இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோமநாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் வேற்று கிரகவாசிகள் குறித்து பேசிய தகவல்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் (planets) உள்ளன. நமது சூரிய குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட செரெஸ், புளூட்டோ, ஹௌமியா, மேக்மேக் மற்றும் எரிஸ் ஐந்து ஆகிய குள்ள கோள்கள் (dwarf planets) உள்ளன. பூமியை சுற்றும் இயற்கையான செயற்கைக்கோளாக அறியப்படுவது நிலவாகும். இதைப் போலவே சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களுக்கும் சுமார் 300 இயற்கையான செயற்கைக்கோள்கள் நிலாவைப் போல உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
சூரிய நட்சத்திரத்தை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதை சூரிய மண்டலம் என அழைக்கிறோம். பால்வீதி முழுவதும் கோடிக்கணக்கான கோள்கள் சிதறி கிடப்பதாக அறியப்படும் நிலையில், மற்ற நட்சத்திரங்களை சுமார் 5000-க்கு மேற்பட்ட கோள்கள் சுற்றி வருவதாக அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன இந்த கண்டுபிடிப்புகள் ஆரம்ப நிலையிலே உள்ளன.
பூமியில் மனிதர்கள் வாழ்வதைப் போல வேற்று கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினம் வாழ்கிறதா? என்பது குறித்து ஆராய்ச்சியை கடந்த நூறாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். வளிமண்டலத்தில் பூமியில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் மற்றும் ரசாயன அடையாளங்கள் அல்லாமல் வேற்று கிரகங்களிலிருந்து ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்கும் முடியும் என்ற நம்பிக்கை அறிவியல் அறிஞர்களுக்கு இருந்து வருகிறது.
ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கருதப்பட்டால் நாம் வேற்றுக்கிரகவாசிகளை அறிந்து கொள்ள முற்படுவதைப் போல அவர்களும் பூமியை ஆய்வு செய்து நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவார்கள் என்பது இயல்பானது. நம்மால் விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றை வைத்து வேற்று கிரகவாசிகள் நம்மை அடையாளம் கண்டு கொள்ள இயலும். நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்தால் வேற்றுக்கிரகவாசிகள் நம்மை கண்டுபிடிப்பதற்கு பெரிய அதிசயத்தை நிகழ்த்த வேண்டியதில்லை என்று வேற்றுக்கிரக நுண்ணறிவுக்கான தேடல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பூமிக்கு வருவதாக பல வெளிநாட்டு திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வேற்றுக்கிரகவாசிகள் உலகுக்கு வந்து சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் உலகில் அவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்றும் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக முன்னேறி உள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியிருந்தால் அவரது அவர்களது வளர்ச்சி நம்மை விட பத்தாயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நிறுவனத்தின் தலைவர் கூறுவது சாத்திய கூறுகளுக்கான வாய்ப்புகளை கண்டறியும் முயற்சிக்கான தூண்டலாகும். கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவியல் உலகம் வேறு – தற்போது வேறு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவியல் உலகம் வேறு – தற்போது வேறு. இன்னும் 50 ஆண்டுகளில் எத்தகைய அறிவியல் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது? என்பது தெரியவில்லை.
உஷாரய்யா! உஷாரு! நுகர்வோர் ஐயா, உஷாரு! https://theconsumerpark.com/cibel-sarfasi-assets-reconstruction