செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்!   ●   நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் “நுகர்வோர் பூங்கா” படியுங்கள்!   ●   கட்டணமில்லாமல் படிக்க பொதுத்தளமாக வெளியிடப்படும் “பூங்கா இதழ்” மற்றும் “நுகர்வோர் பூங்கா” - இணையதள இதழ்களுக்கு ஆதரவு தாருங்கள்! விவரங்களுக்கு “நாங்கள்” பகுதியை படியுங்கள்!
Friday, March 13, 2026
spot_img

வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,), இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பில் ஒரு தேர்வுத்தாளாகவும் பள்ளிகளில் ஒரு பாடமாகவும் வாக்காளரியல் அறிமுகப்படுத்த வேண்டும்.

எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் முதல்வர் கீதா தலைமையில் நடைபெற்றது. 

1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தா  உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ்.   அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக உள்ள வெளிநாட்டவர்களை பற்றி படிக்கிறோம். வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார். (தொடர்ச்சி கீழே)

வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் பற்றிய முறையான, அறிவியல்பூர்வமான கல்வியே வாக்காளரியலாகும் (Voterology). உண்மையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதையும், நல்லாட்சி, உலக அமைதிக்கான வழியையும் நோக்கமாகக் கொண்ட வாக்காளரியலின் கோட்பாடுகளை பொதுமக்களுக்கு பரப்புவதே வாக்காளரிலிசம் (Voterologism) என்று கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்   தெரிவித்தார்.

உலக நாடுகளில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள்   பரவ தொடங்கிய போது அரசியல் அறிவியல்   கல்வி தனித்துறையாக தோன்றியது. அரசியல் அறிவியல் கல்வி பிரிவில் பல உட்பிரிவுகள் இருப்பதைப் போல வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வி  கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அறிவியலின் உட்பிரிவாக இருந்து வருகிறது. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் தற்போது தேர்தல்கள் மூலம் மக்களாட்சி நடத்தப்படுகிறது. இன்றைய உலகளாவிய தேர்தல் முறை மக்களாட்சியில் வாக்களிக்கும் உரிமை அச்சாணியாக செயல்படுகிறது. இத்தகைய சமூக மாற்றத்திற்குப் பிறகும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் கல்வி அரசியல் அறிவியலின் ஒரு பகுதியாக தொடர்வதை மாற்றி வாக்காளரியலை தனித்த கல்வித்துறை ஆக்க வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ்   தெரிவித்தார்.

ஆட்சி மற்றும் அதிகார அமைப்புகள், அரசியல் நடவடிக்கைகள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் சிந்தனை மற்றும் நடத்தை, மற்றும் தொடர்புடைய அரசியலமைப்புகள் மற்றும் சட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கி பரந்த கல்வி பிரிவாக விளங்குவது அரசியல் அறிவியல்.  கடந்த காலங்களில் பரந்த படங்களைக் கொண்டுள்ள கல்வி பிரிவுகளில் இருந்து அதன் உட்பிரிவுகள் பிரிந்து தனித்த கல்வி பிரிவுகளாக மாறி உள்ளன. இதைப்போலவே, பரந்த பகுதிகளை கொண்ட வாக்காளரியலை தனித்த கல்வித்துறையாக உலகில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் அங்கீகரிக்க வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.

பள்ளிகளில் ஒரு பாடமாகவும் இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வுத்தாளாகவும் வாக்காளரியல் கல்வி  இருக்க வேண்டும். வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டத்தை பல்கலைக்கழகங்கள்  வாக்காளரியலின் அடிப்படைகள், தேர்தல் வரலாறு, தேர்தல் நிர்வாகம், ஒப்பீட்டு தேர்தல் முறைகள், தேர்தல் சட்டம் மற்றும் நீதி,   வாக்காளர்களுக்கு அதிகாரம் அதிகாரமளித்தல் மற்றும் அறிவு கட்டமைத்தல், அரசியல் இயக்கங்கள் மற்றும் உத்திகள், வாக்காளர் உளவியல் மற்றும் சமூகவியல், வாக்காளர் ஆதரவு இதழியல், ஜனநாயகம், ஆட்சி மற்றும் அமைதி குறித்த வாக்காளரியலின் பார்வை தேர்தல் கணிப்பியல் (Psephology), வாக்காளரியல் ஆராய்ச்சி முறையியல் ஆகியவை வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டத்துக்கான பாடங்களாக இருக்க வேண்டும் இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.

வாக்காளரியலின் கொள்கைகள்

“வாக்கு” என்பது ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலகப் போக்குகளையும் தீர்மானிக்கும்  சக்தியாகும். எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். வாக்காளர் அறியாமை மற்றும் ஊழலை தேர்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கடமை குடிமக்களுக்கு உள்ளது.  சட்டமன்றம், செயல் துறை அரசாங்கம், நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் தேர்தல் நிர்வாக அமைப்புகள் அரசாங்க அதிகாரத்தின் நான்காவது கிளையாக இருக்க வேண்டும் என்பவை வாக்காளரியலின் முதல் ஐந்து கொள்கைகள் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.

தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கான நெறிகாட்டு அமைப்பு, வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆணையம், தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்கள் ஆகியன தேர்தல் நிர்வாக அமைப்புகளின் பிரிவுகளாக இருக்க வேண்டும். தேசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் தகவலறிந்த வாக்காளர்களை உருவாக்குவதற்கும் சர்வதேச சட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். உண்மையான ஜனநாயகத்துக்கும் நாட்டின் நல்லாட்சிக்கும் உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும். வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை (Academic, Research and Practice) தனிக்கல்வித்துறையாக உருவாக்க வேண்டும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்ப வாக்காளரிலிசத்தை இயக்கமாக நடத்த வேண்டும் என்பவை வாக்காளரியலின் மற்ற ஐந்து கொள்கைகள் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.

Courtesy: Hindu Tamil
Courtesy: Dinamani
Courtesy: Dinathanthi
Courtesy: Dinamalar
Courtesy: Kalaikathir
Courtesy: Dinakaran
Courtesy: Indian Express

பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Voterology, the cornerstone of democracy, should be made a separate academic discipline – Tamil Nadu Lok Ayukta Member Dr. V. Ramaraj’s opinion

Why should Voterology be taught as a separate discipline? A seminar was held at Krishnagiri Government Women’s Arts College, presided over by Principal Gheetha. In 1996, Dr. V. Ramaraj, a member of the Tamil Nadu Lokayukta, has coined the words Voterology and Voterolism, defined them, and framed ten theories for them. We are studying about foreigners who are the fathers of many academic disciplines including political science and sociology. Dr. V. Ramaraj, who introduced the philosophy of Voterology and the idealogy of Voterolism. It is a matter of pride for Tamil Nadu that he is father of Voterology, Principal said.

Speaking at the seminar, Dr. V. Ramaraj, a member of the Tamil Nadu Lokayukta, said that Voterology is the systematic and scientific study of votes, voters, and elections and Voterologism is the dissemination of the principles of voterology to the public, which aims to protect true democracy, good governance and the path to world peace.

Political science was not a separate academic discipline when the world was ruled by monarchies. When monarchies moved towards democracy, political science started to take shape in the latter half of the 19th century and began to separate itself from political philosophy and history. When political science began to develop, monarchies persisted in many countries around the world, and many countries moved towards democratically based systems of government. The situation today is not the same as it was in many countries at the time of the birth of political science. More than 100 years have passed since the birth of political science, and now, except for a few countries in the world, democracy is carried out through elections. While political science developed largely during the era of monarchies, the current era is characterized by widespread democracy through elections. The right to vote serves as the cornerstone of today’s global democratic environment. Even after such a major societal change, voterology is still   a part of political science. Voterology should be an independent subject in schools, colleges, and universities, Mr Ramaraj said.

Contemporary university political science departments have segmented the discipline into various wide areas, including political theory, government and power analysis, public law, constitutional studies, public policy, domestic politics, comparative politics, international relations, and public administration. Similar to the different sub-fields in political science, the study of vote, voters, and elections is also a sub-discipline within political science. Nonetheless, the domain of vote, voter, and elections encompasses a broad range of subjects. It would be better that Voterology to be a separate academic discipline for learning, teaching, and research, rather than being a sub-discipline of the political science, which has many sub-disciplines, Mr Ramaraj Added.

Voterology should be a lession in schools and at least one paper for undergraduate (B.A.) degree students. Universities should introduce a Master of Arts (M.A.) degree in Voterology. Dr. V. Ramaraj stated that the subjects of the Master of Science (M.A.) in Voterology should include the Understanding Voterology, History of Election, Electoral Administration, Comparative Electoral Systems, Electoral Law and Justice, Voter Empowerment and Knowledge Building, Political Movements and Strategies, Voter Psychology and Sociology, Pro-Voter Journalism, Voterology’s perspective on democracy, governance and peace, Psephology and Voterological research methodology. Universities and educational institutions around the world should take steps towards this, Mr Ramaraj said.

Principles of Voterology

Explaining the first five theories of Voterology, V. Ramaraj said, “Vote” is the force that determines the nature of democratic government and world trends. Voters should reject those who try to seize power at any cost. Above all, voters are the foundation of democracy. Citizens have a duty to root out voter ignorance and corruption from the electoral process.  The election management bodies should be the fourth branch of government with constitutional status equal to the legislature, the executive government and the judiciary.

He explained the   second five principles of Voterology,   the Election Commission to conduct elections, the Regulatory Board   to regulate political parties, the Voters Empowerment Commission to protect the rights of voters, and the Special Election Tribunals to conclude election cases within a period of six months should be the divisions of the election management bodies. The United Nations should create international laws and institutions to improve national election management systems and create informed voters. Voterology is the best path to true democracy, good governance of the country and peace in the world. Academic, Research and Practice of Voterology should be created as a separate academic field and Voterologism should be conducted as a movement to spread principles of voterology.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles