வாக்காளர்களின் தேர்தல் அறிக்கை -அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
இந்திய தேசத்தின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் சாமானிய வாக்காளர்களின் தேர்தல் அறிக்கையாக சில கேள்விகள் அரசியல் களத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்கு முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு அரசியல் கட்சியினர் பதிலளிப்பார்களா? இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள கோரிக்கைகளை ஆட்சியில் அமரும் கட்சி நிறைவேற்றி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆறு மாத காலத்துக்குள் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி...
நடைபெறும் தேர்தல் திருவிழாவில் வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சியை அமைக்கும் அரசு ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள் சேவை உரிமை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா?
வாக்களிக்காவிட்டால் அரசு வேலை, வங்கிக் கடன் கிடையாது. எங்கு தெரியுமா?
1932 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் கட்டாயம் வாக்களிப்பது சட்டமாக உள்ளது. பிரேசிலில் வாக்களிக்க தவறினால் பாஸ்போர்ட், பல்கலைக்கழகங்களில் சேர்க்கை, அரசு வேலை வாய்ப்பு, வங்கியில் கடன் முதலானவற்றை பெற இயலாது.
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய “வாக்காளரியல்” (Voterology)
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக “வாக்காளரியல்” என்ற வார்த்தையை உபயோகித்து அதன் அவசியத்தை தர்க்க ரீதியாக எடுத்துரைப்பதால் (Dr. V.Ramaraj, Father of Voterology, advocates the need of Voterology) டாக்டர் வீ. ராமராஜ் அவர்களை “வாக்காளரியலின் தந்தை” என அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றால் மிகையல்ல.
இந்தியாவில் உள்ளது நியாயமற்ற தேர்தல் முறையா? குறைந்த மக்களின் ஓட்டு – ஆனால் பிரதமர் சீட்டு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மக்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு 50 சதவீத மக்கள் கூட ஆதரிக்காத நிலையில் உள்ள கட்சிகள் பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவர்களை பெற்றவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வர தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? வாக்காளர்களே! நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பீர்களா?.
ஒரே நாடு – ஒரே தேர்தல் ...
இந்திய திருநாட்டில் பதினெட்டாம் மக்களவைக்கான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி. என். சேஷன் பதவி வகித்த போது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்...
செய்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு மாணவர்- இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா (theconsumerpark.com), பூங்கா இதழ் (thenewspark.in) ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா...
மாதவிடாய் கால சானிட்டரி நாப்கின்கள் – வரமா? சாபமா?
பெண்களின் மாதவிடாய் கால உரிமைகளை (Right of Mensuration Period) அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளாலும் தனிநபர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதையே அருவருப்பான செயலாக பலர் கருதுவது கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொடைக்கானல்: அறிந்ததும் அறியாததும் – பழனியில் இருந்து பறப்பது எப்போது?
பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல 65 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தின் போது பழனியில் இருந்து பால சமுத்திரம், பாலாறு அணை, ஐந்து வீட்டு அருவி வழியாக கொடைக்கானலில் உள்ள வில்பட்டி என்ற இடத்துக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூர பயணத்திலேயே செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதையை அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயம் செழிப்பதோடு சுற்றுலா பயணிகளுக்கும் உபயோகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. அதே சமயத்தில் குறுகிய தூரத்தில் கொடைக்கானல் சென்றடைவதால் தற்போதுள்ள வழியில் செல்ல பயணத்துக்கு ஏற்படும் எரிபொருளும் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என்பதே உண்மையாகும்.
அதிக வருமானம் தரக்கூடிய கண்வலி கிழங்கு விவசாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
மனதை கொள்ளை கொள்ளும் அழகை கொண்ட செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் மாநில மலராகும். இந்த மலரே ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகும். மிக அதிகமாக கார்த்திகை மாதத்தில் இந்த பூ மலர்வதால் இதனை கார்த்திகை பூ என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்றவற்றிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.