Advertisement

இன்று அழியும் வனவிலங்குகள் – பல்லின உயிர் சுழற்சி  தடைபட்டால் நாளை என்ன நடக்கும்?

பல்லுயிர் பாதுகாப்பு

பல்லுயிர் என்பது பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிரினங்களையும் அதை ஆதரிக்கும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் குறிக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்குவதில் அதன் பங்கு மற்றும் உலகளாவிய காலநிலை நிலைத்தன்மையை பராமரிப்பது உட்பட பல காரணங்களுக்காக  பல்லுயிர் முக்கியமானது. காடழிப்பு, வேட்டையாடுதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற மனித நடவடிக்கைகளால் பல்லுயிர் பெருக்கம் குறைந்து வருகிறது. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்காவிட்டால் சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்துக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

காடுகள் அழிப்பு

கடந்த 50 ஆண்டுகளில் இந்த பூமியானது  மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்களின் காரணமாக விரைவான வளர்ச்சியை கண்டுள்ளதோடு  உலகம் முழுவதும் நூற்றுக்கனக்கான மில்லியன் ஏக்கர் காடுகளை அழிந்துள்ளது. இதனால், வனவிலங்குகள் நாளுக்கு நாள் வாழ்விடங்களையும்    உணவையும் இழந்து வருகின்றன.

 இந்தியாவில்

பூமியில் வனவிலங்குகளின் ஆறாவது ஒட்டுமொத்த அழிவு (sixth mass extinction of wildlife species) அழிவின் விளிம்பில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகளுடன் வேகமாக நகர்ந்து கொண்டு உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், மனித செயல்பாடு மற்றும் நில ஆக்கிரமிப்பு வேகமாக அதிகரித்து வருவதில் ஆச்சிரியம் இல்லை. இந்தியாவில் வேகமாக அழிந்து வரும் ஆறு உயிரினங்களை   பாதுகாக்கபட்ட உயிரினகளாக ஐக்கிய நாடுகளில் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature) அங்கீகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சோலைமந்தி குரங்குகள் (Lion-tailed macaque)

சோலைமந்தி குரங்குகள் கருப்பு நிறத்தில் வெள்ளை மேனிகளுடன் இருக்கும். இந்த குரங்குகளை மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் பார்க்கலாம். அதிக மக்கள் தொகை மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அவற்றின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. மேலும் அவற்றின் தோல் மற்றும் இறைச்சி மருத்துவ குணங்கள் என்று கருதப்படுவதால் வேட்டையாடப்படுகிறது.

வரையாடு (Nilgiri Tahr)

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளிலும் நீலகிரி மலைத்தொடரிலும் வசித்து வரும் உயிரினம் நீலகிரி தஹர் ஆகும். இவை ஆடுகளைப் போல தோற்றமளிப்பதோடு வரையாடுகளை விட அளவில் பெரிய  மற்றும் தனித்துவமான வலைந்த கொம்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 100 கிலோ எடை அளவு வரை வளரும் இந்த உயிரினத்தின் எண்ணிக்கை வேட்டையாடுதல் காரணமாக   3,122 மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் மான் (Kashmir Red Stag)

உள்ளூர் மக்களால் ஹங்குல் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மான் காஷ்மீரின் மாநில விலங்காக உள்ளது. சிவப்பு-பழுப்பு நிற கோட் காரணமாக இவை சிவப்பு மான் என்றும் அழைக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரின் மலைப்பிரதேசங்களிலும் இமாச்சலப் பிரதேசத்தின் வடக்கு பகுதிகளிலும் இந்த மான் காணப்படுகிறது. 1940 – களில், 3,000 முதல் 5,000 வரை இருந்த இந்த வகை மான்கள் மக்கள்தொகை   2023 -ல் 289 மட்டுமே இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுதல் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை அதிகமாக ஆக்கிரமிப்பதின் மூலம் அழிந்து வரும் இந்த வகை மான்களை இயற்கை பாதுகப்புக்கான சர்வதேச ஒன்றியம் அழிந்துவரும் உயிரனத்திற்கான பட்டியலில் சேர்த்துள்ளது. 

இந்திய காண்டாமிருகம் (Greater One-Horned Rhino)

காண்டாமிருகங்கள் மிகவும் அழிந்து வரும் நிலையில் இருக்கும் விலங்குகளில் ஒன்றாகும். துரதிஷ்டவசமாக காண்டாமிருகத்தின் தனித்துவமான கொம்பு செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கருப்பு சந்தையில் மக்கள் காண்டாமிருகத்தின் தோல், பற்கள் மற்றும் கொம்புகள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதால் இதற்காக இந்த காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகிறது. இந்திய காண்டாமிருகங்கள் ஒரு காலத்தில் இந்தோ-கங்கை சமவெளி முழுவதிலும் பரவியிருந்தன, ஆனால், அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் விவசாய வளர்ச்சி காரணமாக வட இந்தியா மற்றும் தெற்கு நேபாளத்தில் 11 பகுதிகளில் மட்டுமே தற்போது இந்த மிருகம் காணப்படுகிறது. கடந்த  2018 ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 3,588 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. இந்திய காண்டாமிருககளை இயற்கை பாதுகப்புக்கான சர்வதேச ஒன்றியம் அழிந்துவரும் உயிரனத்திற்கான பட்டியலில் சேர்த்துள்ளது. 

அமூர் சிறுத்தைகள்(Amur Leopard)

பூமியில் உள்ள அனைத்து பெரிய பூனைகளிலும் அமுர் சிறுத்தைகள் மிகவும் ஆபத்தான அழிவு நிலையில் இருக்கும் உயிரினமாக கருதப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் இயற்கை பாதுகப்புக்கான சர்வதேச ஒன்றிய சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டபோது அவைகள் சுமார் 92 இருந்த போதிலும், இப்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 70 ஆக குறைந்துள்ளது.  துரதிஷ்டவசமாக, அமுர் சிறுத்தைகள் பெரும்பாலும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் அழகான ரோமங்கள், சந்தையில் நல்ல விலைக்கு செல்கின்றது.

கடல் ஆமைகள் (Sea Turtles)

ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இரண்டு வகையான கடல் ஆமைகள் உள்ளன. கெம்ப்ஸ் ரிட்லி ஆமைகள் மற்றும் ஹாக்ஸ்பில் ஆமைகள் உள்ளது. இவை இரண்டுமே இப்போது எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. கடல் ஆமைகளுக்கு அச்சுறுத்தல் அவை மிகப்பெரிய அளவில் வேட்டையாடப்படுவதாகும். அவற்றின் முட்டைகள், ஓடுகள், தோல் மற்றும் இறைச்சி ஆகியவை கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

சர்வதேச ஒன்றியம்

1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) என்பது அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். 45, 300 க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர உயிரினங்கள் அழிந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்த அமைப்பு தெரிகிறது. இந்த சிவப்பு பட்டியல் என்பது உலகின் பல்லுயிர் ஆரோக்கியத்தின் முக்கியமான குறிகாட்டியாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் உயிர் வாழ தேவையான பிராணவாயு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு மனித குலத்துக்கு மிகுந்த ஆபத்தாக அமையும் என்பதை மறந்து விடக்கூடாது.

இரா. ராஜ ஹரிஹரன், நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் – பயிற்சி கட்டுரையாளர்/ அரசு சட்டக் கல்லூரி மாணவர்

இரா. இராஜஹரிஹரன்
இரா. இராஜஹரிஹரன்
நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் - பயிற்சி கட்டுரையாளர்/ அரசு சட்டக் கல்லூரி மாணவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles