Wednesday, June 25, 2025
spot_img

அதிமுக, பாமக, திமுகவில் என்ன நடக்கிறது? போதை பொருள் வாங்கிய நடிகர் கைது. இன்னும் தொடருமா நடிகர்களின் கைது வேட்டை? போர் நிறுத்தம் தொடருமா? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி! 

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “வாரம் ஒருமுறை வருவது அரிது நேற்றுதான் வந்தீர்கள் இன்றும் வந்து விட்டீர்களே! மகிழ்ச்சி சாமி”என்றதும் “வந்தால் மகிழ்கிறாய் பிறகு ஏன் இப்படி கேட்கிறாய்” என செல்லமாக கோபித்துக் கொண்டுகருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

“ஈரான் – இஸ்ரேல் போர் நீடித்தால் உலகப் போராக மாறும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று நேற்று பேசினோம். ஆனால், எதிர்பாராத திருப்பமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்த உடனே ஈரான் தாங்கள் போர் நிறுத்தத்துக்கு எந்த உடன்படிக்கையிலும் கையொப்பம் செய்யவில்லை என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும் தெரிவித்தது. உண்மையில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை. இஸ்ரேலும் தங்களுக்கு போரில் பலத்த அடி கிடைக்கும் என்று நினைக்கவில்லை மேலும், போர் தொடர்ந்தால் இன்னும் சில நாட்களுக்கு மேல் இஸ்ரேலால் தாக்குப் பிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அமெரிக்க அதிபர் மூலம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது. ஈரானோ அமெரிக்க அதிபர் போரை நிறுத்துமாறு கெஞ்சியதாக அறிவித்துள்ளது. ஆனால், கீழே விழுந்தாலும் மண்ணில் மீசை ஒட்டவில்லை என்பது போல தான் போரை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் கொக்கரிக்கிறார். போரை தொடங்கியது அவர்கள், அவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும் என்று ஈரான் கூறிவந்தது வந்ததோடு அதனை சாதித்து விட்டது. எது எப்படியோ உலகம் அமைதியாக இருந்தால் சரி” என்றார் வாக்காளர் சாமி. 

“என்ன சாமி நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே” என்றேன் நான். “ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்த இருவர் கடந்த 17ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படியே நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருள் பலமுறை வாங்கியதாக தெரியவந்துள்ளது. நடிகரை விசாரணைக்கு அழைத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் போதை பொருள் பயன்படுத்தியது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில நடிகர், நடிகைகள் இந்த போதை பொருளை வாங்கி இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இந்த விசாரணை தொடர்ந்தால் இன்னும் சில நடிகர் நடிகைகள் கைதாகலாம் என்று கருதப்படுகிறது. இந்த போதைப் பொருளின் ஒரு கிராம் விலை ரூபாய் 12,000 என்று கூறப்படுகிறது. இத்தகைய போதைப் பொருள்களை பயன்படுத்தி பார்ட்டி கொடுக்கும் கலாச்சாரம் வளராமல் தமிழகத்தில் இத்தகைய போதை பொருட்களை (drugs) முற்றிலும் ஒழிப்பது அவசியமாகும்” என்றார் வாக்காளர் சாமி.

“முருக பக்தர்கள் மாநாட்டை கவனித்தீர்களா? சாமி” என்றேன் நான். “இந்த மாநாட்டிற்கு கூடிய கூட்டம் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருந்ததாக கருதப்படுகிறது இருப்பினும் பலர் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆறுபடை வீடுகளின் அமைப்பை பார்ப்பதற்கு பொருட்காட்சி போல வந்து சென்றுள்ளனர் என்றும் மாநாட்டுக்கு வந்தவர்கள் மாநாடு நடத்திய அமைப்பிற்கு ஆதரவான பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பவர்களாக என்று தெரியாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மாநாட்டில் திராவிடத்தை அவதூறாகும் மாநாட்டில் திராவிடத்தையும் அதிமுகவின் தலைவர்களான அண்ணா எம்ஜிஆர் போன்றவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் திராவிடத்தையும் அதிமுக தலைவர்களையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் மாநாட்டுக்கு அழைத்ததால் சென்றோம், இவ்வாறு நடக்கும் எனில் புறக்கணித்து இருப்போம் என்றும் அதிமுக தரப்பிலும் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தினகரன் தனது பங்குக்கு மாநாட்டு நிகழ்வுகளை தவறு என சுட்டிக்காட்டி உள்ளார். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் இப்போது அதிமுக பாஜக கூட்டணியில் பிரச்சனைகள் முளைக்க தொடங்கிவிட்டது. கோவையில் ஆர் எஸ் எஸ் தலைவர் கலந்து கொண்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு ஆதின நிகழ்ச்சிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் வருகை புரிந்திருந்தார் இந்த நிகழ்ச்சிக்கு தானும் அழைக்கப்பட்டேன், ஆதீன நிகழ்வில் கலந்து கொண்ட போது மரியாதை நிமித்தமாக ஆர்எஸ்எஸ் தலைவருக்கு பரிசு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.

“பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு அறுபதாம் திருமண  நிகழ்வை கவனித்தீர்களா! சாமி” என்றேன் நான். ஒவ்வொரு ஆண்டும் தமது தாய் தந்தையரின் திருமண நாளுக்கு தைலாபுரம் தோட்டத்துக்குச் செல்லும் அன்புமணி ராமதாஸ் முக்கியமான நிகழ்வான அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்வில் மிஸ்ஸிங் என்பதுதான்பேசு பொருளாகும். அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைகூட்டியுள்ளார். இதில் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று அந்தக் கட்சியினரே பேசி கொள்கிறார்கள். விடாது கருப்பு என்பது போல இப்போதைக்கு ஓயாது பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் அப்பா மகன் சண்டைஅன்புமணி பாஜக கூட்டணிகள் இணைய விரும்புகிறார் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், ராமதாஸோ திமுக கூட்டணிக்கு நூல் விடுவது போலவும் அல்லது விஜய்யுடன் கூட்டணி அமைக்க திட்டமிடுவதாகவும் பேசப்படுகிறது. ஒருவேளை இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் உடைந்து விடுமோ என்று அக்கட்சியின் தொண்டர்கள் அஞ்சுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.

“ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அரசை விமர்சிப்பது நல்ல ஜனநாயக பண்பு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் சாமி” என்றேன் நான். “ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தை கட்சியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டை பொதுவெளியில் பேசத் தொடங்கி விட்டனர். தற்போது வைகோவும் தங்களது மதிமுகவுக்கு அதிக இடங்கள் சட்டமன்றத் தேர்தலில் வேண்டுமென்று பேசத் தொடங்கியுள்ளார். கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் நிலையில் இவர்களை திமுக எப்படி சமாளிப்பது என்று என்ன திட்டத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் ஆளும் கட்சியில் உள்ள கூட்டணியில் வெளியில் செல்லாது என்றே கருதப்படுகிறது இருப்பினும் இதனை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று பாஜகவும் அதிமுகவும் காய் நகர்த்துகின்றனர்” என்றார் வாக்காளர் சாமி.

“கலாநிதி மாறன் தயாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியது என்ன ஆயிற்று சாமி” என்றேன் நான். “கலாநிதி மாறன் மோசடி செய்து விட்டதாக தயாநிதி மாறன் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதை தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுக்கள் தவறானது என்று சன் நெட்வொர்க் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  இருந்தாலும், இதில் ஏதாவது குட்டையை குழப்ப முடியுமா? என்று அமலாக்கத்துறை கணக்கு போடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்று என்ற நினைப்பை முதன்மையானவர் தரப்பு தீவிரம் காட்டக்கூடும். கலாநிதி மாறனுக்கும் தயாநிதி மாறனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தேர்தலின் போது எதிரொலிக்க கூடாது என்று திமுக தரப்பில் கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.

“தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (கமிஷனுக்கு) தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. வழக்கு நிலுவை காரணமாக நீண்ட நாட்களாக இந்த பதவியில் யாரும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் வழக்கு முடிவடைந்ததை தொடர்ந்து இவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் இடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஏற்படுத்தி உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன்பே விரைவில் இவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று நான் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா? சிஷ்யா” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: அரசியல் களம் என்றாலே சூடு இருக்க தானே செய்யும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles