தமிழ்நாடு பிஎஸ்என்எல் சார்பில் தலைமை பொது மேலாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
ஊழலை ஒழிப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதே இந்த ஆண்டின் ஊழல் விழிப்பு பணி வாரத்தின் கருப்பொருளாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கையொப்பம் செய்துள்ளன. இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாட்டின்அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டின்படி செயல்பட வேண்டும், இது அவர்களின் பகிரப்பட்ட பொறுப்பாகும். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஊழலை ஒழிப்பதில் தங்கள் பங்கைச் செய்ய வேண்டிய பகிரப்பட்ட பொறுப்பைக் கொண்டுள்ளனர் என ராமராஜ் தெரிவித்தார்.

ஊழல் இல்லாத நிர்வாகம் மற்றும் உலக அமைதிக்கான அடித்தளம் வாக்காளர் விழிப்புணர்வு ஆகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளரியல் (Voterology) கல்வியை பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” என்பது. வாக்காளரிலிசத்தின் மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் உச்ச அதிகாரமான வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களிடம் உள்ளது. ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும் உலக அரசியல் போக்குகளையும் வாக்கு மட்டுமே தீர்மானிக்கிறது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது, ஜனநாயகம் தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல்கள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், ஜனநாயகத்தின் மூன்று அம்சங்களான வாக்குகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழல் தொடங்கினால், ஊழல் இல்லாத ஜனநாயக ஆட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்பு (shared responsibility) வாக்காளர்களுக்கு உள்ளது என்றார் ராமராஜ்.
இந்தியாவில் ஊழலைத் தடுக்க ஊழல் தடுப்புச் சட்டம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், மத்திய லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் மற்றும் மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் இந்தியாவில் ஊழலை தடுக்க இயற்றப்பட்டுள்ளன. தேசிய அளவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு ஆணையம் லோக்பால் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநிலங்களில் மாநில ஊழல் கண்காணிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான காவல் பிரிவு, மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், மற்றும் லோக் ஆயுக்தா ஊழலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் கண்காணிப்பு பிரிவு செயல் பட்டு வருகிறது.
ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்தாலும் இவற்றை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதுமான அளவு இருந்தால்தான் ஊழலை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மற்றும் அமைப்புகள் குறித்த கல்வி குறைந்தபட்சம் ஒரு பாடமாக மாணவர்களுக்கு இருக்க வேண்டும். வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம் போன்ற பிரிவுகளின் முதுகலை பட்டப்படிப்புகள் பல பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகின்றன ஆனால் நல்லாட்சி (good governance) தொடர்பான முதுகலை பட்டப் படிப்புகள் இந்தியாவில் ஒரு சதவீதத்துக்கும் கீழான பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு கல்வியில் முதுகலை பட்டப் படிப்புகளை அதிக அளவில் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமராஜ் வலியுறுத்தினார்
இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு – பகிரப்பட்ட பொறுப்பிற்கான வலுவான மன உறுதி குறித்து முதன்மை பொது மேலாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்) டி.எம். பாஸ்கரன் சொற்பொழிவு ஆற்றினார். கண்காணிப்புப் பிரிவின் துணைப் பொது மேலாளர் திரு. தனராஜ், பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
The first step to eradicate corruption is eliminating corruption from vote, voters and elections. – Dr. V. Ramaraj, Member, Tamil Nadu Lokayukta
On behalf of Tamil Nadu BSNL, vigilance and anti-corruption awareness week programme presided over by S. Parthiban, Principal General Manager, Chennai telephones and Tamil Nadu BSNL, which was held at the BSNL office on Anna Salai in Chennai. Dr. V. Ramaraj, Member, Tamil Nadu Lokayukta participated as the chief guest and spoke at the event.
Mr Ramaraj said that the theme of this year’s Vigilance Awareness Week is that everyone has shared responsibility in eradicating corruption. Most countries, including India, have signed the United Nations Convention against Corruption in 2005. Every national government who has signed in the convention has to act according to the United Nations convention on anti-corruption, which is their shared responsibility. Every voter who elects the government of every country has a shared responsibility to do their part to eradicate corruption.
Mr Ramaraj said that voters’ awareness is foundation for corruption free governance and global peace. The government has a responsibility to introduce voterology education in schools, colleges, and universities so that everyone can read and learn about vote, voters and elections. The job of the voterologism is to spread the principles of voterology and “Voters above all else” is central concept of Voterologism.
Mr Ramaraj said that the supreme power, the right to vote, rests with the electorate in a democracy. Vote only decides the nature of democratic government and world political trends. When voters cast their vote in elections, democracy begins. Every voter wants the government formed through elections to be free from corruption. But, if corruption starts in the three aspects of democracy, namely votes, voters and elections, then we cannot expect a corruption-free democratic governance. Every voter has a shared responsibility to eradicate corruption in the vote, voter and elections that are the foundation of democracy.
The Prevention of Corruption Act, the Central Vigilance Commission Act, Prevention of Money Laundering Act, Prevention of Benami Transactions Act, the Fugitive Economic Offenders Act, the Central Lokpal and Lokayukta Act, and the Lokayukta Acts in the states and several Acts have been enacted to prevent corruption in India. At the national level, agencies including the Central Vigilance Commission, Enforcement Directorate, Income Tax Department, Anti-Money Laundering Commission, Lokpal and the police are working against corruption. In the states, the State Vigilance and Anti-Corruption Police Unit, the State Vigilance Commission and Lokayuta are engaged in the task of eliminating corruption. Vigilance cells are operating in every department of the central and state governments.
Mr Ramaraj said that although there are laws and institutions against corruption, measures to eradicate corruption can only be taken if there is sufficient awareness among the public about them. Education on anti-corruption laws and systems should be at least one subject for students in schools, colleges and universities. Postgraduate courses in disciplines like history, political science, economics, public administration are offered in many universities, but postgraduate courses on good governance are offered in less than one percent of universities in India. Universities should take steps to introduce more postgraduate courses in good governance and anti-corruption education in colleges.
Lokpal functions as a body to investigate corruption complaints against Union Ministers, Members of Parliament and all Central Government officials. Similarly, Lokayuta functions as a body to investigate corruption complaints against State Ministers, Members of Legislative Assembly and all State Government officials. The number of complaints filed with the national Lokpal and the Lokayuktas operating in 28 states is very low. Mr Ramaraj said that It is the need of the hour to create awareness among the people about the Lokpal and Lokayuktas.
D. M. Baskaran, Principal General Manager (HR and administration) delivered lecture on vigilance – strong will power for shared responsibility. BSNL officials, Mr Dhanaraj, Deputy General Manager, Vigilance cell and a large number of officers and employees, participated in the event.
Note: The term “Voterology” (வாக்காளரியல் in Tamil) was coined by Dr.V.Ramaraj and it made its debut in his book named “Respectable Voter” in 1996 and an article of Dinamani, a Tamil daily on August 20, 1999. Voterologism is a newly coined word by Dr. V.Ramaraj, derived from “voterology”. Voterologism is used to refer to the doctrines of voterology (school of thought advanced by Dr. V. Ramaraj). that prioritizes the actions, will, or opinions of the voters above all else.


