5 ஆகஸ்ட் 2019 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் 370 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இந்திய அரசு ரத்து செய்ததை அனைவரும் அறிவோம். இருப்பினும், இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் சிறப்பு அந்தஸ்து நீடிக்கிறது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.
சிறப்பு அந்தஸ்து
சில மாநிலங்களில் நிலவும் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தை பாதுகாக்கவும் பழங்குடியின மக்களின் நலனுக்காகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்திய அரசியலமைப்பின் 371 ஆம் பிரிவின் மூலமாக, வட கிழக்கு மாகாணங்களான நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், சிக்கிம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பிரான்சின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட கோவா மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைப்போலவே, இந்திய அரசியலமைப்பின் 371 ஆம் பிரிவின் மூலமாக, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை மேம்படுத்துவதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்
சிக்கிம் மாநிலத்தில் வாழும் மக்களின் மரபுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில சட்டப்பிரிவுகள் அமலாக்கம் செய்யப்படவில்லை. சிக்கிம் மாநிலத்தில் வாழும் பூர்வீக மக்களுக்கு வருமான வரி கிடையாது. இந்திய வருமான வரிச் சட்டம் சிக்கிமில் அமல்படுத்தப்படவில்லை.
மிசோரத்திலும் நாகாலாந்தில் மத அல்லது சமூக நடைமுறைகள், மரபுச் சட்டம், நடைமுறை, சிவில் அல்லது குற்றவியல் நீதி, உரிமை மற்றும் நிலம் போன்ற விஷயங்களில் மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியாது. இதே போன்ற சிறப்பு சலுகைகள் மேகாலயா, அஸ்ஸாம், அருணாச்சலம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அசாமிலும் அருணாச்சல பிரதேசத்திலும் மாநில ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப்பிரதேசங்களில் தன்னாட்சி பகுதிகளுக்கான நிர்வாக குழு அமைக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் நிலத்தை வாங்குவதிலும் மாநிலத்துக்குள் மற்ற மாநிலத்தினர் செல்வதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.
சிறப்பு பிரிவுகள்
அரசியலமைப்பின் பிரிவு 371A: நாகாலாந்திற்கான அதன் மத மற்றும் சமூக நடைமுறைகள், வழக்கமான சட்டங்கள் மற்றும் சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371B: அஸ்ஸாமுக்கு யூனியன் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு இடையே சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரங்களை சமமான முறையில் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371C: மணிப்பூருக்கான நிர்வாகம் மற்றும் நிலம் மற்றும் அதன் வளங்கள் தொடர்பான சட்டங்கள் மீதான சுயாட்சி ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371E: சிக்கிமுக்கான நிலம் மற்றும் வளங்கள் மற்றும் அதன் தனித்துவமான கலாச்சார அடையாளத்தின் மீதான அதன் உரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371F: மிசோரம் மாநிலத்திற்கான சமூக மற்றும் வழக்கமான சட்டங்களின் பாதுகாப்பு, சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371G: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கான சிறப்பு மத மற்றும் சமூக நடைமுறைகள், வழக்கமான சட்டங்கள் மற்றும் சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371H: கோவா மாநிலத்திற்கான கல்வி மற்றும் பொது வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்தல் மற்றும் அதன் கொங்கனி மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371-I: மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திற்கான குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு கல்வி மற்றும் பொது வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்புகளை ஆகியவற்றை தெரிவிக்கிறது ஆகியவற்றை தெரிவிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 371 ஜே: கர்நாடகா மாநிலத்திற்கான குறிப்பிட்ட பகுதிகளுக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்கிறது
அரசியலமைப்பின் பிரிவு 371D: ஆந்திரப் பிரதேசத்திற்கான கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை தெரிவிக்கிறது.
பழங்குடியின பகுதிகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 244 ஆம் பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பகுதிகளின் நிர்வாகத்தைக் குறிக்கிறது. அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையானது, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவற்றைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் நிர்வாகத்தைக் குறிக்கிறது. அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையானது அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியின பகுதிகளின் நிர்வாகத்தைக் குறிக்கிறது. இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக அவர்களது வழக்கத்தில் உள்ள மரபுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
கோரிக்கைகள்
ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் தங்களது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரி உள்ளதாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பதிலளிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினரின் கணிசமான பங்கு, அண்டை நாடுகளுடனான எல்லைகளில் மூலோபாய இடம், பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு பின்தங்கிய நிலை, மாநில நிதிகளின் சாத்தியமற்ற தன்மை மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு வளங்களைத் திரட்டும் நிலையில் இல்லாத நிலை போன்றவற்றை கணக்கில் கொண்டு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது என்றும் லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு அந்தஸ்து, புவியியல் மற்றும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவி மற்றும் பிற நன்மைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதியில் இருப்பதாலும் இமயமலையில் இருப்பதாலும் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பதாலும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டார்கள் லடாக் யூனியன் பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.
தமிழர்கள் உட்பட இந்தியராயினும் நான்கு இந்திய மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி பெற வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் நுழையும் வெளிமாநிலத்தவர்கள் புள்ளி விவரம் பராமரிக்கப்படுமா?https://theconsumerpark.com/tamil-nadu-inner-line-permit