Advertisement

உயிரைக் கொல்லும் பாதுகாப்பற்ற உணவு பார்சல்கள்! படியுங்கள்! அனைவருக்கும் தெரிவியுங்கள்!

தற்போதைய அறிவியல் முன்னேற்றம் அடுத்த கிரகத்திற்கும் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவிற்கு மனித குலத்தை அழைத்துச் சென்றுள்ளது. இத்தகைய வளர்ச்சி அடைந்த அறிவியல் சமூகத்தில் பாதுகாப்பற்ற உணவு பேக்கேஜ் முறை ஊரெங்கும் கொடி கட்டி பறப்பது வேதனையாக உள்ளது.  பாதுகாப்பற்ற உணவு பேக்கேஜ் முறை மனிதர்களுக்கு விளைவிக்கும் ஆபத்துக்களை அறியாமல் நாம் இருந்து வருவது வேடிக்கையாக உள்ளது.

பேக்கேஜிங்

உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை ஏற்றத்தையும் கலப்படத்தையும் சந்தித்துக் கொண்டே வருகின்றது. கடைகளில் கிடைக்கும் உணவு பொருட்களில் கலப்படமும் சுகாதாரமின்மையும் வளர்ந்து கொண்டே வருகிறது. இதோடு மட்டுமல்லாது, உணவுப் பொருட்களை பேக்கேஜ் செய்யும் போது பிளாஸ்டிக் பொருட்கள், அலுமினியம் பாயில், பாலிதீன் கவர்கள், நியூஸ் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள ரசாயன பொருட்கள் உணவுகளில் கலந்து விடுகின்றன. இதனால், ஏற்படும் பாதிப்புகளும் பக்கவிளைவுகளும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு எண்ணற்றவை. 

ஆய்வு

ஜர்னல் ஆஃப் எக்ஸ்போஷர் சயின்ஸ் அண்ட் என்விரோன்மென்டல் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், “உணவு பொட்டலத்தில் வழங்கப்படும் பல்வேறு உணவு வகைகளை ஆய்வு செய்ததில் பொட்டல உணவுகளில் 3600-க்கும் மேற்பட்ட ரசாயன கலப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 100 ரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானதாக அமையும்” என்று கூறப்பட்டுள்ளது. மனித உடலில் காணப்படும் ரசாயனங்களில் மிகவும் பொதுவானது பி எஃப் ஏ (PFA) மற்றும் பீஸ் ஃபெனல் எ. இத்தகைய ரசாயனங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்கள் ஆகும். பொதுவாக, இந்த ரசாயனங்கள் நாம் பயன்படுத்தும் உணவு அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நான்ஸ்டிக்க் பொருட்கள், நீர் விரட்டும் ஆடைகள், போன்றவைகளின் உபயோகத்தால் மனித உடலுக்கு வந்து சேர்கின்றன. 

கேன்சர்

பாதுகாப்பற்ற உணவு பேக்கேஜ் முறையால் உடலில் ஆபத்தான ரசாயன கலப்பு ஏற்பட்டு மனிதனின் ஹார்மோன் அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகள் தோன்றுகின்றன. குழந்தைகளுக்கு பால் வழங்கும் புட்டிகளில் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற உணவு பேக்கேஜ் முறை மூலமாக பெண்களின் உடலுக்குள் ரசாயனம் செல்லும் போது கருத்தரித்தல் தடைபடுகிறது. பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் நீரிழிவு நோய், பிறப்பு குறைபாடுகள், குறைந்த மாதத்தில் பிரசவித்தல், நரம்பு கோளாறுகள், உடல் பருமன், கார்டியோ வாஸ்குலர் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நேரிடும். கேன்சர் நோய் அதிகமாக பரவுவதற்கும் பாதுகாப்பற்ற பேக்கேஜ் உணவுகளை உண்பது ஒரு காரணமாகும்.

தமிழர் பாரம்பரியம்

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதை வெகுவாக குறைத்துக் கொள்வதே நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் சூடு செய்து பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பாலித்தீன் பைகளில் கட்டப்படும் தேநீர், குழம்பு போன்றவற்றையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிளாஸ்டிக் கவரில் வேக வைக்கப்படும் இட்லி, பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டப்படும் தேநீர், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு உபயோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவை ஆபத்தை உருவாக்கும் கருவிகள் ஆகும். உணவு வகைகளை பொட்டலம் செய்வதற்கு வாழை இலை, தாமரை இலை, தேக்கு இலை போன்றவற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். தற்பொழுது இத்தகைய பொட்டல முறை மறக்கப்பட்டு வருகிறது. 

கலப்பட உணவுகளையும் சுகாதாரமற்ற உணவுகளையும் எவ்வாறு தவிர்க்க விரும்புகிறோமோ, அதற்கு இணையாக பாதுகாப்பற்ற வகையில் வழங்கப்படும் பேக்கிங் உணவுகளை தவிர்ப்பதும் அனைவரின் உடல் நலத்துக்கு அவசியமான ஒன்றாகும்.

மெல்லக் கொல்லும் விஷம்: மைதா உணவுகளை தடை செய்யுமா அரசு?https://theconsumerpark.com/maitha-silent-killer

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles