கல்லூரியில் அறிவைத் தேடுங்கள். படிப்பிற்குப் பின்பு அறிவை பரப்புங்கள். ஊழலை ஒழிக்க விழிப்புணர்வுதான் கருவி. லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வேண்டுகோள்.

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே இலக்கை தேர்வு செய்து அதற்காக திட்டமிட்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். சரியாக நேரத்தை திட்டமிட்டு தொடர்ச்சியாக பணியாற்றுவதன் மூலமே எண்ணிய இலக்கை அடைய முடியும். சமுதாயத்தில் வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது என்பதையும் முயற்சி கைவிட்டாலும் முயற்சியை நாம் கைவிடக்கூடாது என்பதையும் மனதில் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று ராமராஜ் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.