Theme: self-improvement thoughts, Image by “The News Park”

1.யாரிடம் பணம் தங்காது?,2. பிறரை வசியம் செய்திட வேண்டுமானால்…, 3. எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்!, 4. அந்தாளு...

மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி கருவாட்டு குழம்பு வைத்தார்.‌ செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் கருவாட்டு குழம்போடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது கருவாட்டு குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது.
Theme: Land price rise, Image by “The News Park”

விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது? 

பணத்தை நிலத்தில் முதலீடு செய்பவர்கள் உண்மையாக சந்தையில் ஒரு ஏக்கர் நிலம் எவ்வளவு விலைக்கு  விற்கப்படுகிறது என்பதை காட்டிலும் பல மடங்கு கொடுத்து ஒரே இடத்தில் நிலத்தை வாங்குகிறார்கள்.   தமிழகம் முழுவதும் விவசாயம் செய்யாமல் கம்பி வேலி போடப்பட்ட நிலங்கள் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்காக சிறிது நிலம் வாங்க விரும்பும் சிறு விவசாயிகளும் சிறு தொழில் நடத்த நிலம் வாங்க விரும்பும் குறுந்தொழில் புரிபவர்களும் நிலத்தை வாங்க முற்படும் போதும் அதிக வருமானம் பெறுபவர்கள் உண்மையான விலையைக் காட்டிலும் கூடுதலாக கொடுத்து வாங்கிய விலையைத்தான் நிலத்தின் உரிமையாளர்கள் கேட்கிறார்கள். 
Theme: Thoughts on life style, Image by “The News Park”

பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் போன்றதே + நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்...

ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகளும் தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். வகுப்பிலேயே புத்திசாலியான பையனுக்கு எல்லாக் கேள்விகளுக்கான விடை தெரிந்தாலும், கடைசி கேள்வியைப் பார்த்த போது கவலை அடைந்தான்.  கடைசிக் கேள்வி என்னவெனில், “தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு வரும், முதல் மனிதரின் பெயர் என்ன?“
Theme: Thoughts on life style, Image by “The News Park”

சீட்டுக்கட்டில் வாழ்வியல் உள்ளது தெரியுமா? + விமர்சனங்களை தாண்டி வெற்றி நடை போடுங்கள் + அறிவோமே சபை நாகரீகம்...

ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள், சீட்டுக் கட்டிலும் 52 சீட்டுகள். ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள், ஒவ்வொரு வகையிலும் 13 சீட்டுகள். ஒரு ஆண்டுக்கு நான்கு பருவங்கள,  சீட்டுக்கட்டிலும் நான்கு வகையான சீட்டுகள். ஒரு வருடத்தில்  பன்னிரண்டு மாதங்கள், சீட்டுக்கட்டிலும் ராஜா, ராணி, ஜாக் என்ற முகங்களைக் கொண்ட சீட்டுகள் 12. 
Theme: Don’t feel bad, Image by “The News Park”

தேவைக்கு அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பது தேவையில்லை. ஒரு நிமிடம் படிக்கலாமே!

இளவரசனும் மார்க்கெட்டில் உள்ள முதல் கடைக்காரரிடம், “நான் இந்த வழியாக காலையில் சென்றேன். நீங்கள் என்னைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். கடைக்காரர், “எனக்கு நேரம் இல்லை. காலை நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். நான் உங்களைக் கவனிக்கவில்லை” என்றார். இதே போல மற்றவர்களைக் கேட்ட போதும், ஒருவரும் இளவரசனை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தவில்லை என்பதை உணர்ந்தான்.
Theme: Small News and Big Questions, Image by “The News Park”

யார் வேண்டுமானாலும் பச்சை மையில் கையெழுத்து போடலாமா? அரசு வங்கியில் ரூ 31850 கோடி மோசடி. போலீசில் புகார்...

இந்திய குடிமக்களின் பணத்தை கையாளும் முக்கிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது மத்திய அரசு சொந்தமான வங்கி என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய வங்கிகளில் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதனை வேறு தொழிலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக கடன் வாங்கியவர் மோசடி செய்து விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவார்கள் என்று தானே நாம் அறிந்திருக்கிறோம்? ஒருவேளை கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் குறைந்த கடன் வாங்குபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் வராதோ என்னவோ?
Theme: agricultural land administration, Image by “The News Park”

பட்டா பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவது? பசலி என்றால் என்ன? வேளாண்மை ஆண்டு என்பது என்ன? சம்பா சாகுபடி, குறுவை...

தமிழ் நாட்டில் நிர்வாக சீர்திருத்தம் குறிப்பிடும்படியான மாற்றத்தை கண்டது. மறைந்த தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிரடி நடவடிக்கையாக கிராம் கர்ணம் மு. மணியம் பணியிடங்களை ஒழித்தார். அவரது ஆட்சி காலத்தில் மாவட்டங்கள் வட்டங்கள், உள்வட்டங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் 1967 க்கு பிறகு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சிரமங்களுக்கிடையில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பட்டா பிரச்சினைகளுக்கு யாரை எனது அணுகுவது என்ற ஓரம் கீழே விவரம் கீழே பூங்கா இதழ் கருத்தாக உள்ளது
Theme: Happiness Index - Be happy, Image by “The News Park”

சிரிப்பதற்கு கஞ்சமா! சிரிப்பே மனிதரின் முகவரி, ஆனால், மகிழ்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு 118 ஆம் இடம் – ...

காரணம் இல்லாமல் சிரிப்பவன் பைத்தியம். ஆனால், தனிமையில் காரணமே இல்லாமல் சிரிக்கலாம், கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது, குளியல் அறையில் கதவை அடைத்துக் கொண்டு கொண்டு காரணம் இல்லாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும். தொடர்ந்த சிரிப்பு நம்ம இளமையாக்குகின்றது. புது உற்சாகத்தை தருகிறது. காரணத்தோடு சிரித்தால் தான் சக்தி வரும் என்று இல்லை.  சிரித்தாலே போதும் நம் மனதிற்கு உடம்பிற்கும் சக்தி பெருகுகின்றது. காரணத்தோடு சிரிக்கிறோமோ, இல்லை என்பது நம் மூளைக்கு தேவை இல்லை.
Theme: Current Affairs, Image by “The News Park”

உலகச் செய்திகள், தேச செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி! 

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “என்ன சாமி செய்திகள்?”என்றதும் “செய்திகள் இல்லாத நிமிடம் கிடையாது” என கூறிவிட்டு கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர்...
Theme: Read, Write and Research, Image by “The News Park”

கட்டணம் இல்லாமல் வாசிக்கலாம்! நீங்களும் எழுதலாம்! ஆய்வும் செய்யலாம்! உங்களுக்காக 10 இணைய இதழ்கள்.

ஆறு  ஆராய்ச்சி இதழ்களின் தொடக்க விழா வரும் 2025 அக்டோபர் முதல் நாள் அன்று நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்வுக்கு பின்பு தொடர்ந்து ஆய்வு இதழ்கள் வெளிவர உள்ளன. தங்களது ஆய்வு திறமையை மேம்படுத்த இந்த இதழ்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.