Advertisement

ஒவ்வொரு தருணமும் ஒரு தேர்வு – ஒன்றுமே இல்லாத மரணம் 

ஒவ்வொரு தருணமும் ஒரு தேர்வு

ஒரு இளம் பெண்  காரை ஓட்டிக்கொண்டு சென்றாள். பக்கத்து இருக்கையில்,  அவளது அப்பா அமர்ந்திருந்தார். சில மைல் தூரம் சென்ற பிறகு, அவர்கள்  ஒரு புயல் காற்றை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் பயந்து, அப்பா! நான் இப்போது என்ன செய்வது?  என்று கேட்டாள்.  தொடர்ந்து காரை ஓட்டு, என்று அமைதியாக தந்தை பதில் கூறினார். அந்தப் பெண்ணும் காரை ஓட்டிக் கொண்டே இருந்தாள். 

சில மீட்டர் தொலைவு சென்ற பிறகு, மற்ற கார்கள் புயல் காற்றால் ஒரு பக்கமாக இழுத்துத் தள்ளப்படுவதைப் பார்த்தாள். காற்று மிகவும் மோசமாக இருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போன அந்தப் பெண் அப்பாவிடம்,  நாமும் புயல் காற்றால் இழுக்கப்படுவோமா? என்றாள்.     இல்லை. நீ காரை மட்டும் பார்த்து, தொடர்ந்து ஓட்டு, என்றார். அந்தப் பெண்ணும்  அப்படியே செய்தாள்.   

சிறிது தூரம் சென்ற பிறகு,  நிறைய கார்கள் புயலால், இழுக்கப்படுவதைப் பார்த்தாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் காரின் வேகத்தைக் குறைத்து அப்பாவிடம், புயல் எழுப்பிய தூசியால், என்னால் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை.  புயல் காற்று மிகவும் பயங்கரமாக வீசுகிறது.  எல்லோரையும் இழுத்துத் தள்ளுகிறது என்றாள். ஆனால், அவள் அப்பா நீ காரை மட்டும் ஓட்டிக்கொண்டு இரு என்றார். இன்னும் கொஞ்ச தூரம், அவள் காரை ஓட்டிக் கொண்டு சென்றாள்.  

புயல் அதன் உச்சத்தை எட்டியது.  இப்போது அந்தப் பெண்ணுக்கு மிகவும் கடினமாக இருந்தது. முன்னால் இருக்கும் எதுவுமே தெரியவில்லை.  பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தலாம் என அவள் விரும்பினாலும், அப்பா  புயலின் நடுவே தொடர்ந்து ஓட்டச் சொன்னதால், அவள் காரை தொடர்ந்து ஓட்டினாள்.

புயலின் ஊடாக சிறிது மைல் தூரம் ஓட்டிய பிறகு, சீக்கிரமே அந்த சூழ்நிலையில்  நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  முன்னால் உள்ள எல்லாமே தெளிவாகத் தெரிந்தன.  இன்னும் சிறிது மைல் கடந்த பிறகு, அவர்கள் முற்றிலுமாக புயலை விட்டு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்தனர். இப்போது அந்தப் பெண்ணின் அப்பா, அவளிடம்  நீ காரை நிறுத்தி விட்டு வெளியே வரலாம். இப்போதுதான், நாம் புயலை விட்டு பாதுகாப்பாக வந்து விட்டோமே! என்றார். எதற்காக காரை நிறுத்த வேண்டும்? என்றாள். மற்றவர்களைப் போல நீயும் புயலுக்கு நடுவில் நிறுத்தி இருந்தால், நீ இப்போதும்  புயலில் போராடிக்கொண்டுதான் இருப்பாய். நீ அப்படிச் செய்யாமல்,  தொடர்ந்து காரை ஓட்டிக்கொண்டு வந்ததால், நீ புயலைக் கடந்து விட்டாய்.

எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது, தோல்வி என்பதே வராது. நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு  ஆளாகும் போது,  வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து உறுதியாக வெளியே வந்துவிடலாம்.  

உன் மேல் நம்பிக்கை வைத்து, முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடி. சவால்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.

ஒன்றுமே இல்லாத மரணம் 

‘டாடு ஹென்றி’ என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட  ‘ஒன்றுமே இல்லாத மரணம் (Die Empty)’ என்கிற இந்த புத்தகம் அழகானது, படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆசிரியர் ஒரு வியாபார சம்பந்தமான கலந்தாய்வில்  இருக்கும் போது, அங்கு அவர் கேட்ட சிலவற்றால் ஈர்க்கப்பட்டு  இந்த புத்தகத்தை அவர் எழுதினார். அந்தக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தவர்,  பார்வையாளர்களிடம்,  “உலகத்திலேயே மிகப் பெரிய செல்வச் செழிப்பு உள்ள இடம் எது?” என்று கேட்டார்.  

பார்வையாளர்களில் ஒருவர், “எண்ணெய் வளம் நிறைந்த  வளைகுடா நாடுகள்” என்றார்.   மற்றொருவர், ”வைரச் சுரங்கங்கள் உள்ள ஆப்ரிக்கா” என்றார். மேலும் சில பதில்களுக்குப் பிறகு, அந்த விழாவை நடத்துபவர் கூறினார்,  “இல்லை. அது கல்லறைதான்”.    ஆமாம்! இதுதான்  உலகிலேயே செழிப்பு உள்ள இடம்.    ஏனென்றால், பல லட்சக் கணக்கான மக்கள் மறைகிறார்கள். “அவர்கள்  மரணித்து விடுகின்றனர்” –மற்றவர்களுக்குப் பயன் தரும் மற்றும் வெளிச்சத்திற்கு வராத நிறைய மதிப்பு வாய்ந்த கருத்துக்களை, சுமந்தவாறே  அவர்கள் மறைந்து விடுகின்றனர். இவை எல்லாமே  அவர்களோடு சேர்ந்து, கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டன.    

