முன்னொரு காலத்தில், இரண்டு பேர் ஒன்றாகப் பயணித்தனர். அவரவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்லும்போது, ஒருவர் அடுத்தவரிடம் கூறினார், “சகோதரரே! நாம் இருவரும் ஒரு வாரமாக ஒன்றாகத் தங்கி இருந்தோம், நான் யாரென்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? அடுத்தவர், “இல்லை, என்னால் முடியவில்லை.” முதல் பயணி, “சகோதரரே, நான் ஒரு புகழ் வாய்ந்த திருடன், ஆனால், நீங்களோ என்னைக் காட்டிலும் மிகச் சிறந்த திருடனாக இருக்கிறீர்கள். என்னை விட 10 அடிகள் முன்னே இருக்கிறீர்கள்”. இரண்டாவது பயணி, “எப்படி?” முதல் பயணி, “உங்களிடம் இருந்து ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நான் தொடர்ந்து உங்களிடம் 7 நாள்களாக, தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எதுவுமே கிடைக்காமல் தோல்வி அடைந்தேன். இந்த மாதிரியான நீண்ட பயணத்தில், நீங்கள் ஏன் உங்களோடு எதுவுமே எடுத்து வரவில்லையே?” என்றார். இதைக் கேட்டவுடன், அந்த இரண்டாவது பயணி, “என்னிடம் விலை மதிப்புள்ள வைரம் ஒன்றும், மேலும் சிறிது வெள்ளி நாணயங்களும் உண்டு”. இதைக் கேட்டவுடன், அந்த முதல் பயணி மிகுந்த வியப்புடன், “அப்படி இருந்தால், நான் அவ்வளவு முயற்சி எடுத்தும் என்னால் ஏன் கண்டுபிடிக்க முடியாமல் ஆகிவிட்டது?“ இரண்டாவது பயணி சிரித்துக்கொண்டே, “நான் வழக்கமாக, அந்த வைரத்தையும், வெள்ளி நாணயங்களையும் ஒரு சிறிய பையில் போட்டு, அதை உங்கள் பையில் போட்டுவிடுவேன். 7 நாள்களாக நீங்கள் என் பையைக் கவனித்தீர்கள். நான் என்னுடைய பையை கவனிக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஆகி விட்டது. ஆகவே எப்படி உங்களுக்கு எதுவும் கிடைக்கும்?” எல்லா மனிதரிடமும் இருப்பது, இதே பிரச்சனைதான். தன்னிடம் இருக்கும் மகிழ்ச்சியை யாருமே, உணர்வது இல்லை. ஆனால் பிறரது மகிழ்ச்சிக்காக வருத்தப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களது கண்கள் எப்போதும் மற்றவர்களின் பைகளின் மீதே இருக்கிறது! எப்போதும் புதிய மகிழ்ச்சியை நமது பைகளில் போடப்படுகிறது. ஆனால், நமது பொட்டணத்தைப் பார்ப்பதற்கு நமக்கு நேரம் இல்லாமல் ஆகிவிட்டது. இதுதான் அனைவரிடமும் உள்ள அடிப்படைப் பிரச்சனையாகும். எப்போது ஒரு மனிதர், அடுத்தவரை உற்றுப் பார்ப்பதை நிறுத்துகிறாரோ, அந்த கணத்திலேயே எல்லா பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். நமது வாழ்க்கைப் பயணத்தில் நமது கவனத்தை எங்கே வைக்கிறோம், எங்கே வைத்தாக வேண்டும்? என்பதை புரிந்து கொள்ளுங்கள்! |
மினசோட்டா என்கிற ஊரில் ஒரு வயதான மனிதர் தனியாக வாழ்ந்துகொண்டு இருந்தார். அவர் தனது தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிர் செய்ய விரும்பினார். இந்த வேலையில், அவருக்கு உதவி செய்யும் நிலையிலான அவரது ஒரே ஒரு மகனும் இப்போது ஜெயிலில் இருக்கிறார். தவறான புரிதலால், இவரது மகனை போலீஸ் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள். வறுமையின் காரணமாக, அவரால் ஜாமீன் பெற்றிட முடியவில்லை. இதுதான் விவசாயம் செய்வதற்குரிய காலம். உருளைக் கிழங்கை, குழி தோண்டி நடுவதற்கான நேரம். ஆனால் உதவி இல்லாமல் அந்த வயதான மனிதர் வேதனை அடைந்தார். அவர் தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “அன்பு மகனே, நான் மிகவும் மோசமாக உணர்கின்றேன். ஏனென்றால், நமது தோட்டத்தில், இந்த ஆண்டு விவசாயம் பண்ண முடியாத நிலைமையில் நான் இருக்கிறேன். உன் அம்மா, தாவரம் வளர்ப்பதை நேசிக்கக் கூடியவள். எனக்கு இப்போது வயதாகிவிட்டதால், தோட்டம் முழுவதும் என்னால் தனியாகத் தோண்டிக்கொண்டு இருக்க முடியாது. நீ மட்டும் ஜெயிலில் இல்லாமல் இருந்தால், எனக்காக தோட்டம் முழுவதையும் நீ தயார் பண்ணி விடுவாய் என்பது எனக்குத் தெரியும்.” – அன்புடன் அப்பா. அவரது கடிதத்திற்குப் பதிலாக அவருடைய மகனிடம் இருந்து தந்தி கிடைக்கப் பெற்றார். “அப்பா, தோட்டத்தினைத் தோண்ட வேண்டாம்! அங்குதான், நான் விலை மதிப்புள்ள துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்!” அடுத்த நாள் காலை, உளவுத் துறையைச் சேர்ந்த 12 பேரும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும் எந்த வித முன்னறிவிப்பும் கொடுக்காமல், தோட்டம் முழுவதும் தோண்டினார்கள். அவர்கள் எதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோண்டினார்களோ, அவை எதுவும் கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தது தெரிந்தது. அந்த வயதான மனிதர் குழப்பம் அடைந்து தன்னுடைய மகனுக்கு, மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதினார்; அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டார். அவரது மகன் பதிலாக, “தோட்டத்திற்குப் போய் உருளைக் கிழங்கை நடுங்கள், அப்பா. நான் இங்கிருந்து கொண்டே உங்களுக்கு மிகச் சிறந்ததை செய்துவிட்டேன்”. நாம் உலகத்தில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நமக்கு சிலவற்றை செய்வதற்கான தீவிரமான விருப்பம் இருந்தால் அது உறுதியாக செய்யப்பட்டுவிடும். சிலவற்றை செய்வதற்கான ஆழ்ந்த நோக்கமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது! ஒரு சக்தி வாய்ந்த விருப்பம் எப்போதும் அந்த செயல் நடைபெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து விடும்! |