சட்டப் போராட்டம்
கடந்த 23 பிப்ரவரி 2022 -ல் தமிழக அரசு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. கடந்த 4 மார்ச் 2022-ல் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு ஆணையத்தை கலைக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இறுதி விசாரணைக்கு பின்னர் கடந்த 13 ஜூலை 2022 -ல் தமிழக அரசின் ஆணைக்கு தடையை விலகியது சென்னை உயர்நீதிமன்றம் மன்றத்தின் தனி நீதிபதி அமர்வு.
தனி நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தனி நீதிபதி அமர்வின் தீர்ப்புக்கு கடந்த 15 செப்டம்பர் 2022 -ல் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆறு வார காலத்துக்குள்ளாக உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 16 ஜனவரி 2023 -ல் உத்தரவிட்டது.

கடந்த பல மாதங்களாக தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை தொடர்ந்து வந்த நிலையில் இந்த ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அனுமதியை வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
சுமார் 3 ஆண்டுகளாக வெற்றிடமாக இருந்து வந்த தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு விரைவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனங்களை செய்வதற்கு முன்னதாக தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் உட்கட்ட அமைப்பையும் செயல்பாட்டுக்கான வசதிகளையும் வலுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாக உள்ளது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ் தொடர்கிறது)
முக்கியத்துவம்
குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, குழந்தை உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை நடத்துவது, மாநிலத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், தத்தெடுப்பு மையங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நல குழுமம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வது, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம் போன்றவற்றை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற ஏராளமான பணிகள் மாநில குழந்தைகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்சோ சட்ட அமலாக்கத்தை கண்காணிப்பது, கல்வி உரிமைச் சட்டத்தின் மேல்முறையீட்டு மன்றமாக செயல்படுவது உள்ளிட்ட அதிகாரங்களும் குழந்தைகள் ஆணையத்துக்கு உண்டு.
டாக்டர் வீ. ராமராஜ் மாதிரி விதிகள்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு மாநில குழந்தைகள் ஆணையம் செய்வதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகளும் 2012 ஆம் ஆண்டில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய விதிகளும் இல்லை என்பதாகும். தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் வகையில் மாதிரி வரைவு விதிகளை தயாரிக்கும் பணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj One Man Committee) நியமனம் செய்யப்பட்டார். ஒன்பது அத்தியாயங்களில் 27 விதிகளை கொண்ட 28 பக்கங்கள் அடங்கிய மாதிரி விதிகளை (Model Rules) அவர் சமர்ப்பித்த போதிலும் அதனை ஆணைய கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு மாநில குழந்தைகள் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாதிரி விதிகளை தாக்கல் செய்த உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.
சுதந்திரமான அமைப்பு
இப்போதைய விதிகளின்படி ஆணைய தலைவருக்கு ரூபாய் 50,000 மாதாந்திர கௌரவ சம்பளமும் உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்தில் 12 அமர்வுகளுக்கு மட்டும் ஒரு அமர்வுக்கு ரூபாய் ஆயிரம் என்ற வகையில் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. முக்கிய பணிகளை கொண்டுள்ள ஆணையத்துக்கு கௌரவ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருப்பது சரியல்ல என்பதால் மாதிரி விதிகளில் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முழு நேர அலுவலர்களாக இருக்க வேண்டும் என்றும் தலைவருக்கு மூத்த மாவட்ட நீதிபதிக்கு வழங்கும் சம்பள விகிதமும் உறுப்பினர்களுக்கு மாநில அரசின் துணைச் செயலாளர்களுக்கு வழங்கும் சம்பள விகிதமும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு தனியாக செயலாளர் இருக்க வேண்டும் என்றும் தன்னிச்சையான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் ஆணையத்துக்கு அரசு துறையில் பணியாற்றும் ஒருவர் கூடுதல் பொறுப்பாக செயலாளர் பதவியை வகிக்க கூடாது என்றும் மாதிரி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு
தேசிய குழந்தைகள் ஆணையத்திலும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களிலும் உள்ளது போல நிர்வாகப் பிரிவு, கண்காணிப்புப் பிரிவு, புகார்கள் விசாரணை பிரிவு, விழிப்புணர்வு பிரிவு மற்றும் கணக்குப் பிரிவு ஆகிய தனித்தனியாக அமைக்கப்பட்டு அதற்கென போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாதிரி விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் கூட்ட நடைமுறைகள் ஆணையத்தின் கூட்டம் மற்றும் புகார் மீதான விசாரணை நடைமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாதிரி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஆணையம் தன்னிச்சையானதாக மிகச் சிறந்த செயல்பாட்டுடன் கூடியதாக செயல்பட வழிமுறைகள் அந்த விதிகளில் வகுக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் மாதிரி விதிமுறைகள் விதிகளாகப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்திய தேசத்திலேயே முன்மாதிரி ஆணையமாக விளங்கும்.
தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிகளை வலுப்படுத்தி விரைவில் ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கு உரிய விளம்பரத்தை செய்து ஓரிரு மாதங்களுக்குள் நியமனங்களை தமிழக அரசு செய்யும் என்றும் இந்த நியமனங்களுக்கு முன்னதாக ஆணையம் வலுப்படுத்தப்படும் என்றும் நம்புவோம்!
கட்டுரையாளர் முனைவர் பிரபாகர் திருநெல்வேலி பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்.


“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |