Advertisement

உயர்ந்த பதவிகளையும் வேலை வாய்ப்புகளையும் வழங்கும் ஐ. நா. (U.N.O) நிறுவனங்கள்

ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் துணை நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம், உலக தொழிலாளர் நிறுவனம், பன்னாட்டு நிதி நிறுவனம், சர்வதேச நீதிமன்றம் போன்றவற்றில் நேரடியாக உயர்ந்த பதவிகளுக்கும் பல்வேறு வேலைகளுக்கும் தொடர்ந்து  ஆட்சேர்ப்பு  (recruitment) நடைபெறுகிறது. இத்தகைய சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, தமிழர்கள் ஐக்கிய நாடுகள்  சபையின் பணிகளில் மிக முக்கிய பொறுப்பு வகிப்பதும் பணியாற்றுவதும் குறைவாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இயக்குனர், துணை இயக்குனர் போன்ற உயர்ந்த பதவிகளுக்கும் நிலை ஒன்று முதல் நிலை 5 வகையான  தொழில் முறை அலுவலர் (professional category) பதவிகளுக்கும் திறன் வகையிலான (skilled work) பல்வேறு பொது பணிகளுக்கும்   காலி பணியிட அறிவிப்புகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பணிகளுக்கு சிறந்த ஊதியமும் இதர வசதிகளும் வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் திறமை மிக்க இளைஞர்களும் அனுபவம் வாய்ந்த தொழில் முறை வல்லுனர்களும் நிறைந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அளவில் சிறப்பான பணியை செய்வதற்கு தமிழர்கள் முன் வர வேண்டும். ஐக்கிய நாடுகள்  சபையின் அமைப்புகளில் பணியாற்றுவது அரிய அனுபவங்களையும் நல்ல வாய்ப்புகளையும்   வழங்கக் கூடியதாகும். இந்தப் பணிகளுக்கு தகுதியின் (merit) அடிப்படையிலேயே உரிய தேர்வு முறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

தாங்களும் ஐநா சபையில் பணியாற்ற விருப்பம் இருந்தால் https://careers.un.org/job-level என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்! விண்ணப்பம் செய்யுங்கள்! வெற்றியடையுங்கள் வாழ்த்துக்கள்! இதனைத் தவிர ஐக்கிய நாடுகளின் சபையின் துணை அமைப்புகளான   ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP), உலக தொழிலாளர் நிறுவனம் (ILO) போன்ற அமைப்புகளுக்கும் தனியாக இணையதளங்கள் உள்ளன. இந்த அமைப்புகள் தனியாக வேலைவாய்ப்பு விளம்பரங்களை இணையதளங்களில் வெளியிடுகின்றன. இவற்றையும் பார்வையிடுங்கள்!   விண்ணப்பம் செய்யுங்கள்! வெற்றி பெறுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles