உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அவர் சிறுவனாக இருந்த பொழுது ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்கு காட்டினார். அவரது தந்தை அதைப் பாராட்டி ” மகனே இதை வெளியில் வைத்து இந்த ஓவியத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் என மக்களுக்கு ஒரு வேண்டுகோளை எழுதி தெருவிலே வை” என்றார். பிக்காசோவும் அவ்வாறே செய்தார்.
ஓவியத்தை பார்க்க வந்தவர்கள் சுமார் 100 குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தனர். பிகாசோ ஓவியத்தை எடுத்துச் சென்று தனது தந்தையிடம் “இனி நான் வரையப் போவதில்லை. நான் வரைந்த ஓவியங்களில் நிறைய குறைபாடுகள் உள்ளன என்று வருத்தத்தோடு கூறினார். அவரது தந்தை “இல்லை மகனே ! நீ மனமுறடையாதே. நாளை சென்று குறைபாடுகளை சரி செய்யவும் என்று ஒரு லேபிளை ஒட்டி வா. என்ன நடக்கிறது பார்ப்போம் என்றார். பிக்காசோவம் அவ்வாறே செய்தார் .
மாலையில் ஓவியத்தில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய நாள் குறை கூறிய குறைபாடுகளில் ஒன்று கூட சரி செய்யப் படவில்லை. “மகனே! நமது குறைபாடுகளை சுட்டிக்காட்ட ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால், அவற்றை சரி செய்யக்கூடியவர்கள் மிக மிகக் குறைவு. எனவே மனம் தளறாதே. குறை கூறிக் கூத்தடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்” என தந்தை மகனை அழைத்துக் கூறினார்.

உலகில் உதித்த ஒவ்வொருவரிடமும். ஒவ்வொரு வகையான ஆற்றல் உண்டு. அதை வெளிக்கொண்டு வருகிற ஆற்றலும் திறமையும். ஒவ்வொருவருக்குள்ளேயே கண் உறங்காது. பட்டப் படிப்பிற்கு கல்லூரிக்கு செல்லாதவர்தான் தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ் இவர் 15 பட்டங்களை படிக்கவில்லையா? பல பொறுப்புகளை வகிக்கவில்லையா? (இவரது உழைப்பின் கதையை தனியாக விரைவில் வெளியிடுகிறோம்)
ஏளனமோ, அவமானமோ, துயரமோ, துன்பமோ, என. எதிரான விளைவுகளை சந்தித்தால் சோர்வடையக் கூடாது, துவளவும் கூடாது. அதனால் ஏற்படும் மன உளைச்சல் உருவாவதற்கான காரணத்தை ஆராய வேண்டும். சோகத்தையும், விமர்சனங்களையும், துன்பத்தையும் எதிர்கொண்டு சாதகமாக்க முயல வேண்டும்.
பிறரை குறை கூறுபவர்கள். கேலியாக பேசுபவர்கள். கிளிப்பிள்ளை போல் இழித்தும் பழித்தும் பேசுவதையே வாடிக்கையா கொண்ட வாத நோய் காரர்களை சிலந்தி போல் சிக்கலை தந்து கொண்டிருப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிவிட வேண்டும். அவர்கள் காற்றே நம் மீது படக்கூடாது. நம் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் நியாயமாகத் தெரிந்தால் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நியாயமற்ற விமர்சனத்தை உதாசீனப்படுத்தி முன்னோக்கி செல்ல வேண்டும் .
நேர்மையான விமர்சனத்திற்கு தலை வணங்கினால் வெற்றி நமது பக்கமே. சொற்கலால் தாக்கப்படும் போது கோபமுற்று கொந்தளிக்காது காரணம் அறிந்து செயல்பட வேண்டும். நியாயமானதாயிருப்பின் நம் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதில் வெட்கமோ கூச்சமோ தேவையில்லை. விமர்சனங்களை வரவேற்கிற பக்குவத்தை பெற்று விட்டால் நியாயம் எது என்பதை நம்மால் உணர முடியும்,
அவமானப் படுத்தப்பட்டு, ஏளனப் படுத்தப் பட்டவர்கள் வாழ்க்கையில் அவர்கள் உயர்ந்த வரலாற்றைப் பாருங்கள்.! உனது பல்வரிசை சீராக இல்லை என ஒதுக்கப்பட்டவர் தான் நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” உன் முகத்தில் உள்ள தழும்பும் குழி விழுந்த தோற்றமும் ஒத்து வராது என்ற அவமானத்தை முறியடித்து முன்னேறியவர்தான். நடிகர்தானே… நாடாள முடியுமா? என்று பேசப்பட்டவர் முதலமைச்சராக வில்லையா ?
பள்ளிப் படிப்பை படிக்கத் தகுதியில்லை என்று அனுப்பப்பட்டவர்கள் தான் தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி ஃபோர்ட், ராபர்ட் கிளைவ், ஐன்ஸ்டீன் போன்றவர்கள். நடிப்பு எல்லாம் வராது என்று திருப்பி அனுப்பப்பட்டவர் தான். உலகப் புகழ்பெற்ற நடிகர் “சார்லி சாப்ளின் “. உனக்கு இலக்கணம் தெரியாது என்று அவமானப்படுத்தப்பட்டவர் தான் “ரவீந்திரநாத் தாகூர் ” இங்கிலாந்து பாராளுமன்றத்தில் திக்கி திக்கி பேசிய போது கேலி செய்யப்பட்டவர் தான் அந்நாட்டின் பிரதமரான “பெஞ்சமின் டிஸ்ரேலி”
நீ குமாஸ்தா வேலைக்கு தான் லாயக்கு என்று கிண்டல் செய்யப்பட்டவர் தான் உலகப் புகழ்பெற்ற நடிகை “மர்லின் மன்றோ ” அனுசரித்துப் போவதற்கு தயாரான நிலையில் செயல்பட்டால் வெற்றி நமது பக்கம் தான். நமது முன்னேற்றம் கண்டு நம் மீது பல்வேறு விதமான தாக்குதல்கள் வரத்தான் செய்யும். உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட மனநிலை இருந்தால் எல்லாமே ஓடிப் போகும்.
எப்போது விமர்சனத்திற்கும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்படுகிறோமோ, அப்போதே சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம் என்பதுதான் உண்மை. போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்து என எனது உள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் என்ற கவிஞர் கண்ணதாசனுடைய வரிகளை நினைவு கூர்ந்து நமது பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நமது வேலையை நாம் தொடர்ந்து செய்திடுவோம்! அவமானப் படுத்தப்பட்டு, ஏளனப் படுத்தப் பட்டவர்கள் வாழ்க்கையில் அவர்கள் உயர்ந்த வரலாற்றைப் பாருங்கள்!