Advertisement

உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன – வலைதளத்தில் படித்ததில் பிடித்தது

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன். நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையாக இருந்தார். அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார். நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன். அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி குறைவாகவே தெரிந்தது.

நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம். என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது. பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன். அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது ‘2001 ஹோண்டா’காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார். அது பழையதாகத் தோன்றியது.

மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன். எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும். நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார். எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார். அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன். நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
“உணவகங்கள் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்பது குறித்த தங்கள் கருத்துக்களை நுகர்வோர் பூங்காவிற்கு அனுப்ப இறுதி நாள்: 18-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  Click Here!  
 
மறைந்து வரும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் எவை?” என்பது குறித்த தங்கள் கருத்துக்கள் பூங்கா இதழுக்கு அனுப்ப இறுதி நாள்: 18-01-2025. கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  Click Here!
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார். நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன். அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார். ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன். அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார். அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். “விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நான் அதிர்ஷ்டசாலி. நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம். அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள். கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.

அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த எஸ்டேட்டில் பணியாற்றும் ஒருவரை பார்த்து அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம். எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன். நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.

மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது. மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார். அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார். அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது. அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார். அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார். இந்த பெரிய தோட்டமும் (எஸ்டேட்) அவருக்குச் சொந்தமானது என்றார்.

எப்போது “சார்” என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை… எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது. பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். ஒரு பெரிய பாடம். தோற்றம் ஏமாற்றும். என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.

வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள். அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது. கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன். கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்! உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன!

பூங்கா இதழ் (The News Park) கருத்து: மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்.!

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
 
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
 
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
 
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles