சின்னஞ்சிறிய மூன்று நாடுகள் – 121 ஏக்கரில் ஒரு நாடா?
121 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட கிறிஸ்துவ மத - கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கான் சிட்டி (Vatican City) உலகத்தில் உள்ள நாடுகளிலேயே மிகவும் சிறிய நாடாகும். 2023 ஆம் ஆண்டு கணக்கின்படி கணக்கெடுப்பின்படி இந்த நாட்டின் குடிமக்கள் எண்ணிக்கை 764 மட்டுமே.
ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன்
செய்ய வேண்டிய பணியை செய்யாமல் இருத்தல் (omission) மற்றும் செய்யக்கூடாத பணியை செய்தல் (commission), ஊழல் (corruption), சீர்கேடான நிர்வாகம் (maladministration) மற்றும் முறைகேடுகள் (scam) மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விரிவான விவரங்களுடன்.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - அறிவிக்கை எண் 75 முதல் 171 வரை, நாள் 28 -04- 2024 என்ற அறிவிக்கையை பதிவிறக்கம் (Common Instructions to the candidates- (28th April 2024 – pdf file) செய்து முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இறையாண்மை என்றால் என்ன?
இருபத்தோராம் நூற்றாண்டில் இறையாண்மை மற்றும் அதன் உண்மையான அதிகாரங்கள் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள், மனித உரிமைகள் பண்டைய நாடுகளின் அத்துமீறல்கள், உள்நாட்டில் ஏற்படக்கூடிய ராணுவ சம்பந்தப்பட்ட கிளர்ச்சிகள், பிரிவினைவாத இயக்கங்கள் போன்றவைகளால் இந்தியாவின் இறையாண்மையானது சவால்களை சந்தித்து வருகின்றது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வது எப்படி?
அரசு அலுவலர் அல்லது அரசு உதவி பெறும் அமைப்புகளில் அலுவலர் சட்டபூர்வமாக செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறுதல் (omission of duty) அல்லது செய்யக்கூடாத செயலை செய்தல் (commission of unlawful work) போன்றவற்றின் மூலம் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.
காவல்துறையின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்
காவல் நிலையங்கள் போன்றவை இருப்பது மட்டுமல்லாமல் மாநில காவல் தலைமையகத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உளவு பிரிவு அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள். மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் பிரிவுகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) எனப்படும் மத்திய அரசின் உளவு பிரிவும் மத்திய அரசின் வேறு உளவு பிரிவுகளும் எத்தகைய அலுவலகங்களும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய் – தேவை கவனம்
உலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் 18 லட்சம் மக்களும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் 9,16,000 மக்களும் கல்லீரல் புற்றுநோயால் 8,30,000 மக்களும் வயிறு புற்றுநோயால் 7,69,000 மக்களும் மார்பக புற்றுநோயால் 6,85,000 மக்களும் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் கடந்த 1990 ஆம் ஆண்டு 18 லட்சம் மக்கள் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 3 கோடியே 26 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நீதிமன்றங்களின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்
சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் பிரச்சனை ஏற்படும் போதும், தனி நபர்களுக்கு இடையேயும், தனி நபர்களுக்கும் அரசு இடையேயும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயும், ஒரு மாநில அரசுக்கும் மற்றொரு மாநில அரசுக்கும் இடையேயும் பிரச்சனைகள் ஏற்படும் போதும் சட்டப்படி விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அமைப்பாக அரசியலமைப்பால் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் அமைப்பு முறையை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
முதல் நாள் தேர்தல், இரண்டாவது நாள் முடிவு, மூன்றாவது நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றம் .. ஆச்சரியம் ஆனால் உண்மை
தேர்தல் களத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இந்திய வாக்காளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் முதல் நாடாளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் போது வாக்காளர்கள் இந்த ஆணையத்தில் புகார் செய்து நடவடிக்கைகளை அரசின் மீது மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை எந்த வகையில் வழங்கினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆணையத்தில் வாக்காளர்கள் புகார் தாக்கல் செய்யலாம்.
லஞ்சத்துக்கு எதிரான தேசிய அமைப்பான லோக்பாலில் புகார் செய்வது எப்படி?
பிரதம அமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அலுவலர் முதல் கடை நிலை ஊழியர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது. இதனைத் தவிர மத்திய அரசின் வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் அமைப்புகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளையும் வெளிநாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கு மேல் நிதி உதவி பெறும் சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது.