Saturday, June 28, 2025
spot_img

அப்பா, என் வாழ்வின் மதிப்பு என்ன? சிந்தனை தூண்டும் ஒரு நிமிடக் கதையைப் படிக்கத் தவறாதீர்கள்!

ஒரு பையன் அப்பாவிடம், “அப்பா, என் வாழ்வின் மதிப்பு என்ன?” என்று கேட்டான். பதிலைக் கொடுக்காமல் டிரங்க் பெட்டியில் மின்னிக் கொண்டிருக்கின்ற ஒரு கல்லை எடுத்து மகனிடம் கொடுத்தார். அந்தக் கல்லை பக்கத்தில் இருந்த மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டார். “யாராவது விலையைக் கேட்டால் அவர்களிடம் இரண்டு விரல்களை மட்டுமே காட்டினால் போதும். வேறு எதுவும் சொல்லாமல் கல்லை திரும்பக் கொண்டு வந்து விட வேண்டும்” என்றார்.

பையன் கல்லை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போனான். ஒரு பெண், “இந்தக் கல் அழகாக இருக்கிறது. நான் என்னுடைய தோட்டத்தில் இதை வைக்க விரும்புகிறேன். இதன் விலை என்ன?” எனக் கேட்டாள். பையன் இரண்டு விரல்களை உயர்த்தினான். அந்தப் பெண், “200 ரூபாயா? நான் இதை வாங்க விரும்புகிறேன்” என்று கூறினாள். இதைக் கேட்டதும், பையன் வீட்டிற்கு கல்லோடு திரும்பிப் போய் அப்பாவிடம், “ஒரு பெண் இந்தக் கல்லை, 200 ரூபாய்க்கு வாங்க விரும்பினாள்” என்றான்.

அப்பா, “மகனே, கல்லை ஒரு மியூசியத்திற்கு எடுத்துச் செல். யாராவது இதை வாங்க விரும்பினால், ஒரு வார்த்தை கூட பேசாதே; வெறுமனே, இரண்டு விரல்களை மட்டும் காட்டு” என்றார். பையன் கல்லை எடுத்துக் கொண்டு மியூசியத்திற்கு சென்றான். மியூசியம் ஓனர், “இது அழகாகவும் தனித்துவமாகவும்  இருக்கிறது. நான் இதை வாங்க விரும்புகிறேன்” என்றார். பையன் எதுவும் பேசாமல் இரண்டு விரல்களை மட்டுமே உயர்த்தினான். ஓனர், “2000 ரூபாய். நான் இந்த விலையைக் கொடுக்கத் தயாராக உள்ளேன்” என்றார். பையன் வீட்டிற்கு வந்து அப்பாவிடம், “அப்பா, மியூசியம் ஓனர் இந்தக் கல்லை 2000 ரூபாய்க்கு வாங்க விரும்புகிறார்” என்றான். 

அப்பா, “நீ நகைக் கடையில் இந்தக் கல்லைக் காட்டு” என்றார். நகை வியாபாரி கல்லை சோதித்துவிட்டுக் கேட்டார், “கல்லின் விலை என்ன?” பையன் இரண்டு விரல்களை உயர்த்தினான். நகை வியாபாரி, “சரி, நான் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து இந்தக் கல்லை வாங்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். பையன் வீட்டிற்கு வந்து அப்பாவிடம்,  நகை வியாபாரி, இந்தக் கல்லை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்க விரும்புவதைச் சொன்னான்.

அப்பா, கல்லை வைரக் கற்கள் விற்கும் கடைக்குச் சென்று காட்டி வரச் சொன்னார். பையன், கல்லை எடுத்துக் கொண்டு விலை மதிப்புள்ள வைரங்கள் மற்றும் கற்கள் விற்கப்படும் கடைக்குச் சென்றான். அவன் அந்தக் கல்லை கடை சொந்தக்காரரிடம் காண்பித்தான். வைர வியாபாரி,“இந்த விலை மதிப்பற்ற வைரத்தை எங்கிருந்து  பெற்றாய்? எனக்குச் சொந்தமாக  இருக்கும் எல்லாவற்றையும்  விற்றால் கூட, இந்த விலை மதிப்பற்ற வைரத்தை என்னால் வாங்க முடியாது. இதனுடைய விலையைக் கேட்பது கூட எந்தப் பயனும் இல்லை!” என்றார். திகைப்பும் வீட்டுக்குத் திரும்பிய பையன் அப்பாவிடம் நடந்ததைக் கூறினான். 

அப்பா, “மகனே, இப்பொழுது உன் வாழ்வின் மதிப்பை அறிந்து கொண்டாயா?” என்று கேட்டார். “நம்மை ஒரு சிறிய மார்க்கெட்டில் பார்க்கிறோம் என்றால், அங்கே நமது மதிப்பு வெறும் 200 ரூபாயாக இருக்கலாம். வேறு ஒரு இடத்தில் நாம் விலை மதிப்பற்றவர்கள். நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எங்கே பிறந்தோம், நம் நிறம் என்ன, நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது பிரச்சனை அல்ல. நம் வாழ்க்கையில் நம்மை, நாம் எங்கே வைத்திருக்கிறோம்; நம்முடைய வாழ்க்கையை நாம் எவ்வாறு கொண்டு செல்கிறோம் என்பதே முக்கியம்” என்றார் பையன்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து:  ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வைரம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. இது நீ வாழும் வழியை உனக்கு நீ மரியாதை கொடு!  வாழ்க்கையின் மதிப்பை அறிந்து கொள்ளாமல் வாழ்வது வாழ்வாகாது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles