செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு
வேண்டுகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த சமூக அர்ப்பணிப்பு உள்ளவர்களை தேர்வு செய்து, விரைவில் நல்லெண்ண தூதர்கள், புரவலர்கள் மற்றும் கௌரவ விரிவாக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
திறமையான பையன் – மனைவியை சுட்டுக் கொன்று விட்டு ஏன் தற்கொலை செய்து கொண்டார்? – சிந்திக்க, சிரிக்க...
பேங்க்-ல் கேஷியரிடம் 500 ரூபாய் பணக்கட்டை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது. "சார் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா"ன்னுதான் கேட்டேன்! பேங்க் கேஷியர் கொஞ்சம் கோவமா "ஏன் பணம் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார். சரியா இருக்கும்... ரொம்ப பிஸியான நேரம். இப்ப எண்ணித்தர முடியாது!" அப்படீனாரு!
மறைந்துவிட்ட பல்லுயிர் காவலனான இட்டேரி சுற்றுச்சூழல் அமைப்பு – தமிழர்களின் பாரம்பரியம் – படித்து தெரிந்து கொள்ளலாமே!
தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தெரியாத அளவிற்கு நம் வளர்ச்சி உள்ளது! கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும். பல்லுயிர் வளர்ச்சி நிலவிட, மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள். இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்
ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை… உண்மையை படம் பிடித்து காட்டும் கதையை படிக்கத்...
அவள் மெல்லிய சிரிப்புடன் நான் எதை என்னவென்று சொல்ல.. 35 வருஷத்தில் சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம். காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம். இப்படி ஏதேதோ நடந்திருக்கும். என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.
உஷார்! டிஜிட்டல் அரஸ்ட், சைபர் குற்றங்கள், வாடகை மனைவி, யாரோடு வேண்டுமானாலும் உறவு எமர்ஜென்சி உள்ளிட்ட கருத்து மூட்டையுடன் ...
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அவருக்கு வீடியோ காலில் ஒரு போன் வந்துள்ளது. அதில் உயர் போலீஸ் அதிகாரிக்கான சீருடையில் ஒருவர் இருந்துள்ளார். தங்களது மொபைல் போன் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையதாக உள்ளது என கூறி பேச ஆரம்பித்துள்ளார். தம்மை மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். வீடியோ காலை ஆப் செய்தால் உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்வோம், பேப்பர், டிவியில் உங்கள் பெயர் வரும் என்று மிரட்டி அந்த இளைஞரை வீடியோ காலில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் 9 மணி நேரம் இருக்க வைத்துள்ளார். தாங்கள் கூறுகிற வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக மிரட்டி இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை இறுதியாக பறித்து விட்டார்.
ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி...
கடந்த வாரத்தில் சென்னைக்கு கிழக்கே உள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் ரூ 36,000 கோடி மதிப்புள்ளான மெத்தம்பேட்டமைன் போதை பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது ஒரு செய்தி. மத்திய...
1. சமாளிப்பதற்கு உரிய மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் – 2. 1940-1980 பிறந்தவர்கள் வாழ்ந்த...
பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு..ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; 1960களில் குச்சி ஐஸ் அறிமுகம் .. சைக்கிள் ஹாண்டல் பாரில்... இரண்டு பெரிய பிளாஸ்க் கேண்கள் மாட்டி .. "ஐஸ் ப்ரூட் .. ஐஸ் ப்ரூட்" என்று தெருக்களில் கூவி விற்ற காலம் .. ஐஸ் ப்ரூட் .. சேமியா ஐஸ் வாங்கி.. சொட்ட சொட்ட உறிஞ்சி சாப்பிட்டு.. யூனிபார்ம் சட்டைகளெல்லாம் சிவப்பு கலர் கறையாக மாறின காலம்..!
உருவாக்கப்பட்டுள்ள நீதிபதி பணியிடங்கள் போதுமானவை அல்ல – உச்ச நீதிமன்றம். நீதிபதி பணியிடங்களில் 5,245 காலி- மத்திய அரசு.
நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தி, நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை செய்து, கூடுதல் நீதிபதிகளை நியமித்து, தொழில்நுட்ப வளர்ச்சியை நீதித்துறையில் பயன்படுத்தி வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதை களை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
அதானியை, இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய முடியுமா? மத்தியிலும் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் கமிஷன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த...
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடன தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை இயற்றியது. இதைப்போலவே, ஒரு நாள் முன்னதாக 1948 டிசம்பர் 9 அன்று இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது. இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் தற்போது காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களிலும் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஒரு சாரார் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குறித்த வியக்கும் சங்கதிகளை அறிந்து கொள்ளுங்கள்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்கினங்களையும் தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 6000 பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறைந்தது 325 உலகளவில் அழிந்து வரும் உயிரினங்களும் உலகின் 17 சதவீத புலிகளும் (பாந்தெரா டைகிரிஸ்) மற்றும் 30 சதவீத ஆசிய யானைகளும் (எலிபாஸ் மாக்சிமஸ்) உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை தொடரை உலக பாரம்பரிய தளமாக 2012 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 39 இடங்களை பாரம்பரிய இடங்களாக உலக பாரம்பரிய குழு அறிவித்துள்ளது.