்வதேச அளவில் தேர்தல் சட்டங்களை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரிவுகளான நாடாளுமன்றம் செயல் துறை அரசாங்கம் மற்றும் நீதித்துறை போல தேர்தல் நடத்தும் அமைப்புகளுக்கு நான்காவது அரசின் நான்காவது   பிரிவாக அரசியல் அந்தஸ்து வழங்குவதும் அவசியமானதாகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

தேர்தல்களில் வாக்களிப்பதுடன் வாக்காளர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேலைகளையும் கண்காணிக்க வேண்டியது வாக்காளர்களின் பணியாகும். ஊழல் விசாரணை ஊழல் புகார்கள் மீதான விசாரணை அமைப்பான லோக்பால், லோக் ஆயுக்தா, வெளிப்படையான நிர்வாகத்திற்கு உதவும் அமைப்பான தகவல் உரிமை ஆணையங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக நிர்வாக சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் பணியை வாக்காளர்கள் செய்ய வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். 

மாணவர்களும் இளைஞர்களும் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையைத் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் கூட்டு வாழ்க்கை என நாம் வகைப்படுத்தலாம். திட்டமிட்ட, அர்ப்பணிப்புடன் கூடிய, சீரான, முறைசார்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான செயல்பாடு வெற்றியை ஈட்டித்தரும். பள்ளிகளில் கல்லூரிகளிலும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கும் அடிப்படை அரசியலமைப்பு மற்றும் அரசியல் அறிவியலை   போதிக்க வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் அறிவு அற்றவர்களாக மாறுவது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து:

வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்! வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள்! தங்கள் வளர்ச்சியையும் மனித குலத்தின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளுங்கள்!

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles