bifurcation of states

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை  சரியானதா? அரசியல் தந்திரமா?

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களை போன்ற சிறிய பகுதிகளை கூட மாநிலங்களாக மாற்றியமைப்பதன் மூலம் மாநிலங்கள் நகராட்சி போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் மாநிலங்களுக்கான சுயாட்சி, மாநிலங்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்கு உள்ளாகும் இந்தியா என்ற தேசம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையால் கட்டப்பட்டுள்ளது.
decreasing reading habit leading to danger

மீண்டும் தேவை அறிவொளி இயக்கம் படித்தவர்களுக்காக. 

தற்போது எளிதாக ஒருவரை ஒரு மணி நேரம் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது நிபுணத்துவத்தையும் அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது அவசியமாக உள்ள நிலையில் வாசிப்பு திறன் குறையும்போது தனி மனிதர்களின் சமூகத்தின் வளர்ச்சியும் குறையும் என்பதை மறுக்க இயலாது இத்தகைய சூழலில் வாசிப்பு திறனை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் மேற்கொள்வது அவசியமான தருணம் இதுவாகும். வாசிப்பை வளர்ப்போம்! நூலகங்களை அதிகப்படுத்துவோம்! வளர்ச்சியை உறுதி செய்வோம்!
Victory if ignorance is removed

சந்தன மரமாக வாழ விரும்புகிறீர்களா? கரிக்கட்டையாக வாழ விரும்புகிறீர்களா? முடிவு உங்கள் கையில்

அறியாமையை அகற்ற நாம் வாழும் ஒவ்வொரு நாளிலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உள்ள அர்த்தங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது வாழ்க்கையை கரிக்கட்டையாக அல்லாமல் சந்தன மரமாக வாழ்வதற்கான முயற்சியாகும். வாழ்க்கையை சந்தன மரமாக வாழ்வதா? அல்லது கரிக்கட்டையாக வாழ்ந்து விட்டு செல்வதா? என்பது என்பது ஒவ்வொருவரின் கைகளில் தான் இருக்கிறது.
Bangladesh government change redesign india foreign policy

இந்தியா வெளியே – சீனா, பாகிஸ்தான் உள்ளே

தெற்கு ஆசியாவில் உள்ள வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்தும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறி இருப்பதும் இந்தியாவுக்கு கவலை தரக்கூடிய அம்சமாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்தூக்கி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறினால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த இயலாது.
Advocates Strike and its lessons, needed actions

படியுங்கள்! தவறாது பகிருங்கள்!  ஒரு மாத கால வழக்கறிஞர்கள் போராட்டம் வெற்றியும் அல்ல. தோல்வியும் அல்ல. எப்படி?

நடந்து முடிந்துள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகள் மூலமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்   மேற்கண்ட ஐந்து அம்சங்கள் ஆகும். இந்த ஐந்து நடவடிக்கைகளையும் யார் மேற்கொள்வது? என்று பார்த்தால் வழக்கறிஞர் சங்கங்களின் மாநில அமைப்புகள் தங்களது அமைப்பில் உள்ள வழக்கறிஞர் சங்கங்களை அழைத்து குழுக்களை அமைத்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைகள் வரும் போது மட்டும் போராட்டம் நடத்துவது என்ற மனநிலையை தவிர்த்து எப்போதும் விழிப்புடன்! எப்போதும் ஒற்றுமையுடன்! என்ற முழக்கங்களுடன் பயணிக்க தவறினால் எதிர்காலத்தில் வழக்கறிஞர்களின் ஒற்றுமை என்பதும் கேள்விக்குறியாவதோடு சுதந்திரமான நீதித்துறைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக அமையும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். 

கணவனிடம் மனைவியின் எதிர்பார்ப்பும் மகன், மகளிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும் – அம்மா எழுதிய கண்ணீர் கதை படிக்க தவறாதீர்கள்.   

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க. என்னத்த சொல்ல.. ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா… அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்ம கூட? போடி லூசு... அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை.  மெதுவாய் சொன்னான்… நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
Identifying skill for success

அடையாளம் காணுதல் வெற்றியின் தொடக்கம்

அடையாளம் காண்பது எளிதல்ல. ஆனால், அடையாளம் காண்பது இயலாததும் அல்ல. வாழ்க்கையில் அடையாளம் காணும் திறனை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கட்டுரையை ஓரிரு முறை திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். இந்த கட்டுரையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் வெவ்வேறு விதமான சிந்தனைகள் உங்களுக்கு மனதில் தோன்றுவதோடு இந்த கட்டுரையின் அவசியத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அடையாளம் காணுதலுக்கு தேவையான பண்பு ஆய்ந்தறியும் திறனாகும்.
formation of msme grievance redressal right to service environmental protection commission

நாடு முழுவதும் 45 வரி தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவு. மக்கள் நல சேவை உரிமை, தொழில்முனைவோர்...

அரசுக்கு வருவாய் தரக்கூடிய புதிய அமைப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கான செலவுகளுக்கு உடனே அனுமதி அரசால் வழங்கப்படுகிறது. மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கான புதிய அமைப்புகளை உருவாக்கினால் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கு செலவு ஏற்படும் என எப்போதுமே அரசின் நிதித்துறையினர் கருதுகிறார்கள். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைக்க இயலும். மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைப்பதற்கு செலவு ஏற்படும் என அரசு கருதினால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதன் பொறுப்பை மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம். 
india important commissions top post vacancies

தேசிய அளவில் உயர் அமைப்புகளில் காலியாக உள்ள தலைமை பதவிகள்

உயர்ந்த நோக்கங்களுக்காகவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்  சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக தேசிய அளவிலான அமைப்புகளை பாராளுமன்றம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இத்தகைய உயர்  அமைப்புகளில் தலைமை பதவிகள் காலியாக இருந்தால் இந்த அமைப்புகள் திறம்பட செயல்படுவது சிக்கலானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். காலியாக உள்ள உயர் அமைப்புகளின் தலைமை பதவிகளில் தகுந்த நபர்களை விரைவில் மத்திய அரசு நியமனம் செய்ய  வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
self confidence story

வலைத்தளத்தில் படித்ததில் மனதை தொட்ட நம்பிக்கை கதை 

எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது, தோல்வி என்பதே வராது. நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு  ஆளாகும் போது,  வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து உறுதியாக வெளியே வந்துவிடலாம்.  உன் மேல் நம்பிக்கை வைத்து, முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடி சவால்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.