கட்டணமில்லாமல் அனைவருக்கும் குடிநீர், மருத்துவம், கல்வி
பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடரில் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில்களும் அரசுடமையாக்கும் சட்டம் அரசின் முதலாவது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
வரும் மே 30: கணக்கன்பட்டியில் சித்தர்களின் குருநாதருக்கு ஆண்டு குருபூஜை
சத்குரு சச்சிதானந்தத்தின் கோட்பாடுகளை தீவிரமாக வலியுறுத்தும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த முதல் சபையானது கடந்த 1938 ஆம் ஆண்டு கணக்கன்பட்டியில் நிறுவப்பட்டது. பழனியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கணக்கன்பட்டி. இந்த கிராமம் சிறந்த ஆன்மீக தலமாகவும் சிந்தனையாளர்களின் பிறப்பிடமாகவும் திகழ்கிறது. வரும் மே 30 அன்று கணக்கம்பட்டி கிராமத்தின் வட எல்லையில் அமைந்துள்ள பெட்டகம்பதியில் நடைபெற உள்ளது. அதே நாளில் கணக்கன்பட்டி கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையிலும் ஆண்டு குரு பூஜை நடைபெற உள்ளது.
யார் இந்த ரையீசி? ஏன் இந்த பதட்டம்? கொலையா?
ஒவ்வொரு நாட்டிலும் உளவுப்படைகள் (intelligence forces) நாட்டின் நிர்வாக தலைவர்களுக்கு தலைவர்களின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வைக்கின்றன. இந்தியாவில் இண்டலிஜென்ஸ் ஐ.பி., (I.B.,) என அழைக்கப்படும் உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் ரா (R.A.W.,) எனப்படும் என அழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் அனலைசிங் விங் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் செயல்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஐபி உளவு பிரிவு அதிகாரிகள் தங்கள் யாரென வெளியில் தெரியாமலேயே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரா உளவு பிரிவு அதிகாரிகள் உலகம் முழுவதும் இந்தியாவிற்காக பணியாற்றி வருகிறார்கள்.
பஞ்சபூதசிவாலயங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து இயற்கையின் கொடையானது பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. பஞ்சம் என்பதன் மறு பொருள் ஐந்து என்பதாகும். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குரிய சிவாலயங்களாகும்
ஆபத்தை வழங்கும் தொடுதிரை/இணையதள அடிமைத்தனம்
தொடுதிரை அடிமைத்தனத்தால் “குடும்ப உரையாடல்களை அழித்து விடுகிறோம். நண்பர்களை மறந்து விடுகிறோம். வீதிக்கு வந்து நடப்பதை -விளையாடுவதை மறந்து உடல் நலத்தை கெடுத்து விடுகிறோம். தூக்கத்தை தொலைத்து விடுகிறோம். சமூக அக்கறை என்றால் என்ன விலை? என கேட்கும் நிலைக்கு உள்ளாகிறோம்”. என்று முடியும் இந்த அடிமைத்தனம்? என்று விடியும் வெற்றிக்கான பாதை?
இந்திய மனித உரிமைகள் ஆணையம் சர்வதேச அங்கீகாரத்தை இழந்து விட்டதா? விரிவான அலசல்
கடந்த பத்தாண்டுகளில் மூன்றாவது ஆண்டாக அங்கீகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அமையும் அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் அங்கீகாரம் குழுவில் தேவையான அறிக்கைகளை சமர்ப்பித்து இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு “ஏ” நிலை அங்கீகாரத்தை பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தேவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (MSME) குறைதீர் ஆணையம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரால் பொருட்கள் அல்லது சேவையை வழங்கிய (supply) பின்னர் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதற்கு பிரச்சனை ஏற்படும் போது தற்போதுள்ள கவுன்சில் முறையில் விரைவான, எளிதான தீர்வு கிடைக்க உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி சட்டத்தை திருத்தி பெலிசிலிடேஷன் கவுன்சிலுக்கு பதிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைதீர் ஆணையத்தை (MSME disputes redressal commission) அமைக்கலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு: வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது…. மருத்துவர்கள் மீது ….? நீதிமன்றம்...
அதே சமயத்தில் தொழில் முறை வல்லுனர்கள் மீது எவ்வித வழக்கும் தாக்கல் செய்யக்கூடாது என்ற கருத்தை தாங்கள் முன்மொழியவில்லை என்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும் தகுந்த அமைப்புகளில் அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தடை ஏதும் இல்லை என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு அனைத்து தரப்பு வழக்கறிஞர்களாலும் வரவேற்கப்படும் நிலையில் மக்கள் மத்தியில் சில அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
பன்னிரண்டாம் வகுப்புக்கு பின்னர் பி. காம்., உள்ளிட்ட வணிகவியல் பட்டங்கள்
பி.காம்., பி.பி.ஏ., போன்ற படிப்புகளை படிப்பவர்களும் பட்டப் படிப்பை படிக்கும் காலத்திலேயே ஏ. சி. எஸ்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ., என்ற படிப்புகளையும் ஒரே சமயத்தில் பயிலலாம். இதன் மூலம் சிறந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு சட்டக் கல்வி
சட்டக் கல்வி தொழில்முறை படிப்பு (poressional) என்பதால் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்தவுடன் வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பும் நீதித்துறையில் நீதிபதிகளாக பணியாற்றும் வாய்ப்பும் சட்டம் படித்தவர்களுக்கு கிடைக்கிறது. நீதித்துறையை தவிர பெரும்பாலான தீர்ப்பாயங்கள் (tribunals), ஆணையங்கள் (commissions) போன்றவற்றின் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியில் சேர சட்டப்படிப்பு அவசியமானதாக உள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளில் இணைவதற்கு சட்ட பட்ட படிப்பு பெரிதும் உதவிகரமாக இருப்பதோடு அரசின் சில பணிகளுக்கு சட்ட படிப்பு மிக அவசியமானதாக உள்ளது. தனியார் நிறுவனங்களிலும் சட்ட அலுவலராக பணியாற்ற சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் இணையும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்கள்!