இந்த பதிலால் ஈர்க்கப்பட்டு, டாட் ஹென்றி “ஒன்றுமே இல்லாத மரணம்” என்ற புத்தகத்தை எழுதினார். அவர்  தன்னால் முடிந்தவரை மக்களை ஊக்குவிக்கும்படி செய்தார்.    அதாவது, மக்கள்  அவர்களுடைய கருத்துக்களையும், உள்ளுறை சக்திகளையும், காலம் தாழ்த்தாமல் உங்கள் சமூகத்திற்கு ஏதாவது பயன்படும்படி செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். 

அவருடைய நூலில், மிகவும் அழகானது என்னவெனில்: உன்னிடம் இருக்கும் மிகச்சிறந்ததை எடுத்துக் கொண்டு,  உன் கல்லறைக்குள் போகாதே… “எப்போதுமே ஒன்றுமே இல்லாமல் இறப்பதை  தேர்ந்தெடுங்கள்.” இந்த வாக்கியத்தின் உண்மையான பொருள் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் நல்லவை அனைத்தையும், இந்த உலகத்திற்குக் கொடுத்து விடுங்கள்! நாம் இந்த உலகத்தை விட்டு மறைவதற்கு முன் இதை செய்து விட்டு, ஒன்றுமே இல்லாமல் இறந்துவிடுங்கள். 

நம்மிடம் எண்ணங்கள் இருந்தால், அதை நாம் நிறைவேற்றிட வேண்டும்.    நம்மிடம் அறிவு இருந்தால், அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்மிடம் லட்சியம் இருந்தால், அதை சாதிக்க வேண்டும். அன்பு செலுத்து,  பகிர்ந்து கொள், விநியோகித்து விடு. எல்லாவற்றையும்  உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாதே. “நமது வாழ்க்கையின்  இறுதி நேரம் வரும் போது, நமது கையில் ஒரு நாற்று இருந்தால்,  அதையும் உடனே நட்டு விடுங்கள்.“  நம்முள் இருக்கும் நல்லவற்றின் அணுத்துகள்கள் ஒவ்வொன்றையும் கொடுத்து பரவச் செய்யுங்கள். நாம் ஒன்றுமில்லாமல் மரணிப்போம்.

நம்முடைய வெகுமதியை,  பொருள் சார்ந்த வகைகளில் அளவீடு செய்திடக்கூடாது;  ஆனால்,நாம் யாரோ ஒருவர், அவர் தாம் போய் சேர வேண்டிய இடத்திற்கு அல்லது  லட்சியம் ஈடேறுவதற்கு உதவி செய்திட நம்மால் முடிகிறதா என்பதை வைத்தே காண வேண்டும்.சில நேரங்களில்  சின்னஞ்சிறு ஈர்ப்பும்,  உத்வேகமும்தான் அவர்களுக்குத் தேவை !

ஒளவையார் எவ்வளவுதான் அழகாக சொல்லி இருக்கிறார்

(01) பாராத பயிரும் கெடும்.

(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

(03) கேளாத கடனும் கெடும்.

(04) கேட்கும்போது உறவு கெடும்.

(05) தேடாத செல்வம் கெடும்.

(06) தெகிட்டினால் விருந்து கெடும்.

(07) ஓதாத கல்வி கெடும்.

(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

(09) சேராத உறவும் கெடும்.

(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

(11) நாடாத நட்பும் கெடும்.

(12) நயமில்லா சொல்லும் கெடும்.

(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

(15) பிரிவால் இன்பம் கெடும்.

(16) பணத்தால் அமைதி கெடும்.

(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

(18) சிந்திக்காத செயலும் கெடும்.

(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

(20) சுயமில்லா வேலை கெடும்.

(21) மோகித்தால் முறைமை கெடும்.

(22) முறையற்ற உறவும் கெடும்.

(23) அச்சத்தால் வீரம் கெடும்.

(24) அறியாமையால் முடிவு கெடும்.

(25) உழுவாத நிலமும் கெடும்.

(26)உழைக்காத உடலும்  கெடும்.

(27) இறைக்காத கிணறும் கெடும்.

(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

(31) தோகையினால் துறவு கெடும்.

(32) துணையில்லா வாழ்வு கெடும்.

(33) ஓய்வில்லா முதுமை கெடும்.

(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

(35) அளவில்லா ஆசை கெடும்.

(36) அச்சப்படும் கோழை கெடும்.

(37) இலக்கில்லா பயணம் கெடும்.

(38) இச்சையினால் உள்ளம் கெடும்.

(39) உண்மையில்லா காதல் கெடும்.

(40) உணர்வில்லாத இனமும் கெடும்.

(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

(43) தூண்டாத திரியும் கெடும்.

(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

(45) காய்க்காத மரமும் கெடும்.

(46) காடழிந்தால் மழையும் கெடும்.

(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

(49) வசிக்காத வீடும் கெடும்.

(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.

(51) குளிக்காத மேனி கெடும்.

(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

(53) பொய்யான அழகும் கெடும்.

(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

(55) துடிப்பில்லா இளமை கெடும்.

(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

(57) தூங்காத இரவு கெடும்.

(58) தூங்கினால் பகலும் கெடும்.

(59) கவனமில்லா செயலும் கெடும்.

(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles