Friday, November 14, 2025
spot_img

தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தேர்தல் தீர்ப்பாயங்களும் தேவை.  “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.

ஜனநாயகத்தில் உச்ச அதிகாரமான வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலக அரசியல் போக்குகளையும் வாக்கு மட்டுமே தீர்மானிக்கிறது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது, ஜனநாயகம் தொடங்குகிறது. ஜனநாயகத்தின் மூன்று அம்சங்களான வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றில் லஞ்சமும் ஊழலும் புகுந்தால், ஊழல் இல்லாத ஆட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்பு (shared responsibility) குடிமக்களுக்கு உள்ளது என்றார் ராமராஜ்.

வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். மக்களுக்கு நலன் வழங்கும் மக்களாட்சி உருவாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும்.  வாக்காளர் விழிப்புணர்வு ஊழலை ஒழிக்க அவசியமான ஒன்றாகும் என்று ராமராஜ் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள் நடத்த தனி அமைப்பு இருப்பதைப் போல வாக்காளரியல் கல்வியை வழங்கவும் வாக்காளர்களது உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (National Commission for Protection of Voters’ Rights and Education) ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Election Authorities) என வகைப்படுத்தி அவற்றிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களான சட்டம் இயற்றும் அமைப்புகளும் அரசும் நீதித்துறையும் உள்ளதை போல தேர்தல் நிறுவனங்களும் ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகும் என ராமராஜ் தெரிவித்தார். மக்கள் நல ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதிக்கான பாதையே வாக்காளரியல். இதன் மூலம் வாக்கு, வாக்காளர், தேர்தல் ஆகிய அம்சங்களில் ஊழலை ஒழிக்க இயலும்.

நல்லாட்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள்  மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது.  இதைப்போலவே முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார்.

லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. லோக் ஆயுக்தா என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். இந்த வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

Courtesy: Hindu Tamil daily
Courtesy: Dinamani daily
Courtesy: Dinakaran daily
Courtesy: Malaimurasu daily
Courtesy: Thekathier daily
Courtesy: Dinathanthi daily
Courtesy: Dinamalar daily
Courtesy: Times of India daily
Courtesy: The New Indian Express daily
Courtesy: The Hindu daily

https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/create-awareness-on-lokpal-and-lokayukta-bar-associations-urged/article70248749.ece

https://timesofindia.indiatimes.com/city/trichy/educating-public-about-lokayukta-needed-to-root-out-corruption/articleshow/125139797.cms

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

“Voters above all else” is the central idea of ​​voterologism. A National Voters Rights Protection Commission and special election tribunals should be set up. – Tamil Nadu Lokayukta Member Dr. V. Ramaraj

A seminar on Lokpal and Lokayukta was held on behalf of the Trichy Bar Association, presided over by Trichy Principal District Judge M. Christopher. In which Tamil Nadu Lokayukta Member Dr. V. Ramaraj participated as a special guest and spoke.

The supreme power in a democracy is the right to vote. Only the vote determines the nature of a democratic government and the political trends of the world. When voters vote in elections, democracy begins. If bribery and corruption enter the three aspects of democracy – votes, voters and elections, we cannot expect a government free from corruption. Citizens have a shared responsibility to eradicate corruption from the vote, voters and elections, which are the foundation of democracy, said Ramaraj.

Voterology is the study and research of votes, voters and elections. Voterology should be taught to all voters to create a democracy that benefits the people. “Voters above all else” is the central idea of ​​Voterologism. The work of Voterologism is to spread the principles of voterology. Ramaraj said that voter awareness is essential to eradicate corruption.

Just as every country has a separate organization to conduct elections, a National Commission for Protection of Voters’ Rights and Education should be set up to provide voter education and protect the rights of voters, and special election tribunals should be set up to hear and dispose of election cases within six months. The Election Commission, the Voters’ Commission and the Election Tribunal should be classified as Election Authorities and given constitutional status. Ramaraj said that election institutions are important pillars of democracy, just like the legislative bodies, the government and the judiciary, which are the pillars of democracy. Voterology is the path to people’s welfare democracy, good governance and peace. Through this, corruption can be eradicated in the aspects of vote, voters and elections.

Corruption is the biggest enemy of good governance, global peace and the well-being of the people. The Lokpal has been set up to investigate allegations of corruption against the Prime Minister, Union Ministers and all officers of the Central Government. Similarly, the Tamil Nadu Lokayukta has been set up to investigate allegations of corruption against the Chief Minister, ministers, IAS and IPS officers and other state government officers. V. Ramaraj stressed that bar associations and voluntary organizations should work to increase awareness among the people about the Lokpal and the Lokayukta.

Most people do not know the difference between Lokayukta and Lok Adalat. Lok Ayukta is a state-level high-level investigation body against corruption. Lok Adalat is a mechanism for resolving cases through conciliation and negotiation in all courts. Ramaraj requested everyone to understand this difference.

Note: The term “Voterology” (வாக்காளரியல் in Tamil) was coined by Dr.V.Ramaraj and it made its debut in his book named “Respectable Voter” in 1996 and an article of Dinamani, a Tamil daily on August 20, 1999. Voterologism is a newly coined word by Dr. V.Ramaraj, derived from “voterology”. Voterologism is used to refer to the doctrines of voterology (school of thought advanced by Dr. V. Ramaraj), that prioritizes the actions, will, or opinions of the voters above all else. Dr. V. Ramaraj is recognized as the “Father of Voterology” for his contributions to understanding voter dynamics and promoting voter awareness.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles