Advertisement

பன்னிரண்டாம் வகுப்புக்கு பின்னர் பி. காம்., உள்ளிட்ட வணிகவியல் பட்டங்கள்

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் வணிகவியல் (commerce) தொடர்பான பட்டங்களை  படிப்பதற்கு   ஒரு பிரிவு மாணவர்களிடையே எப்போதும் ஆர்வம் இருந்து வருகிறது.  பி. காம்., (பொது) – B.Com., (General) என்ற வணிகவியல் பட்டம்தான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அனைத்து கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போதும் பெரும்பாலான கல்லூரியில் இந்த பட்டப் படிப்பு போதிக்கப்படுகிறது. சமீப காலமாக, இந்த பட்டப் படிப்பை படிப்பவருக்கு குறிப்பிட்ட சிறப்பு பாடங்களையும் (Specialization) இணைத்து வணிகவியல் பட்டப்படிப்பை பல கல்லூரிகள் வழங்குகின்றன. உதாரணங்கள் பின்வருமாறு.

  • பி. காம்., (தொழில்முறை) – B.Com., (Professional)
  • பி. காம்., (ஹானர்ஸ்)   – B.Com., (Honours)
  • பி. காம்., (கணினி அறிவியல்) – B.Com., (Computer Science specialization)
  • பி. காம்., (வங்கி நிர்வாகம்) – B.Com., (Bank Management specialization)
  • பி. காம்., (வரிவிதிப்பு) – B.Com., (Taxation specialization)
  • பி. காம்., (பயண மேலாண்மை) – B.Com., (Travel Management specialization)

பி. காம்., பட்டப்படிப்பை போலவே மாணவர்கள் அதிகமாக அதிகம் ஆர்வம் காட்டும் மற்றொரு படிப்பு பி.பி.ஏ., (Bachelor of Business Management). மேலும், பி.பி.எம்., (Bachelor of Banking Management)  பி.எஃப். எம்., (Bachelor of Financial Management) போன்ற வணிகவியல் சார்ந்த பட்டங்களும் சில கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன.

இத்தகைய வணிகவியல் பட்டங்களை பெறுவதன் மூலம் பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக கொண்டுள்ள அரசு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளும் தனியார் துறை வேலை வாய்ப்புகளும் சுய தொழிலுக்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்கு உருவாகிறது. எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற முதுநிலை பட்டங்களையும் படிக்க இத்தகைய கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி  செக்கரட்டரிஸ் (The Institute of Company Secretaries) என்ற அரசு சார்பான நிறுவனம் வழங்கும் செயலகப் பணியில்  ஏ.சி.எஸ்., (Associate  in Company Secretaryship) என்ற படிப்பையும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் படிக்கலாம்.  இது குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.icsi.edu/home/) மூலம் அறிந்து கொள்ளலாம். நிறுவன செயலக படிப்பு நல்ல வேலை வாய்ப்பையும் தொழில்முறையையும் உருவாக்கக்கூடியதாக உள்ளது.

இதே போலவே அரசு சார்பான நிறுவனங்களான தி இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டென்ஸ் மற்றும்   தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட்  அக்கவுண்டென்ஸ் வழங்கும் ஆடிட்டர் (Auditor) பணிக்கான சி.ஏ., (C.A.,) படிப்பையும் செலவு கணக்காளர் (Cost Accountant) பணிக்கான  ஐ.சி.டபிள்யூ.ஏ., (IC.W.A.,) படிப்பையும் மாணவர்கள் படிக்க வாய்ப்புகள் உள்ளன.  இதன் மூலம் அரசு துறையிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளும்   சுய வேலை வாய்ப்புகளும் கிடைக்கிறது. இந்த படிப்புகள் குறித்த முழுமையான விவரங்களை  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.icai.org/  & https://icmai.in/icmai/ ) அறிந்து கொள்ளலாம்.

பி.காம்., பி.பி.ஏ., போன்ற படிப்புகளை படிப்பவர்களும் பட்டப் படிப்பை படிக்கும் காலத்திலேயே ஏ. சி. எஸ்.,  சி.ஏ.,  ஐ.சி.டபிள்யூ. ஏ.,  என்ற படிப்புகளையும் ஒரே சமயத்தில் பயிலலாம். இதன் மூலம் சிறந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles