Advertisement

விஞ்ஞானிக்கு மரண தண்டனை வழங்கியது சரிதானா? வலைத்தளத்தில் படித்த பிடித்த கதை

ஒரு வழக்கில் ஒரு மதத் தலைவர், ஒரு வழக்கறிஞர், ஒரு இயற்பியலாளர் ஆகிய மூவருக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது.  மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.  “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது. ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். தூக்கு மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை கயிறு நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்!  ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக வழக்கறிஞர், அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது. “நீதி! நீதி! நீதியே வெல்லும்” என்றார்._ கழுத்தை கயிறு நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது. எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால், தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்” என்றார். உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் மரண தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும் மரண தண்டனை இந்த உலகில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்! தெரிந்த உண்மைகளையெல்லாம் உளரிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்!! சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் புத்திசாலித்தனமானது!
வெற்றியடைய எந்த தகுதியும் தேவையில்லை. உங்கள் இதயம் கூறுவதை பின்பற்றி உங்களை உற்சாகமூட்டும் வேலையை செய்பவராக இருந்தால் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். புதிய யோசனைகள் மற்றும் திறனாய்வு சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் மோதல் வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்வரை மௌனமாக காத்திருங்கள். ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலையின் மீது தீராத காதல் வேண்டும். தெளிவான கருத்து பரிமாற்றம் அவசியம். முடிந்தால் உங்கள் தலைவரின் வேலையை சேர்த்து செய்யுங்கள். – மாத சம்பளம் வாங்கி வந்தவர் கோடீஸ்வரராக முடியும் என்பதை நிரூபித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
மற்றவர்களின் சிந்தனையை மதிக்கும்போது நமது புத்திசாலித்தனம்  மேன்மையடைகிறது…மற்றவர்களின் சிந்தனைக்கு கூடுதல் கவனம் கொடுப்பது நமக்கு பாதுகாப்பானது…மற்றவர்களின் எண்ணங்களை பற்றி  கனவு காண்பதும் அனுபவம் சார்ந்தது…மற்றவர்களின் சிந்தனை விளைவை  அதிகமாக எதிர்பார்ப்பதும்சாத்தியமானதுதான்…–  ஜிம் ஜென்டில் Excellence is attained when we care more than others think is wise …Risk more than others Think is safe…Dream more than others think is practical …Expect more than others think is possible…. —  Jim Gentil 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles