Advertisement

இதுதாங்க அரசியல் சொல்கிறார்கள் ….. சட்டக் கல்லூரி மாணவிகள்

ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி

ஆளத் தெரியாதவன் கையில் அரசியலும், வலிமை தெரியாதவன் கையில் வாக்குரிமையும்” தான் இன்றைய அரசியல் சூழல். இங்கு பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம் என்று தான் தெரியுமே தவிர, அது நாடாளுமன்றத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்ற புரிதல் கூட இருப்பதில்லை. ஏன் படித்தவர்கள் கூட, அரசியல் ஒரு சாக்கடை, அது எதற்கு நமக்கு என்று ஒதுங்கி கொள்கின்றனர். மாணவர்களோ, அரசியல் பற்றிய பாடங்களை மதிப்பெண்களளுக்காக மட்டுமே படிக்கின்றனர்.

அரசியல் என்பது அரசியல்வாதிகளுகனது மட்டும் அல்ல. இங்கே மக்களுக்கு அரசியலைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கி ஓட்டை வங்கி ஆகிவிடும். எனவே அரசியல் பழகு, பங்குபெறவில்லை என்றாலும் பாதுகாப்புக்காக அரசியல் பழகு. மத, இன, ஜாதி அரசியல் வேண்டாம் என்று சொல், ஆனால், அரசியலே வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

தமிழ்நாடு என்று பார்த்தால் இங்கு பல கட்சிகள், பல கொள்கைகள் உள்ளன. பிரதானமாக திராவிட கட்சிகளே மாநிலத்தை ஆளுகின்றன. மக்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்யும் பொழுது மிக கவனமாகவும், மிக நேர்த்தியாகவும் தேர்வு செய்கின்றார்களா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தராமல் எந்த கட்சி தங்களுக்கு அதிகம் பணம் தருகின்றன, இலவச அறிவிப்புகளுக்கு மயங்குதல், ஊடகங்களின் பொய் மற்றும் போலியான செய்திகளை நம்புதல், சாதிய அரசியல் ஆகியவற்றை கணக்கில் கொண்டே பலர்  வாக்கு செலுத்துகின்றனர். மக்களின் அரசியல் அறியாமையையும், வறுமையையும்  அரசியல்வாதிகள் நன்றாக பயன்படுத்தும் களமாக தேர்தல் களம் மாற்றம் பெற்றுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. எந்த கட்சிக்கு போனால் பணம் சம்பாதிக்கலாம்? எந்த கட்சிக்கு போனால் பதவி வாங்கலாம்? இவைதான் அரசியல்வாதிகளின் முக்கிய கனவாக உள்ளது. அதனால் அரசியல் எதுவும் தெரியாத மக்களிடம் அரசியல் செய்வதும், இவர்களுக்கு மிகவும் சுலபமாகிவிட்டது.

அரசியல் களத்தை படித்த இளைஞர்கள், நிச்சயம் படிக்க வேண்டிய அவசியம்  ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்த வரை இன்றும் மோசமான சூழ்நிலையில் தான் அரசியல் இருக்கிறது.இது தமிழ்நாடு மாநில அரசியலுக்கு மற்றும் அல்ல பிற மாநில அரசியலுக்கும் பொருந்தும்.  மக்களின் அரசியல் புரிதலும் அறிவுக்கூர்மையை மதிப்பிடும் ஒரு சந்தர்ப்பமே பொதுத்தேர்தல் ஆகும்.  இதில் மிகவும் குறைவான தவறு செய்யும் அரசியல்வாதி யார்? என்று தேர்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்!

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

இந்திய அரசியலில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை, அதற்கு காரணம் அரசியலில் அவர்களுக்கு ஈடுபாட்டின்மை, மற்றும் கல்வியறிவின்மை ஆகியவையே ஆகும். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது சிலப்பதிகாரத்தின் வாக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலன் கருதி நாட்டை ஆள வேண்டும், மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஒழிப்பதே அவர்களின் தலையாயக் கடமை ஆகும். 

நாட்டில் நடைபெறும் அரசியல் தொடர்புடைய விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அரசியல் விழிப்புணர்வின் ஒரு பகுதி. நாட்டு மக்களுக்கு, தவறு இழைக்கும் அரசியல் தலைவர்களை அஞ்சாமல் தட்டிக் கேட்கும் மனத்திட்பத்தை மக்கள் கொண்டிருக்க வேண்டும். இதுதான் ஒரு தெளிவான அரசியல் விழிப்புணர்வு.

எம். ஜனனி, சட்டக் கல்லூரி மாணவி

அரசியலில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என கூற முடியாது குறைவாக உள்ளது என கூறலாம்.  காரணம் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 67.40 % வாக்குகள் பதிவாகியிருந்தது.‌. 2024 மக்களவைத் தேர்தலில் 65.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்திய அரசியலமைப்புபடி உரிய வயது நிறைவு பெற்றவுடன் வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இவை மக்களின் உரிமையாகும். கடந்த வாக்குகள் பதிவும் தற்போதைய வாக்கு பதிவும் பார்க்கும் போது வாக்குகளின்எண்ணிக்கை குறைவாக உள்ளது. ‌ எனவே, மக்களுக்கு விழிப்புணர்வு  இல்லை என கூற முடியாது குறைவாக உள்ளது.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles