மனிதன் நாகரிகம் தெரிந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு சூழல்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர். அவற்றில் சமூகம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி அவற்றில் ஒரு தலைவன் என்ற அடிப்படையில் வாழ்ந்தனர். அச்சமூகம் ஒரு பெரும் நாடாக மாறும் பட்சத்தில் அவற்றை கட்டுப்படுத்த ஒரு அரசு தோற்றுவிக்கப்பட்டது. இவையே அரசும் அரசியலும் உருவாக ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் இந்தியாவில் மக்களை அரசர்களும் குறுநில மன்னர்களும் ஆங்கிலேயர்களும் பல கட்டமைப்பில் ஆட்சி செய்து வந்தனர். தற்போதைய சூழலில் எவ்வாறு அரசு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய விவாதம் தற்போதைய தேவையாக உள்ளது. ஒரு அரசியல் மாற்றம் என்பது ஒரு தேர்தல் கால கூட்டணி மட்டும் அல்ல.
கடந்த 50 ஆண்டுகளில் உலக வரலாற்றில் அரசியல், பொருளாதார நிகழ்வுகளை தீர்மானித்ததில் கச்சா எண்ணெயின் பங்கு முதன்மையானது. கச்சா எண்ணெயை மையப்படுத்தி பல அரசியல் பேரங்கள் நடந்தன. விமானம், கப்பல், கார் என அனைத்து விதமான நிலக்கரி. பெட்ரோல். டீசல் போன்ற புதை படிவ எரிபொருள்களின் அதிதீவிர பயன்பாடு கரியமில வாயு வெளியேற்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி சென்றுவிட்ட நிலையில் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம் என காலநிலையில் பெரும் மாற்றங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. இந்நிலையில் புவியின் வெப்பநிலையை அதிகரிப்பதை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது உலக புதை படிவ எரிபொருள் பயன்பாட்டில் இருந்து மாற்று ஆற்றலை நோக்கி நகர வேண்டிய நிலை இருக்கிறது. சூரிய ஆற்றல், காற்றாலை என மாற்று எரிசக்தி உருவாக்க தொழில்நுட்பங்கள் உலக நாடுகளில் நிலை மாறியது.
தொழில் புரட்சிக்கு பிறகு அதிக தொழிற்சாலைகள். வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. இது தொடர்ந்தால் உலகின் சராசரி வெப்பநிலை 1.5° செல்சியஸ் அளவை விரைவில் எட்டிவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும், இவற்றை கட்டுப்படுத்தாவிடில் நூற்றாண்டின் இறுதிக்குல் புவியின் சராசரி வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பாரிஸில் கால நிலை தொடர்பாக 195 நாடுகள் இணைந்து ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். இதில் கையொப்பமிட்ட அரசு தலைவர்கள் புவியின் வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைத்திருப்பதாக உறுதி ஏற்று கொண்டனர்.
மாற்று அரசியல் என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் இல்லாமல் இவற்றை தாண்டி அறிவியல் அடிப்படையிலான அரசியல் மாற்றம் அடைந்தால்தான் மாற்று அரசியலை நோக்கி பயணிக்க முடியும். இவ்வாறு உலக நாடுகளில் மாற்றம் என்பது பல அறிவியல் சார்ந்ததாக இருப்பதால்தான் முன்னேறிய நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அரசியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ளது. அறிவியல் கூறும் உண்மையை ஏற்று அதனை அமல்படுத்தும் வகையிலான அரசுகளை உருவாக்கும் மாற்று அரசியலை நோக்கி பயணிப்பது தற்போதைய தேவையாக உள்ளது.
படைப்பு: எஸ். ஏ. சூர்யா, அரசு சட்டக் கல்லூரி மாணவர், நாமக்கல்
Acknowledged truth.Nice work👌