நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும் என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன – பட்டினி கொடியது! அதைவிடக்...
நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை. ''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?'' என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது. நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும் என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.
இன்று அமெரிக்கா தேர்தல்: அமெரிக்கா ஒரு காலத்தில் அடிமை நாடு தெரியுமா? நான்காண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமை மட்டும் அமெரிக்க...
உலகில் உள்ள ஏழு கண்டங்களில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்பவை இரண்டு கண்டங்கள். இதில் வட அமெரிக்காவில்தான் அமெரிக்கா என்று பொதுவாக இந்தியர்களால் கூறப்படும் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் முழு...
வெளிநாட்டுக்கு மகனை வேலைக்கு அனுப்பி விட்டு கதறும் பெற்றோரின் கதை … …. மனதை உடைத்த ஒரு நிமிட...
''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா? ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்தியமில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.
மனதை தொட்ட வலைத்தளத்தில் படித்த கதை. கதை எடுத்துச் சொல்லும் “நிலையான வளர்ச்சி (Sustainable Development) என்றால் என்ன?”...
நமக்கு முன் பல்லாயிரம் தலைமுறைகள் வாழ்ந்துள்ளார். ஒரு தலைமுறையினால் அடுத்து வந்த தலைமுறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாங்கள் அனுபவித்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச்சென்றனர். இதுவே நிலையான வளர்ச்சிக்கு (sustainable development) அடித்தளம் ஆகும். இதில் நாம் மட்டுமே விதிவிலக்கு. நாம் சிறு வயதில் அனுபவித்த சுதந்திரம், பசுமையான சுற்றுப்புறம், வீதிகளில் விளையாட்டு, தடையில்லா குடிநீர், கூட்டுக்குடும்ப வாழ்க்கை என சொல்லிக்கொண்டே போகும் எதையும் நம் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லை.
கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கட்டும்! தண்டனை கிடைக்கட்டும்! கொலையான குடும்பத்துக்கு என்ன கிடைக்கிறது? – வீ. ராமராஜ் அவர்களால்...
மனிதன் வாழ்க்கை வளம் பெற தேவைப்படும் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப இயற்றும் பொறுப்பு மக்கள் மன்றங்களுக்கு எப்போதும் உரியதாகும். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா. காவல்துறையின் அதிகாரங்களையும் பணிகளையும் பாதுகாத்தல், துப்புத்...
Introduction to “Voterology”. Click https://jovar.researchpark.in/introduction-to-voterology/
Dr. V Ramaraj first introduced the term “Voterology” in the above article in 1999. He brought forth the concept of “Voterology”, discussing its significance and requirements. At a gathering of voluntary organizations involved in the Indian National Voter Awareness Campaign in 2000, Dr V. Ramaraj was named the “Father of Voterology”.
வந்த வீடியோகால்… … மாணவியை மிரட்டி நிர்வாண படம்… … தொடரும் பாலியல் தொந்தரவு… … ஆணோ, பெண்ணோ...
அந்த வீடியோ காலில் அந்தப் பெண்ணின் ஒளிப்படம் பதிவாகிவிட்டது. சுமார் அரை மணி நேரத்தில் ஏற்கனவே அழைத்தவரிடம் இருந்து ஒரு புகைப்படம் வாட்ஸ் அப்புக்கு வந்தது. அதில் அந்தப் பெண்ணின் உடல் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக அவரது தலையுடன் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் அந்த நபரிடம் இருந்து போன் வந்தது. நிர்வாண படத்தை அழித்து விடுமாறு எவ்வளவோ கெஞ்சுகிறார். ஆனால், அவனோ நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ நிர்வாணமாக ஒரு படம் எடுத்து எனக்கு அனுப்பிவிடு என்று கேட்கிறான்.
ஒரு நிமிடம் செலவு செய்து படித்து மகிழலாமே! – மனதை தொடும் வலைத்தளத்தில் படித்த – பிடித்த –...
அப்பா மாறவேயில்லை...தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார், வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும், ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது, ஆனால் உறுதியாக இருக்கும்.
சொல்கிறார்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் – சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைக்கும் போதை பொருள்
மாணவர்களுடைய போதை பொருள் பழக்கம் என்பது தமிழகத்தில் மட்டும் நிலவக்கூடிய ஒன்று அல்ல. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினையாகும். செய்திகளில் நாள்தோரும் போதைப்பொருள் சார்ந்த செய்திகளை நாம் கடந்து செல்கின்றோம். தற்போது பள்ளி பருவத்திலேயே தொடங்கிவிடும் இந்த போதை பழக்கம், அவர்களோடு இணைந்த இளைய சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது.
போலி நீதிமன்றம், போலி சுங்கச்சாவடி, போலி அரசு இணையதளம், போலி அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்ட கருத்து வெடிகளை...
2023 டிசம்பர் மாதத்தில் குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் ஐந்து நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் போலி சுங்கச்சாவடி நடத்தி வந்தது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உண்மையான சுங்கச்சாவடியில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதால் இந்த சுங்கச்சாவடி வழியாக கிராமத்துக்குள் சென்று, உண்மையான சுங்கச்சாவடியை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லுமாறு சாலை அமைத்து இந்த வசூலை 12 ஆண்டு காலம் நடத்தி வந்துள்ளார்கள்.