siruvapuri murugan temple near chennai

சிறப்புமிகு சிறுவாபுரி முருகன் ஆலயம்

சிறுவாபுரி முருகனின் திருத்தலத்தில் ஒரு திருப்புகழ் பாடினால் சொந்த வீடு, தொழில், சிறந்த குடும்பம், செல்வம், மோட்சம் ஆகிய ஐந்து பெரும் பலன்களை அடையலாம் என முருக பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.   முருகனின் திருவடியை சரணம் என எண்னும் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது சிறுவாபுரி சென்று அவர் புகழ் பாடி முருகனின் திருப்பாதங்கள் பணிந்து இன்புற்று நலமாக வாழலாம்.
house plants Science or spirituality?

வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் அறிவியலா? ….. ஆன்மீகமா?

வாஸ்து ரீதியாக ஸ்பைடர் பிளான்ட், அதிர்ஷ்ட மூங்கில் மற்றும் இன்னும் பல செடிகளை கூறுகின்றனர். இவ்வாறு அறிவில் கூறும் கருத்துக்களையும் ஆன்மீகம் கூறும் தகவல்களையும் நாம் கேட்கும் பொழுது மனதில் சற்று குழப்பம் ஏற்படும்.  எது நமக்கு நல்லது? என்ற   கருத்துக்களை  அறிவியலோ, ஆன்மீகமோ எது கூறினாலும் அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை நாம் வாழ்க்கையில் செயல்படுத்துவதே சிறப்பானதாக அமையும்.
different approach accepting mentality

வேறுபட்ட கண்ணோட்டம் – ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்க்கும் வலைத்தளத்தில் படித்த கதை

எந்த நிகழ்ச்சியோ அல்லது விஷயமோ அவற்றிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு – நேர்மறை அம்சமும், எதிர்மறை அம்சமும். அதை  நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பொறுத்து, அது நம்மை சார்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையின் விதியும் அதைப் பொறுத்துதான் அமைகிறது. எல்லாவிதமான   இக்கட்டான சூழ்நிலைகளிலும்,ஏற்றுக் கொள்ளுதல் என்னும் உணர்வு  இருந்தால்,அது  மிக மோசமான விளைவுகள்  எதுவுமே இல்லாமல்  காப்பாற்றி,நம்மை  முன்னோக்கி  செல்ல வைக்கும்.
upsc direct recruitment for join secretary

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான பதவிகளில் நேரடி நியமனம். இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்தா?

இவ்வாறு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நகர்வுகள் எதேச்சையாக நடக்கிறதா? என்பதை பாதிப்புக்கு உள்ளாகும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானிக்கட்டும். நீயும் நானும் பேசி என்ன உபயோகம்?” என்று டாப்பிக்கை முடித்தார் வாக்காளர் சாமி.
Tamil Nadu Politics current scenario

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுகின்றனவா? சிறப்பு செய்தி தொகுப்பு & கடந்த ஏழு நாட்கள் (11-18 ஆகஸ்ட்...

தற்போது நிலவும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாற்றம் கண்டுள்ளனவா? என யோசிக்க வைப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எவ்வாறு இருப்பினும் 2026 தமிழக சட்டமன்ற களத்தில் திமுக, அஇஅதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் ஆகிய    நான்கு தலைமைகளில் நான்கு கூட்டணிகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எந்த எந்த கூட்டணியில் எந்த எந்த கட்சிகளோ? 
News Facts Check Question Jokes

பிரதமர் தவறான புள்ளி விவரத்தை வழங்கினாரா? எதிர் கட்சித் தலைவருக்கு அவமரியாதையா?+ 5, சிரிக்க போனசாக 12 ஜோக்ஸ்!

இந்தியாவுடன் நல்ல நட்பில் இருந்த மாலத்தீவு தற்போது இந்தியாவை விட்டு விலகிச் சென்று சீனாவுடன் உறவு காட்டுகிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று வந்தார். இதன் பின்னர் அதிரடி வியூகத்தால்   28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மாலத்தீவு என்ற   தகவல் சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. மக்களிடையே இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறந்தது என்பதை காட்டுவதற்கு இத்தகைய தகவல் பரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையில்  எந்த ஒரு தீவையும் மாலத்தீவு  இந்தியாவின் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கவில்லை என்பதுதான் உண்மையான சங்கதியாகும். பொய்யை உரக்கச் சொன்னால் நம்பி விடுவார்களோ?
india needs second freedom war

தேவை மக்களுக்கான இரண்டாம் விடுதலைப் போர்

வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடு இல்லாமை, வேலையில்லாமை, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவதற்கான இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இதுவாகும்.  அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த போரில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
Bio diversity red list rare animals

இன்று அழியும் வனவிலங்குகள் – பல்லின உயிர் சுழற்சி  தடைபட்டால் நாளை என்ன நடக்கும்?

1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) என்பது அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். 45, 300 க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர உயிரினங்கள் அழிந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்த அமைப்பு தெரிகிறது. இந்த சிவப்பு பட்டியல் என்பது உலகின் பல்லுயிர் ஆரோக்கியத்தின் முக்கியமான குறிகாட்டியாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் உயிர் வாழ தேவையான பிராணவாயு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு மனித குலத்துக்கு மிகுந்த ஆபத்தாக அமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
2024 Olympics Indian Achievements

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மகத்தான சாதனை – எப்படி தெரியுமா?

ஒலிம்பிக்கில் இந்தியா மகத்தான வெற்றி பெறும் 145 கோடி மக்களின் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிற்கு கிடைக்காமல் வேறு யாருக்கு வெற்றி கிடைத்து விடும். இந்தியா உலகிலேயே நிலப்பரப்பில் ஐந்தாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு. இந்தியாவுக்கு வல்லரசு நாடுகள் வரிசையில் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று வீர வசனம் பேசினால் மட்டும் போதாது.
last week news and questions

கடந்த ஏழு நாட்கள்:  தமிழக ஆளுநர் எவ்வாறு பதவியில் தொடர்கிறார்? அ.இ.அ.தி.மு.க- ல் பிளவு ஏற்படுமா? உள்ளிட்ட செய்திகளும்...

தமிழக ஆளுநரின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவரால் ஆளுநரின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட்டதாகவோ அல்லது ஆளுநரை மீண்டும் நியமித்து உத்தரவிட்டதாகவோ அதிகார தகவல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து பதவி வகித்து வருவது எப்படி? என்று சிலர் வினா எழுப்பி உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.