காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல – “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய காதல்கள் நடத்தையில் தோல்வி கண்டு...
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை மகளைப் பார்த்துவிட்டு வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது. உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோலில் சுமந்து சென்றேன்" என்றான். அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
கிழக்கு தொடர்ச்சி மலை குறித்து சங்கதிகளையும் ஆச்சரியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் .கிழக்கு மலைத்தொடர் மேற்கு மலைத்தொடருடன் இணைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் ஜவ்வாது மலைகள் முதல் தெற்கில் அழகர் மலைகள் வரை 13 பெரிய மலைத்தொடர்களை உள்ளடக்கியது. இதில் ஜவ்வாது, ஏலகிரி, சேர்வராயன், சித்தேரி, கல்வராயன், போதமலை, கொல்லி, பச்சைமலை, செம்மலை, அய்யலூர், கரந்தமலை, சிறுமலை மற்றும் அழகர் ஆகியவை முக்கியமானவையாகும்.
திட்டமிடப்பட்ட பாலியல் தாக்குதல்களா? பொருளாதார மந்தமா? யார் ஆதவ் அர்ஜுன்? சர்வதேச படிப்பு என்றால்? என்பது உள்ளிட்ட பல...
சாமி! ஒரு சந்தேகம் லண்டனுக்கு அரசியல் தலைவர் ஒருவர் படிக்க சென்றாரே, இது போன்ற படிப்புகள் குறித்து ஏதாவது தெரியுமா? என்றேன் நான். “இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் சில தலைப்புகளில் குறுகிய கால படிப்புகளை (International short term courses) கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றன. சர்வதேச அரசியல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் இந்த பல்கலைக்கழகங்கள் குறுகிய கால படிப்புகளை நடத்துகின்றன இவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு இணையதளம் போன்றவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை (admission) நடைபெறுகிறது. பெரும்பாலும் இத்தகைய குறுகிய கால படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் (university) கல்வி கட்டணங்களை பொறுத்த அளவில் உதவித்தொகை வழங்குகின்றன
தொலைந்து போன பாரம்பரியம் – பணம் கொடுத்து வாங்கும் உடல் நல தீங்குகள். ஒரு நிமிடம் படிக்கலாமே! பிடித்தால்...
அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.
நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு
வேண்டுகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த சமூக அர்ப்பணிப்பு உள்ளவர்களை தேர்வு செய்து, விரைவில் நல்லெண்ண தூதர்கள், புரவலர்கள் மற்றும் கௌரவ விரிவாக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
திறமையான பையன் – மனைவியை சுட்டுக் கொன்று விட்டு ஏன் தற்கொலை செய்து கொண்டார்? – சிந்திக்க, சிரிக்க...
பேங்க்-ல் கேஷியரிடம் 500 ரூபாய் பணக்கட்டை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது. "சார் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா"ன்னுதான் கேட்டேன்! பேங்க் கேஷியர் கொஞ்சம் கோவமா "ஏன் பணம் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார். சரியா இருக்கும்... ரொம்ப பிஸியான நேரம். இப்ப எண்ணித்தர முடியாது!" அப்படீனாரு!
மறைந்துவிட்ட பல்லுயிர் காவலனான இட்டேரி சுற்றுச்சூழல் அமைப்பு – தமிழர்களின் பாரம்பரியம் – படித்து தெரிந்து கொள்ளலாமே!
தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தெரியாத அளவிற்கு நம் வளர்ச்சி உள்ளது! கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும். பல்லுயிர் வளர்ச்சி நிலவிட, மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள். இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்
ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை… உண்மையை படம் பிடித்து காட்டும் கதையை படிக்கத்...
அவள் மெல்லிய சிரிப்புடன் நான் எதை என்னவென்று சொல்ல.. 35 வருஷத்தில் சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம். காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம். இப்படி ஏதேதோ நடந்திருக்கும். என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.
உஷார்! டிஜிட்டல் அரஸ்ட், சைபர் குற்றங்கள், வாடகை மனைவி, யாரோடு வேண்டுமானாலும் உறவு எமர்ஜென்சி உள்ளிட்ட கருத்து மூட்டையுடன் ...
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அவருக்கு வீடியோ காலில் ஒரு போன் வந்துள்ளது. அதில் உயர் போலீஸ் அதிகாரிக்கான சீருடையில் ஒருவர் இருந்துள்ளார். தங்களது மொபைல் போன் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையதாக உள்ளது என கூறி பேச ஆரம்பித்துள்ளார். தம்மை மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். வீடியோ காலை ஆப் செய்தால் உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்வோம், பேப்பர், டிவியில் உங்கள் பெயர் வரும் என்று மிரட்டி அந்த இளைஞரை வீடியோ காலில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் 9 மணி நேரம் இருக்க வைத்துள்ளார். தாங்கள் கூறுகிற வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக மிரட்டி இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை இறுதியாக பறித்து விட்டார்.
ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி...
கடந்த வாரத்தில் சென்னைக்கு கிழக்கே உள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் ரூ 36,000 கோடி மதிப்புள்ளான மெத்தம்பேட்டமைன் போதை பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது ஒரு செய்தி. மத்திய...