Lokpal

லஞ்சத்துக்கு எதிரான தேசிய அமைப்பான லோக்பாலில் புகார் செய்வது எப்படி?

பிரதம அமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அலுவலர் முதல் கடை நிலை ஊழியர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது. இதனைத் தவிர மத்திய அரசின் வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் அமைப்புகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளையும் வெளிநாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கு மேல் நிதி உதவி பெறும் சங்கங்கள் அல்லது   அறக்கட்டளைகள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது.
Judiciary Manifesto

நீதித்துறை, வழக்கறிஞர் சார்ந்த தேர்தல் அறிக்கை/கேள்விகள்! படியுங்கள்!  பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்! 

பசுமை தீர்ப்பாயம், வருமான வரி தீர்ப்பாயம்  என பல தீர்ப்பாயங்கள் நீதி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இவை சம்பந்தப்பட்ட துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கருத இயலும். தீர்ப்பாயங்களின் நீதி வழங்கும் பணியை சுதந்திரமானதாக மாற்ற நாட்டில் இயங்கும் அனைத்து தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றத்தின் கீழ்  தனி பிரிவாக கொண்டு வர தகுந்த சட்டத்தை அரசியல் கட்சிகள் இயற்ற வாக்குறுதி அளிப்பார்களா?
Child Rights Manifesto

குழந்தைகள் உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்!  பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்! 

குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், இளையோர் நீதி சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், விடுதிகள் நெறிப்படுத்துதல் சட்டம் போன்ற பல சட்டங்கள் உள்ள நிலையில் இவற்றை ஒருங்கிணைத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (Children’s Code) இயற்றப்படுமா?

வாக்காளர்களின் தேர்தல் அறிக்கை -அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!

இந்திய தேசத்தின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் சாமானிய வாக்காளர்களின் தேர்தல் அறிக்கையாக சில கேள்விகள் அரசியல் களத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்கு முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு அரசியல் கட்சியினர் பதிலளிப்பார்களா? இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள கோரிக்கைகளை ஆட்சியில் அமரும் கட்சி நிறைவேற்றி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Right to Service

தேர்தலில் வெற்றி பெற்று ஆறு மாத காலத்துக்குள் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி...

நடைபெறும் தேர்தல் திருவிழாவில் வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சியை அமைக்கும் அரசு ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள் சேவை உரிமை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா?
compulsory voting

வாக்களிக்காவிட்டால் அரசு வேலை, வங்கிக் கடன் கிடையாது. எங்கு தெரியுமா?

1932 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் கட்டாயம் வாக்களிப்பது சட்டமாக உள்ளது. பிரேசிலில் வாக்களிக்க தவறினால் பாஸ்போர்ட்,   பல்கலைக்கழகங்களில் சேர்க்கை,  அரசு வேலை வாய்ப்பு, வங்கியில் கடன் முதலானவற்றை பெற இயலாது.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய “வாக்காளரியல்” (Voterology)

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக “வாக்காளரியல்” என்ற வார்த்தையை உபயோகித்து   அதன் அவசியத்தை தர்க்க ரீதியாக எடுத்துரைப்பதால் (Dr. V.Ramaraj, Father of Voterology, advocates the need of Voterology) டாக்டர் வீ. ராமராஜ்  அவர்களை   “வாக்காளரியலின்  தந்தை”   என அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றால் மிகையல்ல.
PM election

இந்தியாவில் உள்ளது நியாயமற்ற தேர்தல் முறையா? குறைந்த மக்களின் ஓட்டு – ஆனால் பிரதமர் சீட்டு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மக்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு 50 சதவீத மக்கள்  கூட ஆதரிக்காத நிலையில் உள்ள கட்சிகள் பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவர்களை பெற்றவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வர தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? வாக்காளர்களே! நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பீர்களா?.

ஒரே நாடு – ஒரே தேர்தல் ...

இந்திய திருநாட்டில் பதினெட்டாம் மக்களவைக்கான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.  25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி. என். சேஷன் பதவி வகித்த போது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்...

செய்தியாளர் மற்றும்  சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு மாணவர்- இளைஞர்கள்   விண்ணப்பிக்கலாம்

அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா (theconsumerpark.com), பூங்கா இதழ் (thenewspark.in) ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா...