செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
வாழ்க்கையில் வெற்றி பெற வயது தடையல்ல. 46 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் லோக் ஆயுக்தா...
வாழ்க்கையில் வெற்றி பெற வயது தடையல்ல. 46 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து.
லோக் ஆயுக்தா என்றால் ஊழல் ஒழிப்பு, லோக்...
முதல் படைப்பு: யாரிடம் பேசும்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இரண்டாவது படைப்பு: குதிரையிடம் பேசிய வார்த்தைகளை கவனியுங்கள்!
பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர்.
இரண்டு நபர்கள் சந்தித்து கொள்கிறார்கள் ஒருவர்: நீ எங்கே வேலை செய்கிறாய்? மற்றவன்: இன்னாரின் நிறுவனத்தில். அவன் : எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்? இவன்:...
“எனக்கு நேரமில்லை. வாழ்க்கை முடியும் தருணத்தில் நேரத்தை தேடாதீர்” – ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் செலவு செய்து படிக்க...
வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன், இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான், ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள், இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது, ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
முதலாளியின் இதயத்தை காட்டும் கதையை படியுங்கள்! சிந்தியுங்கள்!
“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது. வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான். வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
விடுதி கூறும் கதை: ஒரு மாதத்தில் 28 நாட்களுக்கு மட்டுமே உணவு – ஒரு நிமிடக் கதை படித்து,...
தனியாக வசிக்கும் ஒரு நடுவயதுப் பெண். 12 அறைகள் கொண்ட பெரிய வீடு அவர் வசம் இருந்தது. அந்த வீடுகளை சும்மா வைத்திருப்பதற்கு மாறாக இளைஞர்கள் தங்கும் விடுதியாக. அதை மாற்றினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஒவ்வொரு அறையிலும் இரண்டு கட்டில்கள் போடப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அனைத்து அறைகளும் நிரம்பின. சில நாட்கள் சென்றதும் அந்த பெண்மணிக்கு வேறு ஒரு யோசனை வந்தது.
தமிழகத்தில் வாழும் வட இந்தியர்களின் ஆதரவின்றி தமிழக முதலமைச்சராக முடியாதா? அனைவரும் ஒரு நிமிடம் படித்து தெரிந்து கொள்ளுமாறும்...
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் வெளி மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளராக பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். வெளிமாநிலத்தவர்கள் வட இந்தியர்கள் எதிர்காலத்தில் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள். நிலமற்ற அகதிகளாக தமிழர்கள் மாறி அடிமையாகி நாடோடியாக திரிவான். வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கினால் தமிழகத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். வட மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் – மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், இந்திய அரசு – தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
தாய்ப்பால் ஊட்டாத பெண்கள் பாதிக்கும் மேல்?,கோவிலுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகள், 73 ஆயிரம் வழக்குகளில் நீதிமன்ற ...
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே அந்த நாடுகளின் தற்போது உள்ள எல்லைப் பகுதியில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோவில்களின் சுவர்களில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவற்றின் புராண சிற்பங்கள் நிறைந்துள்ளது. தாய்லாந்திலும் கம்போடியாவிலும் புத்த மதம் வலுவாக உள்ள போதிலும் கம்போடியாவில் இந்து மத சம்பிரதாயங்கள் பலராலும் பின்பற்றப்படுகின்றன. பிரான்சின் ஆதிக்கத்திலிருந்து கம்போடியா விடுதலை பெற்ற போது கம்போடியாவின் எல்லை மறு வரையறை செய்யப்பட்டது.
* மாணவனிடம் மாட்டிக்கிட்ட அப்பாவி டீச்சர்- சிரிக்க சிந்திக்க அரை நிமிட கதை. * தற்காலிக அரசு ஊழியருக்கு...
கலகப்பாவின் வீடு மற்றும் அவர்கள் அவருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸாரால் சோதனைகள் நடத்தப்பட்டன.. சோதனை முடிவில் நகை பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரூபாய் 15 ஆயிரத்தில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தவரிடம் நான்கு வீட்டுமனைகள், 24 வீடுகள், 40 ஏக்கர் விவசாய நிலம், கிலோ கணக்கில் வெள்ளி மற்றும் தங்க நகைகளும் கார்களும் இரு சக்கர வாகனங்களும் இருந்துள்ளது.
கட்சிகள் களம் மாறுகின்றனவா? காணாமல் போன 23,000 பெண்களின் நிலைமை என்ன? பல்கலைக்கழகங்களுக்கு விமோசனம் உண்டா?, ட்ரம்ப்.. ட்ரம்ப்.....
விஜயும் சீமானும் வரும் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். சீமானுக்கு தனித்து நிற்பதில் ஏதாவது லாபம் இருக்கலாம் என்றாலும் முதன்முதலாக தேர்தலில் களம் இறங்கும் விஜயும் தனித்தே நிற்பது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் அவரிடம் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. இருந்த போதிலும் தனிப்பாதையில் தனக்கு பலனளிக்கும் என்று விஜய் எண்ணுவார் போல. என்ன லாபம் என்பது கட்சியின் தலைமைக்கு தானே தெரியும்
இயற்கை அழகு சூழ்ந்த தமிழகத்தின் இந்த கிராமத்துக்கு செல்ல அரசு அனுமதி வேண்டும் எந்த ஊர் தெரியுமா?
சாலை மார்க்கத்தில் தெங்குமரஹாடா கிராம நுழைவாயிலாக மாயாறு ஓடுவதால் ஆற்றின் ஒரு கரையில் பேருந்து நிறுத்தப்பட்டு விடும். ஆற்றை பரிசல் மூலமாக கடந்து சிறிது தூரம் நடந்து இந்த கிராமத்தை அடைய முடியும். எஸ்யூவி கார், ஜீப் மூலமாக தண்ணீரின் குறுக்கே வாகனத்தை ஒட்டி ஆற்றை கடந்து கிராமத்தை அடையலாம். இந்த கிராமத்தில் விளையும் பொருட்களை ஆற்றில் லாரிகளை ஓட்டி எடுத்துச் செல்கிறார்கள். முதலைகள் அதிகமாக உள்ள மாயாற்றில் எப்போது நீர்வரத்து அதிகமாக இருக்கும் எப்போது குறைந்து காணப்படும் என்பது அந்த உள்ளூர் மக்களாலே கணிக்க முடியாததாக உள்ளது. ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள மாயாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது மக்கள் ஊருக்குள்ளேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.