திறமையான பையன் ஒரு திறமையான பையன், ஒவ்வொரு ஆண்டும் வகுப்பில் முதல் மாணவனாக வரக்கூடியவன். அறிவியலில் எப்போதும் 100 மார்க் எடுப்பவன். இம்மாதிரியான மாணவர்கள் வழக்கமாக எஞ்சினியர் ஆக விரும்புவார்கள். அவனும், சென்னை ஐஐடியில் தேர்ந்தெடுக்கப்பட்டான். அங்கு தனது பி.டெக். படிப்பை முடித்து மேல்படிப்பு அமெரிக்கா கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டத்தைப் பெற்றான். அங்கே சிறந்த கல்வியைப் பெற்று, எப்போதுமே முதல் ரேங்க் மாணவரான அவர் அமெரிக்காவில் வேலை பார்க்கத் தொடங்கினான். ஐந்து படுக்கை அறைகள் சேர்ந்த ஒரு அழகு மிளிரும் வீடு வாங்கினான். சென்னையில் ஒரு அழகிய பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தவிர ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் வேறு என்னதான் வேண்டும்? நன்கு படித்து அமெரிக்காவில் செட்டிலான எஞ்சினீயர், நல்ல வருமானம், அழகான மனைவி, குழந்தைகள் வேறு என்ன மகிழ்ச்சி தேவை? துரதிர்ஷ்டவசமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், அவன் தன்னுடைய,மனைவி, குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது? எங்கே தவறுகள் நடக்கின்றன? இந்த முடிவுக்கு வருவதற்கு முன், அவர் தனது மனைவியிடம் எல்லாவற்றையும் விவாதித்தார். தற்கொலைக்கான காரணம் பற்றி ஒரு நீண்ட குறிப்பையும், இந்த சூழ்நிலையில் இதுதான் மிகச் சிறந்த வழி எழுதி வைத்திருந்தார். இந்த வழக்கும், தற்கொலை நோட்டும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் சைகாலாஜி பரிசோதனைக்கு உள்ளானது. ‘என்ன தவறு நடந்தது’ என்ற தலைப்பில் பரிசீலித்தார்கள். அவர்களது நண்பர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். புலனாய்வில் உண்மை தெரிய வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக, தனது வேலையை இழந்து விட்டார். நீண்ட நாள்களாக வேலை இல்லாத நிலையில், நல்ல வாய்ப்புக்களுக்கான தேடலில் இருந்தார். குறைந்த ஊதியத்திற்காகவும் பணி புரிய தயாராக இருப்பதைச் சொல்லியும் வேலை பெற இயலவில்லை! அவர்களால் வீட்டுத் தவணையை திருப்பிச் செலுத்த முடியவில்லை. திவால் ஆகும் நிலை ஏற்படுகிறது. சிலர் பெட்ரோல் பம்புகளில் வேலை செய்தார்கள். ஒரு ஆண்டு கடும் வேதனையுற்ற கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டார்கள். இதற்காக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்த மனிதன் வெற்றியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தான். தோல்வி என்பது பற்றி ஒரு போதும் பார்த்தது இல்லை. வாழ்க்கையில் தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவே இல்லை. அவன் பிரிலியண்ட், எப்போதும் முதல் ரேங்க் மாணவன். இது போன்ற மாணவர்கள், ஒவ்வொரு வெற்றி வரும்போதும், அது இன்னும் தொடர்ந்து வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிற்கு அடிமையாகிறார்கள். அவர்கள் தங்கள் நேரத்தை, அடுத்து வரும் வெற்றிக்காகவும் அதன் தயாரிப்பிற்காகவும் ஈடுபடுகிறார்கள். இதர செயல்பாடுகளான விளையாட்டுக்கள், நடைபயிற்சி, நண்பர்களுடன் வேடிக்கை இது போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்கவே இல்லை. வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய சவால்களைக் கொண்டு வருகிறது. வாழ்க்கையின் தேர்வுக்கான கேள்விகள் நூல்களில் இல்லை. எல்லாமே பாடத்திட்டத்தை தாண்டியவை. நாம், நமது மனசாட்சியை விழித்தெழச் செய்வது அவசியம். ஒவ்வொரு சூழலையும் ஏற்றுக்கொள்ளும் திறன் வேண்டும். அதனை ஏற்றுக் கொண்டு, அந்த சூழலை முறியடிக்கும் அறிவாற்றல் வேண்டும் |
இது எப்படி இருக்கு? பேங்க்-ல் கேஷியரிடம் 500 ரூபாய் பணக்கட்டை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது. “சார் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”ன்னுதான் கேட்டேன்! பேங்க் கேஷியர் கொஞ்சம் கோவமா “ஏன் பணம் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார். சரியா இருக்கும்… ரொம்ப பிஸியான நேரம். இப்ப எண்ணித்தர முடியாது!” அப்படீனாரு! “இல்ல சார்! ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்குன்னேன்!” சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி, மெஷினில் இரண்டு தரமும், கையால் ஒரு தரமும் எண்ணி கொடுத்தார்…!! இதனால் அறியப்பட்ட நீதி…!! “தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்!”. |
சிரிப்பு வருகிறதா? ** டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க! ** சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்குவாங்க. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க! ** FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILES அ உட்கார்ந்து பார்க்கணும். PILES க்கு பார்த்து உட்காரணும். ** செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது. செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்? மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்! ** வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்! ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு? ஒன்று பிகர், மற்றொன்று சுகர்! ** என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும். ** கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்??? கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.. |