நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு திருத்தலமாக விளங்கும் வைத்தியநாதர் திருக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர், வள்ளலார் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடிய தலமாகும்.
நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
செவ்வாய்
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார். ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது.
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா? “சரியும் புத்தக வாசிப்பால் ஏற்படும் தீமைகள்?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம். |
போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிவபெருமானின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே செவ்வாய் பகவான் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள். மங்களன், அங்காரகன் என்பது செவ்வாய் பகவானின் வேறு பெயர்களாகும்.
செவ்வாய் கோவில்
மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம் செவ்வாய் அவதரித்த தலமாகும். உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இத்திருகோயில் உள்ளது. அங்காரகன் (செவ்வாய்) வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு சிவபெருமானை வேண்டி நிற்க, அங்காரகனின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்த ஈசன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சித்தமராத தீர்த்தத்தில் நீராடி வைத்யநாதனை வழிபடுமாறு கூறியுள்ளார். அங்காரகனும் அவ்வாறு செய்ய, அங்காரகனின் வெண் குஷ்ட நோயும் குணமானது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்பட்டு செவ்வாய் தோஷ பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் விளங்குகிறது.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
வைத்தியநாதர் கோவில்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வைத்தியநாதர் கோயிலில் வைத்தீசுவர சுவாமி சுயம்பு மூர்த்தியாக அவரின் இணையான தையல்நாயகி அம்பாளுடன் இணைந்து மூலிகை தைலத்துடன் நிற்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த தலத்தில் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இந்த கோவிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரப்பத்திரியர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலின் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன இரண்டு கொடி மரங்கள் உள்ளது.
மருத்துவக் கடவுள்
பொதுவாக நவகிரக தெய்வங்கள் ஒன்றுக்கொன்று திசை மாறி இருக்கும் என்பதோடு சிவன் சன்னதிக்கு முன்பக்கமாகவே நவகிரக சன்னதி அமைக்கப்பட்டிருக்கும், ஆனால், வைத்தீஸ்வரன் கோவிலில் நவகிரங்கள் அனைத்தும் மூலவரான சிவபெருமான் பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். செவ்வாய் பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
செவ்வாய் தோஷம்
அருள்மிகு செவ்வாய் தலம் என்பதால், செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் இந்த இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். அங்காரகனை பிரார்த்திக்கலாம். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அதனால்தான் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமையைச் சொல்கிறார்கள். ஆகவே, செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானையும் செவ்வாய் பகவானையும் ஒருசேர மனதில் நினைத்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். விரைவில் திருமண யோகத்தைத் தந்தருள்வான், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
புள்ளிருக்கு வேளூர்
இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு (vaitheeswaran koil) புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. புள் என்ற சடாயு பறவை ராஜனும், இருக்கு என்ற வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்னனான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து:
ரோமில் உள்ள மார்டியஸ் வளாகத்தில், செவ்வாய் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்க்கஸ் ஃபிளமினியஸுக்கு அருகில் கிமு 2 ஆம் நூற்றாண்டில் செவ்வாய் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்திய புராணங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கும் இந்த கோயிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்பு | அரசியல் |
மாநிலம் தேசம் சர்வதேசம் சிறப்பு படைப்புகள் கருத்து நேர்காணல் அறிவு பூங்கா | அரசு நிர்வாகம் அரசியல் பிரச்சனைகள் பாதுகாப்பு அமைதி வாக்காளரியல் |
பொருளாதாரம் | சமூகம் |
நிதி உற்பத்தி சேவைகள் தொழில் வர்த்தகம் விவசாயம் உணவு -வீடு | மக்கள் கல்வி – வேலை ஆன்மீகம்-ஜோதிடம் வாழ்க்கை கலை – இலக்கியம் பொழுதுபோக்கு விளையாட்டு |
கதம்பம் | நாங்கள் |
நீதி -சட்டம் குற்றம் புலனாய்வு இயற்கை அறிவியல் ஆரோக்கியம் களஞ்சியம் | நாங்கள் புரவலர்கள் ஆதரிங்கள் பங்களியுங்கள் |