புத்தாண்டுக்கான நேர மற்றும் செயல் நிர்வாகத்தை வடிவமைப்பது எப்படி?
நீங்கள் மாணவராக இருக்கலாம். வேலை தேடும் இளைஞராக இருக்கலாம். விவசாய தொழிலாளியாக இருக்கலாம். விவசாயியாக இருக்கலாம். அரசு அல்லது தனியார் அமைப்பின் பணியாளராக இருக்கலாம், அரசு அல்லது தனியார் அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கலாம். தங்களது நிலைக்கு ஏற்ப நேர திட்டம் மற்றும் செயல் திட்டம் ஆகியவற்றை வகுத்து செயல்படுங்கள்! வெற்றி பெறுங்கள்! இந்த ஆண்டில் வெற்றிகளை ஈட்டுங்கள்! பூங்கா இதழின் வாழ்த்துக்கள்!
கருணை கொலை சரிதானா? – பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி
ஒரு உயிர் வாழ்ந்தது போதும் என்று நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு உண்டு? இயற்கைக்கா? கடவுளுக்கா? அல்லது படைத்த ஏதோ ஒரு சக்திக்கா? கருணைக்கொலை என்பது ஒரு மனிதனின் நீண்டகால வேதனை மற்றும் வலியை...
1. வெடித்த மனைவி, 2. சிரித்த கணவன் 3. பூரித்த வாரிசுகள் – சிரிக்கவும் சிந்திக்கவும் படிக்க வேண்டிய...
யோவ் இன்னங்கேளுய்யா.. சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான். ஆனா, தினமும் சமைக்கணும். தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்.. வருஷம் ஃபுல்லா சமைக்கணும்... சமைக்கணும்,... நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது... இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது, புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கணும்.
மாத சம்பளம் வாங்குபவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவதில்லை – டீ கடை வெற்றி கதை
நீ இல்லாமவாடா. உன்னையும் சேத்துதான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். உன்னையும் சேத்து என்னோட மாத வருமான இலக்கு 3 லட்சம். எப்டியாவது ஒரு நாளைக்கு 1000 பேர் நம்ம டீ காப்பி குடிக்கிற மாதிரி உருவாகிட்டா போதும். இது சாத்தியம் டா அருள். அது மட்டும் இல்ல டீ காப்பி இல 20 க்கும் அதிகமா வெரைட்டி யோசிச்சி வச்சிருக்கேன். நானே நல்ல டீ தூள், காப்பி தூள் ஆர்டர் எடுத்து நம்ம கடைல வித்தியாசமான முறையில கலக்க போறேன். அதோட சீனா பிஸ்கட், கொரியன் பண்ணு , இப்பிடு புதுசு புதுசா டீக்கு சைடு டிஷ் வச்சி, ம்ம். இன்னும் நிறைய ஐடியா இருக்கு. எதிர்காலத்துல இந்த சிட்டிலையே எல்லாரும் என்னோட டீ காப்பி குடிக்கிற அவளுக்கு வரணும்னு நினைக்கிறன். எப்படியும் வருஷத்துக்கு ஒரு கோடி வருமானம் வர்ற மாதிரி உருவாக்கணும். இது என்னோட நீண்ட கடைசி லட்சியம். இப்போதிக்கி மாசம் ஒரு லட்சம் வர்ற மாதிரி உருவாக்குவோம்.
இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? மற்றவர்களுக்கு தேவைப்படலாம். அனைவருக்கும் அனுப்பி உதவலாமே!
விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
முதல்வர் கைதாவாரா? விஜய் தனித்துப் போட்டியிட்டால்?, மாறும் கூட்டணிகள், ஆளுநர் மாற்றம், லோக் ஆயுக்தாவுக்கு புதியவர்களை நியமிக்க உள்ள...
மாநில ஆளுநர் விரைவில் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை இன்னும் நான்கு ஐந்து நாட்களில் கூட நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான லோக் ஆயுக்தாவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர் காலதாமதம் செய்ய மாட்டார் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது
உடல் நலனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் சர்க்கரை நோய்க்கும் இதயத்தை பாதுகாக்கவும் உதவும் இளநீர். அறிந்த –...
சுண்ணாம்பு சத்து என்று அழைக்கப்படும் பொட்டாசியம் அதிகமாக உள்ள காரணத்தால் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இளநீரில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்க காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
1. காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?. 2. மறுபுறத்தையும் பார்க்க வேண்டும் என்பதை காட்டும் ஒரு நிமிடக்...
"வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா. என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன். குருவியே, நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது".
அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே! மற்றவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்!
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்... அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார், "சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா.?" இப்போது பண்டிதர் சுதாரித்தார். 'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார், "இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...". நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித்தெடுத்தார்... "சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..
முட்டைக்கு ஆபத்து! அறிந்த அறியாத சங்கதிகளை தெரிந்து கொள்ளுங்கள்! இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தமிழகத்தின் நாமக்கல்!
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கு மேல் தமிழகத்திலிருந்து (54.7%) ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை ஏற்றுமதியில் தமிழகம் முதலாம் இடத்தையும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும் கேரளா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகத்திலிருந்து செய்யப்படும் முட்டை ஏற்றுமதியில் 90 சதவீதத்துக்கு மேல் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால்தான் நாமக்கல் முட்டை நகரம் என்று அழைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் லாரி தொழிலும் ஆழ்குழாய் அமைக்கும் தொழிலும் செய்யப்படுகிறது. தரமான பள்ளி. கல்லூரிகளை கொண்டதாகவும் நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது.











