Saturday, February 22, 2025
spot_img

வாழ்க்கை வாழுகிறோமா!  வசிக்கிறோமா? வலைதள பக்கத்தில் படித்ததில் பிடித்தது

இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாள்களில் மட்டும் கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது. நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம். ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம் தவம் கிடந்தோம். அந்த காலம்தான் நன்றாக இருந்தது.

ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள். தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள். ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட  பங்காளிகள் இருந்தார்கள். இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..

அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும் மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள் வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள். ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..

ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை. கண்டதை உண்டாலும் செரித்தது. தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது. பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம். உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்

ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது. வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை. பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது. கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது. மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள். ஆசிரியைகளிடம் எளிமை இருந்தது.. 

படுக்கையை எதிர்பாராமல் பாயில் உறங்கினோம். தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே அவர்கள் மடி மீது தலை வைத்து நாம் உறங்கிய தருணம் கண்டோம். பெரியப்பா, சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய. பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை.

அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது. பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டார்கள். ஆத்தங்கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது. பையில் இருக்கும் ஐந்து ரூபாய்க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம். ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலாக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்

செல்போன் எதுவும் இல்லை. ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள். ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது. தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள். காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்

ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம். மிகச்சிறிய வயதிலெல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..

மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம்! இப்பொழுது வசிக்கிறோம்! அவ்வளவே…!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles