தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கல்பனா சாவ்லா விருது, அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது, கபீர் புரஸ்கார் ஆகிய விருதுகளும் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் சிறந்த சமூக சேவகர் விருது, சிறந்த பெண் குழந்தைக்கான விருது, சிறந்த திருநங்கை விருது, சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது, அவ்வையார் விருது, பெண் குழந்தை பாலின விகிதத்தை உயர்த்திய சிறந்த மாவட்டத்திற்கான விருது ஆகிய விருதுகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறந்த மருத்துவர், சிறந்த மாவட்ட ஆட்சியர், சிறந்த சமூக பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், ஆகிய விருதுகளும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதும் உயர் கல்வித் துறை சார்பில் Dr. A.P.J. அப்துல் கலாம் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ் தென்றல் திருவிக விருது, கிஆபெ விசுவநாதன் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேராசிரியர் அண்ணா விருது, இலக்கிய மாமணி விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உவேசா விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப் புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழிபெயர்ப்பாளர் விருது, சிங்காரவேலர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலை அடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ஆதித்தனார் விருது, மாவட்டத்துக்கு ஒருவருக்கு தமிழ் செம்மல் விருது ஆகியன ஆண்டுதோறும் சான்றோருக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 15 ஆகஸ்ட் 2024. தகுதி வாய்ந்தவர்கள் https://awards.tn.gov.in/index.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்தவர்களை கண்டறியும் பொதுமக்களும் அவர்களுக்காக விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.