வழக்கறிஞர்களின் போராட்டம் மக்களுக்கானதா? போராட்டம் வெற்றி அடையுமா?
இந்த போராட்டத்தை வழிநடத்துவதிலும் கையாளுவதிலும் உள்ள அம்சங்களை பொறுத்தே வருங்காலத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
படித்ததில் பிடித்தது – தந்தையின் ஆசிகள்
இதைக் கேட்ட சுல்தான் மிகவும் உற்சாகம் அடைந்து, ‘உங்களுடைய கிராம்புகள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு நீங்கள் என்ன விலை கேட்கிறீர்களோ அதை தருகிறேன்’ என்றார். அப்பாவின் ஆசிகள் மகனை இங்கும் தோல்வி அடைய செய்யவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை. நம் பெற்றோரின் ஆசிகளில் அளவிட முடியாத சக்தி இருக்கிறது. அந்த ஆசிகளை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கணமும் நம் வேலையின் பலனைத் தருவது அந்த ஆசிகள்தான். நாம் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை எதுவெனில், நாம் நம்முடையை மூத்தவர்களை மதித்து நடப்பதுதான்
“இந்தியா” கூட்டணி சேர்ந்துள்ள அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
தெற்காசியாவில் பதட்டத்தை குறைக்கவும் அண்டை நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்தி அமைதியை நிலவச் செய்யவும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இந்திய அரசின் தலையாயப் பணிகளில் ஒன்றாகும்.
வழக்கறிஞர் சங்கங்கள் பிளவுபட்டு நிற்கலாமா? அனைத்து வழக்கறிஞர்களும் படிக்க வேண்டிய கட்டுரை. அனைத்து வழக்கறிஞர்களுக்கும் அனுப்பலாமே!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஒற்றுமையா? அல்லது வேற்றுமையா? என்பதை காலம் முடிவு செய்து விடும் என்றே கருதப்படுகிறது. கூட்டமைப்பா? கூட்டு நடவடிக்கை குழுவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல வழக்கறிஞர் சங்கங்களிடையே எழுந்துள்ள கேள்வி. ஒற்றுமையா? வேற்றுமையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதுதான் கேள்வியாகும்.
சைபர் குற்றவாளிகள் உங்களிடம் பணத்தைப் பறிக்க கையாளும் தந்திரங்களை அறிந்துகொள்ளுங்கள்!
இங்கு கொடுக்கப்பட்டு இருப்பவை சில வகையான சைபர் குற்ற மோசடிகள் ஆகும். இதே போலவே பல வகையான சைபர் குற்றங்களை குற்றவாளிகள் செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் மொபைல், இணையதளம், வங்கி பரிவர்த்தனை செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
நீங்களும் தமிழக அரசின் விருதைப் பெறலாம் – தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 15 ஆகஸ்ட்...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 15 ஆகஸ்ட் 2024. தகுதி வாய்ந்தவர்கள் https://awards.tn.gov.in/index.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்தவர்களை கண்டறியும் பொதுமக்களும் அவர்களுக்காக விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
தமிழர்களின் திருமண கலாச்சார முறை தடம் மாறுகிறதா?
மாற்றங்களை ஏற்பதில் தவறில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்பதில் தவறில்லை. அவற்றை உட்கொண்டு தமிழர்களின் மரபுகளை மாற்றுவது சரியானதா? என்பதை கேள்வியாகும். திருமண நிகழ்வு என்பது உறவினர்களையும் நண்பர்களையும் இணைக்கும் பாலம் என்பதை மறந்து விட்டு ஒரு சடங்காக அல்லது தங்களது பண பலத்தை காட்டும் படமாக (show) மாறிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் பண்பாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. தமிழர் மரபையும் தமிழர் பண்பாட்டையும் பராமரித்து தமிழர் என்ற அடையாளத்தை இழக்காமல் இருப்போம்.
ஒவ்வொரு தருணமும் ஒரு தேர்வு – ஒன்றுமே இல்லாத மரணம்
நம்மிடம் எண்ணங்கள் இருந்தால், அதை நாம் நிறைவேற்றிட வேண்டும். நம்மிடம் அறிவு இருந்தால், அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்மிடம் லட்சியம் இருந்தால், அதை சாதிக்க வேண்டும். அன்பு செலுத்து, பகிர்ந்து கொள், விநியோகித்து விடு. எல்லாவற்றையும் உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாதே. “நமது வாழ்க்கையின் இறுதி நேரம் வரும் போது, நமது கையில் ஒரு நாற்று இருந்தால், அதையும் உடனே நட்டு விடுங்கள்.“ நம்முள் இருக்கும் நல்லவற்றின் அணுத்துகள்கள் ஒவ்வொன்றையும் கொடுத்து பரவச் செய்யுங்கள். நாம் ஒன்றுமில்லாமல் மரணிப்போம்.
தமிழகத்தில் உதயமாக உள்ள சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையம்
“அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சமூக பொறியியல் பிரிவின் சார்பில் சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தை (International Institute of Peace Strategies) விரைவில் தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். தொடக்கத்தில் இந்த மையம் டிஜிட்டல் முறையிலானதாக அமையும். அமைதி கலாச்சாரத்துக்கான கல்வியை போதித்தல் மற்றும் பயிற்சி அளித்தல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக குறுகிய கால படிப்புகளை நடத்துதல் ஆகியன இந்த கல்வி மையத்தின் முதல் கட்ட பணிகளாக இருக்கும். சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தில் கீழ்க்கண்ட துறைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது”.
அனைவரும் எழுத்துத் திறமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது
எழுத்து என்பது முன்னேற்றத்திற்கான பலம் வாய்ந்த ஆயுதமாகும். எழுத்து திறமையை மாணவர்களும் இளைஞர்களும் வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவதோடு சமூகத்திலும் சிறந்த அங்கீகாரத்தைப் பெற இயலும்.