Advertisement

பிரதமர் தவறான புள்ளி விவரத்தை வழங்கினாரா? எதிர் கட்சித் தலைவருக்கு அவமரியாதையா?+ 5, சிரிக்க போனசாக 12 ஜோக்ஸ்!

தன்னிறைவு இல்லாத பருப்பு உற்பத்தி

சில தினங்களுக்கு முன்பு புது தில்லியில் நடைபெற்ற உலக விவசாய பொருளாதார நிபுணர்களுக்கான கருத்தரங்கை பாரத பிரதமர் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய பிரதமர், “உணவு உற்பத்தியில் இந்தியா உலகுக்கு வழிகாட்டுகிறது. இந்தியாவில் தேவையை பூர்த்தி செய்தது போக, தானியங்களும் பரப்பு வகைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தி உள்ளது என தெரிவித்தார். உண்மை என்னவென்றால் இந்தியாவின் பருப்பு தேவை 45 மில்லியன் டன். ஆனால், 26 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எழுதிக் கொடுத்தவர் என்ன நினைத்து எழுதினாரோ?

அவமரியாதை அரசியலமைப்புக்கு அமைப்புக்கா?

இந்தியாவின் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது புது தில்லி செங்கோட்டையில் பிரதம அமைச்சர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர் வரிசையில் கடைசி வரிசைக்கு   முன்னதான வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் கேபினட் அமைச்சருக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் ராகுல் காந்தியை பார்வையாளர்கள் பகுதியில் கடைசியில் அமர வைத்தது அரசியலமைப்பு பதவிக்கு இழைக்கப்பட்ட அவமானம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நியாயமா? இது நியாயமா?

பொய்யை பரப்பும் சமூக ஊடகம் 

இந்தியாவுடன் நல்ல நட்பில் இருந்த மாலத்தீவு தற்போது இந்தியாவை விட்டு விலகிச் சென்று சீனாவுடன் உறவு காட்டுகிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று வந்தார். இதன் பின்னர் அதிரடி வியூகத்தால்   28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மாலத்தீவு என்ற   தகவல் சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. மக்களிடையே இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறந்தது என்பதை காட்டுவதற்கு இத்தகைய தகவல் பரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையில்  எந்த ஒரு தீவையும் மாலத்தீவு  இந்தியாவின் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கவில்லை என்பதுதான் உண்மையான சங்கதியாகும். பொய்யை உரக்கச் சொன்னால் நம்பி விடுவார்களோ?

இந்தியாவுக்கும் விற்பனை – பாகிஸ்தானுக்கும் விற்பனை

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூலையில் இந்திய பிரதமர் ரஷ்யா சென்று வந்தார். ரஷ்ய பிரதமர் இந்தியாவை நெருங்கிய நண்பன் என வர்ணித்தார்.  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏராளமான ஆயுதங்களை வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளில்லா அதிதொழில்நுட்ப ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு  ரஷ்யா விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அரசின் இணையதள தகவல்களின்படி இந்த ட்ரோன்கள் உலகில் மிக சிறந்த ட்ரோன்கள். ஆயுத வியாபாரம்தான் குறிக்கோளா?

இலங்கை அதிபர் தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர்

இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி., பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பூர்வீக தமிழ் மக்கள் மற்றும் கிழக்கில் வாழும் பூர்வீக தமிழ் மக்கள் ஆகியோரின் பிரதிநிதியாகவே இவர் பார்க்கப்படுகிறார். பிரிட்டிஷார் இலங்கையை ஆண்ட போது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த புலம்பெயர்ந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக தமிழர்களும் தமிழை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமிய தமிழர்களும் பொது தமிழ் வேட்பாளர் என்ற கருத்துக்கு உடன்படுவதாக தெரியவில்லை. நாங்களே நாலு பிரிவுங்க!

ஐந்து பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி

பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வித்துறைகளும் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளும் திறம்பட செயல்படுவதில் முக்கிய பங்காற்றுபவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்பது அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியில் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் யாரும் இல்லை. இதில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதலே துணைவேந்தர் இல்லை. இவ்வாறு துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட மாநில ஆளுநருக்கு   பல்கலைக்கழ கங்களில் அதிகாரம் உள்ளது என்ற கருத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கே அதிக அதிகாரம் உள்ளது என்ற கருத்துக்கு இடையே போர் நடைபெற்று வருவதால் இந்தப் பதவியில் யாரையும் நியமனம் செய்யாமல் உள்ளது. நீயா? நானா? மக்கள் பிரதிநிதியா? நியமனப் பிரதிநிதியா?

இரண்டு மடங்கான வேலையில்லா திண்டாட்டம்

கடந்த 2014 ஆம் ஆண்டு 5.41 சதவீதத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டம் தற்போது (2024 ஜூன்) 9.2 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளதாகவும் கடந்த பத்து ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இரண்டு மடங்கு பெருகி உள்ளதுள்ளதாகவும் போர்ப்ஸ் இந்தியாஎன்ற இணையதளம் தெரிவிக்கிறது. நாங்களும் சாதன படைப்போம் ?

படிக்க! சிரிக்க! வலைத்தளத்தில் பிடித்தது 

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்… ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது! 
2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்!
3. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே! “நீங்க வெட்டுங்க பாஸ்”!
4.           ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: “ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை.” இதற்கு மனைவி சொன்ன பதில்: “அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?”
5.           தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்..  “டேய் மச்சான்… எங்கடா இருக்க?”   “வீட்லதான்டா இருக்கேன்…”   “அப்பாடா… இப்பதான்டா நிம்மதியா இருக்கு…!!”   “ஏன்டா? என்ன விஷயம்??” “அதில்லடா….. காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்… எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்…..”
6.           அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு.? மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!
7.           நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…    
8.           “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
9.           பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டு வரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”  
10.         முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
11.         டீச்சர் கேட்டார்… பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார்? குறும்புக்கார மாணவனின் பதில்… எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்… கரண்ட் பில் வராது..!!  ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..! சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..! சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை… மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
12.         ஜட்ஜ்: நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா.? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்…! முதல்ல அவரை விடுதலை செய்ங்க…!

Read this: https://theconsumerpark.com/space-scientist-isro-gowrimani-ramaraj

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles