நாம் நாத்திகரா? ஆத்திகரா? என்பது முக்கியமில்லை + ஹோட்டலில் ரூம் தரவில்லை என்பதற்காக…
மழை எவ்வாறு பெய்கிறது இது ஒரு கேள்வி. படிப்பறிவில்லாத ஒரு ஆத்திகரை கேட்டால் மேலிருந்து ஆண்டவன் குளிக்கிறான் அதுதான் மழை. எல்கேஜி மாணவனை கேட்டால் வானத்துல தேங்கி இருக்கிற தண்ணீர்பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பான். பத்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாக பொழிகிறது என்பான். ஒரு கல்லூரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் பட்டதாரி மாணவனுக்கு சொன்ன விளக்கமும் போதுமானதாக இராது .
கிணற்றைதான் விற்றேன், நீருக்கு பணம் தர வேண்டும் என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு.., பில்கேட்சை விட பணக்காரர் யார் தெரியுமா?...
நண்பர் ஒருவர் நாட்டுப் பசு மாடு வாங்க வேண்டும் என நினைத்தார். பசுவைப் பற்றி முழுவதும் அறிந்த ஒருவரை தேடிப்பிடித்து, பசு வாங்குவதற்கான நல்ல நாள், நேரம், சகுனம் எல்லாம் பார்த்து, மாட்டினுடைய நிறம், அதனுடைய சுழி, அதனுடைய கொம்பு அமைப்பு என எல்லாவற்றையும் கவனித்து கடைசியில் பசுவும் வாங்கினார்.
அவர் எதிர்பார்த்ததை விட பாலும் நிறையவே கிடைத்தது. ஆனால்,
மனித உரிமைகள் கமிஷனை பற்றி பெரும்பாலும் தெரியும். உங்கள் மாவட்டத்திலேயே உள்ள மனித உரிமை நீதிமன்றத்தை பற்றி தெரிந்துள்ளீர்களா?
ஆணையங்களைப் போல் அல்லாமல் தண்டனை வழங்கும் அதிகாரங்களைக் கொண்ட மனித உரிமை நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். முதலாவதாக, மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனலாம். இரண்டாவதாக மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க மாவட்ட அளவில் தனித்த காவல் அமைப்புகள் இல்லை என்பதாகும். மூன்றாவதாக, மனித உரிமை நீதிமன்றங்களின் நடைமுறைகள் தெளிவாகவும் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் உள்ளதா? .....
பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கல்வி நிலையங்களில் ஊழல் ஒழிப்புக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் –...
அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்களை தமிழகம் முழுவதும் வலுப்படுத்த வேண்டும் இந்த சங்கங்கள் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிறப்பாக படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் மாணவர் சங்கங்களை மக்கள் தானாக முன்வந்து ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
கணவன் மனைவி என்றால் இப்படித்தானோ! ஒரு நிமிட கதையை படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!
எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார். அவன், அந்தக் கணவனை ஏமாற்ற, “கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம்” என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
கவலையைப் பற்றி கவலைப் படாதே! ஒரு நிமிடம் படிக்கலாமே! + தெரிந்து கொள்ளுங்கள் ஜூலை – 17 –...
சில பேருக்கு கவலைப்படுவதற்கு ஏதாவது இல்லை என்றால் கவலை அடைகிறார்கள். இன்னும் சிலரோ கவலைப் படுவதற்கு முன்பே கதறி அழுவார்கள். விருந்தாளியாக நுழையும் கவலை வெகு சீக்கிரத்தில் எஜமான் ஆகிவிடும். கவலைப்பட்டு கவலைப்பட்டு பழக்கத்தால் மனதுக்கு கவலை ஒரு நோயாகவே ஆகி விடுகிறது.
காதல் ஜோடி கொலை. தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம். காவல்துறையின் மீது நடவடிக்கையை தேவையா? பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும்...
வழக்கின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது நமக்கு எழுந்துள்ள மூன்று கேள்விகளுக்கு சரியான தீர்வு தேவை என்பது எதிர்பார்ப்பாகும்.
01. காவல்துறையினர் முழுமையாக சரியாக புலன் விசாரணை செய்ய தவறுவதால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்வதற்கு செய்யப்படும் போது காவல்துறையினரின் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
02. ஒருவர் மீதான குற்ற வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறும்போது அவர் நீண்ட நாட்கள் சிறைச்சாலையில் இருந்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட வாழ்க்கைக்கான உரிமை பிரச்சனைக்கு எத்தகைய நிவாரணங்களை வழங்குவது? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
03. குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது குடும்பத்தினருக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.
தங்கத்தைப் பற்றிய தெரிந்த மற்றும் தெரியாத உண்மைகளையும் ஏமாற்று வர்த்தக நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்!
தங்க ஆபரணங்கள் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஏற்பட்டதாக கூறி சேதார தங்கத்துக்கான பணத்தை வாடிக்கையாளரிடம் வசூலிப்பதில் மோசடியான நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. கற்கள் பதிக்கப்படாத நகைகளில் 3.5 சதவீதத்துக்கு மேலாக சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. இதைப்போலவே பிஸ்கட், பதக்கங்கள் போன்றவற்றில் 1.25 சதவீதத்துக்கு மிகாமல் சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. சில நாடுகளில் சேதாரத்துக்கான தொகை என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஏனெனில், தற்போதைய நவீன தங்க ஆபரணங்கள் உற்பத்தியில் சேதாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. இதனால், சேதாரம் என்ற பெயரில் தங்க நகை கடைக்காரர்கள் பணத்தை வசூலிப்பது சரியானது அல்ல என்று பலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தர்க்க ரீதியாக (logic) ஏற்புடையதாகவே உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றனவா? 75 வயது நிறைவடைந்ததும் பிரதமருக்கு ஓய்வா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!...
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 46 சேவைகள் மற்றும் நகர்புறங்களில் 13 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 43 சேவைகள் ஆகியவற்றை விரைவாக வழங்கவும் குடிமக்களின் குறைகளை அறியவும் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை நடத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கியுள்ளார். இத்தகைய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் புகார் மீது 45 நாட்களில் முடிவு காணப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினால் அந்த பெருமை தமிழக முதலமைச்சரை சேரும். புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி மாநில சேவை உரிமை ஆணையம் போன்ற புதிய அமைப்பு ஏற்படுத்துவதில் நிதிச் சுமை போன்ற சிரமங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சேவை உரிமை அலுவலர் மற்றும் குடிமக்களின் குறைதீர் அலுவலரை நியமித்து மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வழி வகுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான மேல்முறையீட்டு மன்றமாக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை அறிவிக்கலாம். கடந்த தேர்தலுக்கு முன்பாக சேவை உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்படும் என்றும் திமுக கூறிய நிலையில் மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்றார் வாக்காளர் சாமி.
பள்ளிகளில் “ப” வடிவ இருக்கையில் உள்ள நன்மைகள் மற்றும் சிரமங்கள் + நூறு ரூபாயில் புற்று நோயை அழிக்க,...
இத்தகைய வரிசை முறை மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடமிருந்து சமமான கவனம் கிடைப்பதும் கிடைப்பதில்லை என்றும் கருதப்படுகிறது. இதனை மாற்றும் நோக்கத்துடன் அரை வட்ட வடிவ வடிவில் மாணவர்கள் இருக்கை பள்ளி வகுப்புகளில் இருப்பது போன்று ஒரு படம் கேரளாவில் வெளியானது. இந்த படத்தின் மூலம் பள்ளி வகுப்பறை இருக்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் “ப” வடிவ இருக்கை முறையை பள்ளி வகுப்புகளில் ஏற்படுத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.











