Tuesday, April 15, 2025
spot_img

நீங்களும் நீங்கள் பராமரிக்கும் நான்கு ராணிகளும் – உண்மையை உணர்த்தும் ஒரு நிமிடக் கதை + தமிழ் சொல் களஞ்சியம்

ஒரு ராஜாவும் நான்கு  ராணிகளும்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நான்கு ராணிகள் இருந்தார்கள். ராஜா, அவரது நான்காவது ராணியை மிகவும் நேசித்தார். அவளுக்குப் பரிசாக உடைகளும், ஆபரணங்களும் சேர்த்துக் கொடுத்தார். அவளுக்கென்றே, சிறந்த வகை உணவு பதார்த்தங்களை தயார் செய்திட கட்டளை இடுவதும் உண்டு.

அரசருக்கு, மூன்றாவது ராணி மீதும் பிரியம் உண்டு. பக்கத்து ராஜ்ஜியங்களில், அவளைப் பற்றி உயர்வாகப் பேசினாலும், அவள் மீது அவருக்கு ஒரு பயம் உண்டு. என்றாவது ஒரு நாள், இவள் தன்னை விட்டுவிட்டுச் சென்று விடுவாள் என்பதுதான் அந்த பயம்.

அரசர், அவரது இரண்டாவது மனைவி மீதும் அன்பாகவே இருந்தார். அவள்தான்  இவருடைய நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தார். எப்போதும் இவர் மீது அன்பு செலுத்திக் கொண்டும், இவரது உணர்ச்சிகளை மதிப்பவளாகவும் இருந்து வந்தாள். எப்போதெல்லாம்  ராஜாவுக்குப் பிரச்சனை வருகின்றதோ அப்போதெல்லாம் இவளுடைய உதவியையே அவர் நாடுவார். ராணியும் கஷ்டமான சமயங்களில், அதைக் கடந்து வருவதற்கு ராஜாவுக்கு உதவி செய்வது வழக்கமானது.

ராஜாவின் முதல் ராணி விசுவாசமிக்கவள். இராஜாங்கத்தையும் அதன் செல்வத்தையும் நிர்வகிப்பதில் தனது பங்கினை வழங்கினாள். முதல் மனைவி ராஜாவை அதிக அளவில் விரும்பிய போதிலும் ராஜாவுக்கோ அவள் மீது அன்பு இல்லை.

ஒரு நாள் அரசர் ஒரு ராஜாவும் நான்கு  ராணிகளும்நோய்வாய்பட்டார். தான் நெடு நாள் இருக்க முடியாது, என்பதை அரசர் உணர்ந்தார். “எனக்கு நான்கு ராணிகள் இருக்கின்றார்கள். என்றாலும், நான் இறந்து போகும் போது, தனியாகத்தான் விடப்பட்டு இருப்பேன்” என நினைத்தார்.

அவர் நான்காவது ராணியிடம், “நான் உன்னை மிகவும் நேசிப்பவன். உனக்கு சிறந்த உடைகளைக் கொடுத்தேன். உன் மீது சிறப்பான கவனம் கொண்டேன்.  நான் இறந்து கொண்டு இருக்கின்றேன். என்னோடு நீ வருவாயா?“ என்று கேட்டார். “முடியவே முடியாது” என்று அந்த ராணி பதிலளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள். அவளது பதில், அரசருடைய  இதயத்தை, குத்துவாள் கொண்டு துளையிட்டது போல இருந்தது.

வருத்தமுற்ற ராஜா, மூன்றாவது ராணியிடம், “நான், எனது வாழ் நாள் முழுவதும் உன்னை விரும்பினேன். இப்போது நான் இறந்து கொண்டு  இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வந்து விடுகிறாயா?” என்று கேட்டார்.  மூன்றாவது  ராணி, “முடியாது! நீங்கள் இல்லாதபோது, நான் திரும்பவும் மணம் செய்து கொள்வேன்” என்றாள்.

வருத்தமுற்ற அவர் இரண்டாவது ராணியிடம், “நான்  உனக்கு நிறைய உதவி செய்து இருக்கிறேன்.  நீயும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறாய். நான் இறந்து போகும் போது, நீ என்னுடன் வருவாயா? “ என்று கேட்டார். “நான் வருந்துகிறேன். இந்த சமயம் என்னால் உங்களுக்கு உதவ முடியாது. சுடுகாடு வரைக்கும் வேண்டுமானால், நான் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும்” என்று இரண்டாவது மனைவி பதிலளித்தாள். அரசர் ஏமாற்றம் அடைந்தார்.

அப்போது திடீரென்று ஒரு குரல், “நான் உங்களோடு  வருகிறேன்; எப்போதும் உங்களோடு இருக்கின்றேன், நீங்கள் எங்கெல்லாம் போகின்றீர்களோ அங்கெல்லாம் இருக்கின்றேன்”   முதல் ராணியிடம் இருந்து வந்தது. ராஜா, “எல்லா சந்தர்ப்பத்திலும் நான் உனக்கு மரியாதை கொடுத்து இருந்திருக்க வேண்டும். முன்பே, உனது அன்பை நான் தெரிந்து இருந்திருக்க வேண்டும்! “ என்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்கு நான்கு ராணிகள் இருக்கிறார்கள். நமது நான்காவது ராணி நமது உடல். எவ்வளவு காலம் முயற்சி எடுத்து அதனை நன்றாகவே வைக்கிறோம். என்றாலும் நாம் இறந்தவுடன் அதுவும் நம்மை விட்டுப்போய் விடுகிறது. நம்முடைய மூன்றாவது ராணி நம்முடைய சொத்து, அந்தஸ்து மற்றும் பணம் ஆகியவை. நாம் இறக்கும்போது, இவை அடுத்தவர்களிடம் போய்விடும்.

நம்முடைய இரண்டாவது ராணி நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் சரி, அவர்கள் இறுதிச் சடங்கு வரைக்கும் ஆதரவு தருவார்கள். நமது முதல் ராணி நமது உள் மனம். அது அடிக்கடி செல்வத்தின் மீதான நமது நாட்டத்தை, சக்தியை, மகிழ்ச்சியை, ஈடுபாட்டைத் தவிர்க்கச் சொல்லும். “நம்மோடு இருக்கும் அந்த உள் மனத்தை நம்முடைய இதயம் மூலமாகவே, நம்மால் தொடர்பு கொள்ள இயலும். ஆகவே, இதயத்தின் மீதான தியானம் செய்வதில் மாபெரும் தத்துவமே அடங்கி இருக்கிறது!”

பூங்கா இதழ் (The News Park) கருத்து: உன் மனம் கூறுவதை ஆய்வு செய்வதோடு உள் மனத்தை ஒருநிலைப்படுத்தி தேவையானது தேவையற்றது எது என்பதை பகுத்தாய்ந்து வாழும் காலத்தில் பணியாற்ற வேண்டும்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

கீழ்க்கண்ட ஆங்கிலதமிழ்ச் சொற்களை கவனியுங்கள்!

Mango – மாங்காய்

Cash – காசு

One – “ஒன்”று

Eight – “எட்”டு

Victory – வெற்றி 

Win – வெல்/வென்று

Wagon – வாகனம்

Elachi – ஏலக்காய் 

Coir – கயிறு

Eve – அவ்வை

Terra – தரை

Metre – மாத்திரை (unit representation in Tamil)

Name – நாமம் (பெயர் – எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம்)

Vomit – ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S-ஐ நீக்கிவிட்டுப் பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.

Script – குறிப்பு

Speech-பேச்சு

Speed – பீடு/வேகம் (பீடு நடை – வேக நடை)

Sponge – பஞ்சு

Snake – நாகம்

A”ttack” – தாக்கு

M”ake” – “ஆக்க”ம் 

Round – உ”ருண்டை”

Lemon – “இளம”ஞ்சள்காய் (எலுமிச்சை)

Roll – உ”ருள்”

Orate – “உரை”யாற்று

“Know”ledge – “ஞான”ம்

Ginger – இ”ஞ்சி”

Molecule – மூலக்கூறு

Kill – கொல்

Prize – பரிசு

Other – இதர

Tele – தொலை

Teak – தேக்கு

Rice -அரிசி

Aqua – அக்கம்

Venom – விடம் 

Fade – வாடு

Poly- பல

Mega – மிக

Accept – இசைப்படு

Mature – முதிர்

Goat – கடா

Pain – பிணி

Yarn – ஞாண் (அறிக- yarn=thread, 

ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)

Culprit – கள்ளன்(குற்றவாளி)

Torque – திருகி

Level – அளவு

Mad – மடமை

Surround – சுற்றம்

God – கடவுள்

Birth – பிறந்த

Capture – கைப்பற்று

Want – வேண்டி

Plough – உழவு

Sudden – உடன்

Adamant – அடம்

Fault – பழுது

Shrink – சுருங்கு

Villa – இல்லம்

Path – பாதை

Via/Way – வழியாக 

Bottle – புட்டில்/புட்டி

Cot – கட்டில்

Nerve – நரம்பு

Betrothal – பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)

Grain – குருணை

Button – பொத்தான்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles