நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து இயற்கையின் கொடையானது பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. பஞ்சம் என்பதன் மறு பொருள் ஐந்து என்பதாகும். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குரிய சிவாலயங்களாகும்.
பஞ்சபூத சிவாலயங்களும் அமைந்துள்ள இடங்களும் |
பூதம்- நிலம் – பிருத்வி லிங்க கோவில், ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் |
பூதம்- நெருப்பு – அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்க கோவில் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை |
பூதம்- நீர் – அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்க கோவில் ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல், திருச்சி |
பூதம்- ஆகாயம் – ஆகாச லிங்க கோவில் சிதம்பரம் நடராசர் கோயில், சிதம்பரம் |
பூதம்- காற்று – வாயு லிங்க கோவில் காளத்தீசுவரர் கோயில், திருக்காளத்தி சித்தூர் அருகில், ஆந்திரா |