
தமிழகத்தில் முதன்முதலாக நிறுவப்பட்ட தனியார் சட்டக் கல்லூரியான சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரி (Central Law College) கடந்த 1984 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களால் நிறுவப்பட்டது. தற்போது பேராசிரியர் திரு R.V. தனபாலன் அவர்களின் மகனும் வழக்கறிஞரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் குழுமத்தின் இணை தலைவருமான (Co-Chairman, Bar Council of Tamil Nadu and Pondicherry) திரு பி. சரவணன் கல்லூரி தலைவராக உள்ளார். கடந்த 24 செப்டம்பர் 2025 அன்று சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா குறித்து பத்திரிக்கையில் வெளியான சில செய்தி தொகுப்புகளும் புகைப்படங்களும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திரு டி. சரவணன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அவரது கல்வி சேவைக்காக வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.







https://www.centrallawcollege.com/home
https://www.centrallawcollege.com/info/about
பூங்கா இதழ் (The News Park) கருத்து:
கல்லூரி காலத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! அதற்கு பின்னரும் தொடர்ந்து படியுங்கள்! கற்ற கல்வியை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! என்ற டாக்டர் வீ. ராமராஜ் அவர்களது கருத்து போற்றுதலுக்குரியது.


