16 ஏப்ரல் 2025: செய்திகளில் சில, உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல! மகனின் ஆசையை அறிந்து அழுத...
16 ஏப்ரல் 2025: இன்றைய செய்திகளில் சில, கட்டுரை: உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல! கதை: மகனின் ஆசையை அறிந்து அழுத அம்மா! ஆன்மீகம்: கடவுள் எங்கே இருக்கிறார்? குரல்கள்: இவர்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்! சிந்திக்க வைக்கும் கார்ட்டூன்.
மன அமைதியை தேடும் ஆன்மீகப் பயணம் லஞ்சத்தை ஒழிக்கும் பிரதான கருவியாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி...
தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதையும் அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதிகள் உண்மையா? என்பதையும் அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதையும் ஆன்மீக பாதையை நோக்கிச் செல்லும் அன்பர்கள் யோசிக்க (Scientific Reasoning) வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நீங்களும் நீங்கள் பராமரிக்கும் நான்கு ராணிகளும் – உண்மையை உணர்த்தும் ஒரு நிமிடக் கதை + தமிழ் சொல்...
வருத்தமுற்ற ராஜா, மூன்றாவது ராணியிடம், “நான், எனது வாழ் நாள் முழுவதும் உன்னை விரும்பினேன். இப்போது நான் இறந்து கொண்டு இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வந்து விடுகிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது ராணி, “முடியாது! நீங்கள் இல்லாதபோது, நான் திரும்பவும் மணம் செய்து கொள்வேன்” என்றாள்.
பிச்சைக்காரனுக்கு வந்த வாழ்க்கை ரயிலில் பயணித்த சிறுவன் படித்ததில் பிடித்த ஒரு நிமிட கதையை படிக்க தவறாதீர்கள்!
'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு' என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
நல்லாட்சியின் தூண்களான ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி முறை ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- டாக்டர் வீ....
ஊழல் ஒழிப்பு உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சிவசங்கர் தலைமை வைத்தார். ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படையான ஆட்சி முறையும் நல்லாட்சிக்கு தூண்களாக விளங்குகின்றன என்று ஏற்புரை வழங்கிய டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார், அவர் பேசியதாவது.
மூன்று கூட்டணிகள், விஜய் தனியே, சீமான் உள்ளே, சிவப்பு நகரமான மதுரை, உச்ச நீதிமன்றம் எழுதிய அரசியலமைப்பு...
மாநாட்டுக்கு வந்த அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் வரிசையில் நின்று உணவைப் பெற்று சாப்பிட்டனர்.
* திரைப்பட இயக்குனர்கள் சசிகுமார், ராஜு முருகன், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ஞானவேல், மாரி செல்வராஜ், பிரகாஷ்ராஜ், ரோகிணி உள்ளிட்ட பலரும் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள மரண அடி உலகப்போருக்கு வழி வகுக்குமோ?
உலகில் 1930 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய வர்த்தகப் போர் மெல்ல மெல்ல மாறி இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது என்பதை மறந்து விடக்கூடாது. இத்தகைய சூழலை முறியடிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சர்வதேச அமைப்புகளை தக்க வகையில் சீரமைக்க வேண்டிய நேரம் இதுவாகும்.
உங்களுக்குள்ளும் உங்களை சுற்றி உள்ள மனிதர்களைம் அறிந்து அறிந்து கொள்ள ஒரு நிமிடம் படியுங்கள்!
கனவுக் கொலையாளிகள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நளன் தமயந்தையின் கதை – சனி தோஷம் குறித்த விளக்கக் கதை
தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டி யாக வேலை செய்தான். அவன் அங்கிருப்ப தை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
அழகிய பெண்ணின் முகம்; அழகிய நடத்தை – வலைத்தளத்தில் படித்த பிடித்த ஒரு நிமிடக் கதை
புத்தகப் பார்சல் பற்றிய தகவலை நீங்கள் உள்ளே அனுப்பியபோது, அந்த கனவான் வெளியே வந்து, உங்களிடம் இருந்து பார்சலைப் பெற்றுக்கொள்கிறார். அவர் உங்களை வீட்டுக்கு உள்ளே அழைத்து சூடான உணவு பரிமாறச் செய்கிறார். நீங்கள் கிளம்பும்போது, அவருடைய கார் டிரைவரிடம், நீங்கள் சேர வேண்டிய இடத்தில் விட்டுவிடக் கூறுகிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடைந்ததும், அந்த கனவான் உங்களை ஃபோனில் அழைத்து, ‘சகோதரரே, நீங்கள் வசதியாக உங்களது இடத்தை சென்றடைந்துவிட்டீர்களா?’