குட்டி தீவில் இந்தியா ரகசிய ராணுவ தளத்தை அமைகிறதா? உண்மைதானா?
மொரீஷியஸின் கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர். 1965-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட சாகோஸ் தீவில் பெரிய தீவு டியகோ கார்சியா. (Diego Garcia) இங்கிலாந்தின் அனுமதியைப் பெற்று இந்த தீவில் அமெரிக்கா தகவல் தொடர்பு நிலையத்தை அமைத்தது. பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது.
புரியாத வயசு… … அறியாத நண்பர்கள்… … ஆபத்தை ஏற்படுத்தும் ஈர்ப்பு… … மாணவிகளே உஷார்! இதை படிக்கும்...
இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு புரியாத வயதாக உள்ள நிலையில் எதையும் அடையாளம் காணும் திறனை பெறுவதற்கு குழப்பமாக உள்ள மனநிலை (confused state of mind) நீடிக்கிறது. இந்தப் புரியாத வயதில் சமூக வலைத்தளங்களில் அறியாத நண்பர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவிகளுக்கு எமனாக இருக்கக்கூடிய மோகம் (காதல் அல்ல) அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. வளர் பருவ வயதில் உள்ள மாணவிகளை சீரழிக்க மோசமான மனிதர்களும் (individuals) குற்றவாளி குழுக்களும் (criminal gangs) வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வலுப்படுத்த வேண்டிய தெரு விழாக்களும் கிராமிய திருவிழாக்களும் புத்தகப் பெருவிழாக்களும்
கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய திருவிழாக்களில் புலி வேஷம், சிலம்பாட்டம், கோமாளி போன்ற வகையான ரசிக்கும் அம்சங்களும் இடம்பெற்றன. பண்டிகை காலங்களில் கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகளைப் போலவே நகரங்களில் தெருக்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமங்களிலும் நகரங்களிலும் தெரு நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகங்கள் இடம்பெற்றன. இவ்வாறு கிராமங்களில் நகரங்களிலும் பண்டிகை காலங்களிலும் திருவிழாக்களிலும் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மகிழ்ச்சியுற்றதோடு மக்களுடைய ஒற்றுமையும் பரஸ்ப நட்புணர்வும் வலுப்படுத்தப்பட்டது.
பூங்கா இதழ் ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலி – மனிதர்களை அடையாளம் காண்பது குறித்து ஒரு நிமிட கதை –...
நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இந்த இதழ்கள் தொடங்கப்பட்டது முதல் இறப்பு வரை பணியாற்றிய கதிர்வேலின் மறைவு வேதனை அளிக்கிறது. அவருக்கு அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம்.
நடிகர் விஜய்க்கு வந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா!, மொபைல் போன் வைத்திருக்கிறீர்களா, உஷார்!, இந்திய கிரிக்கெட் வாரியத்தை...
ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னதாக இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்களை தயாரிப்பதற்கான பணியிலும் ஈடுபட வேண்டும். கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் கிரிக்கெட் வாரியம் (BCCI) அரசின் கட்டுப்பாட்டிற்கு இல்லை. இந்த வாரியம் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். இதைப்போலவே, பல்வேறு விளையாட்டுகளுக்கான சங்கங்கள் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டிய சங்கங்களில் விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத அரசியல்வாதிகள் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து கொண்டு அவர்களது விருப்பப்படி செயல்பட்டு வருகிறார்கள். இந்த சங்கங்கள் சார்பில்தான் சர்வதேச விளையாட்டுகளுக்கு போட்டிகளுக்கு இந்தியாவின் சார்பில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வந்து விளையாட்டு நிர்வாகத்தை அரசே நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும் என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன – பட்டினி கொடியது! அதைவிடக்...
நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை. ''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?'' என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது. நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும் என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.
இன்று அமெரிக்கா தேர்தல்: அமெரிக்கா ஒரு காலத்தில் அடிமை நாடு தெரியுமா? நான்காண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமை மட்டும் அமெரிக்க...
உலகில் உள்ள ஏழு கண்டங்களில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்பவை இரண்டு கண்டங்கள். இதில் வட அமெரிக்காவில்தான் அமெரிக்கா என்று பொதுவாக இந்தியர்களால் கூறப்படும் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் முழு...
வெளிநாட்டுக்கு மகனை வேலைக்கு அனுப்பி விட்டு கதறும் பெற்றோரின் கதை … …. மனதை உடைத்த ஒரு நிமிட...
''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா? ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்தியமில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.
மனதை தொட்ட வலைத்தளத்தில் படித்த கதை. கதை எடுத்துச் சொல்லும் “நிலையான வளர்ச்சி (Sustainable Development) என்றால் என்ன?”...
நமக்கு முன் பல்லாயிரம் தலைமுறைகள் வாழ்ந்துள்ளார். ஒரு தலைமுறையினால் அடுத்து வந்த தலைமுறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாங்கள் அனுபவித்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச்சென்றனர். இதுவே நிலையான வளர்ச்சிக்கு (sustainable development) அடித்தளம் ஆகும். இதில் நாம் மட்டுமே விதிவிலக்கு. நாம் சிறு வயதில் அனுபவித்த சுதந்திரம், பசுமையான சுற்றுப்புறம், வீதிகளில் விளையாட்டு, தடையில்லா குடிநீர், கூட்டுக்குடும்ப வாழ்க்கை என சொல்லிக்கொண்டே போகும் எதையும் நம் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லை.
கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கட்டும்! தண்டனை கிடைக்கட்டும்! கொலையான குடும்பத்துக்கு என்ன கிடைக்கிறது? – வீ. ராமராஜ் அவர்களால்...
மனிதன் வாழ்க்கை வளம் பெற தேவைப்படும் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப இயற்றும் பொறுப்பு மக்கள் மன்றங்களுக்கு எப்போதும் உரியதாகும். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா. காவல்துறையின் அதிகாரங்களையும் பணிகளையும் பாதுகாத்தல், துப்புத்...