யாரிடம் பணம் தங்காது? |
எதை பார்த்தாலும் உடனே வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதன் தேவையில்லாத போதும் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்பவர்கள், தன்னை கட்டுப்படுத்தும் திறமையில்லாதவர்கள், போதும் என்ற மனம் இல்லாதவர்கள், அடுத்தவர்களை போல வாழ நினைப்பவர்கள் ஆகியோரிடம் பணம் தங்காது. யோசித்து முடிவு எடுக்காதவர்களிடம், அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு எளிதில் மயங்குபவர்களிடம், எது தேவை, எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிட தெரியாதவர்களிடம், சிக்கனம், சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாதவரிடம், பணத்தை எப்படி பெருக்குவது என்ற அறிவு இல்லாவரிடம், பணத்தின் மதிப்பை அறியாதவரிடம் பணம் தங்காது. பணம் ஈட்டும் போது தான் அதன் மதிப்பு தெரியும். யோசிச்சி செலவு செய்வோம். அதற்கு முன்பெல்லாம் தண்ணி மாதிரி செலவு பண்ணியிருப்போம். (திரு செழியன் குமாரசாமி அவர்களின் வலைதளப் பதிவில் இருந்து) |
பிறரை வசியம் செய்திட வேண்டுமானால்… |
வாழ்க்கைப் பயணத்தில் பத்தோடு பதினொன்றாக அத்தோடு நீயும் ஒன்றாக இருக்க வேண்டுமா? இல்லை, உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டுமா? வாழ்வில் வெற்றியை வசப்படுத்த முதலில் மனிதர்களை ஆகர்சிக்க அறிந்திருக்க வேண்டும். அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தி எச்செயலை செய்ய முனைந்தாலும் உடன் இருப்பவர்கள் உந்து சக்தியாக இருப்பார்கள் .பிறரது மனங்களைக் கவர வேண்டுமானால் வெளித்தோற்றம் அவசியமானது. “ஆள் பாதி ஆடை பாதி “. “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பதுதான் உங்களுக்கு தெரியுமே. உடுத்துகின்ற உடைகள் உனது குரல் ஓர் இசைக்கருவி. இதைச் சரியாக மீட்டுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். பேசுகின்ற பொழுது எளிமையான மொழியில் பேச வேண்டும். பேசுவதற்கு தகுந்த வார்த்தையை தேர்ந்தெடுத்துப் பேசுவது சிறப்பு. தெளிவற்ற பேச்சும், கொச்சை மொழியும் தவிர்க்கப்பட வேண்டும். தெளிவாகவும், சுருக்கமாகவும் பிறர் கேட்கும்படியான முறையிலும் பேச்சு இருக்க வேண்டும். சொல்லக்கூடிய கருத்துக்கள் தெளிவானதாக இருக்கட்டும்.மற்றவர்களிடம் பேசும் போது, அதிகமாக கேட்கவும் குறைவாகப் பேசவும் வேண்டும். பேசுபவரிடம் அக்கறை காட்டவும், கவனம் மாறுவதை தவிர்த்து விட வேண்டும். உரையாடும்போது பொறுமையாகவும் சாந்தமாகவும் இருங்கள். விளக்கங்களை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். பேசுபவருடைய கண்களை நேராகப் பார்க்க வேண்டும். கண் தொடர்பை நிலை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும். கேட்பதை கவனமாக கேட்க வேண்டும். பிறரை வசியம் செய்திட வேண்டுமானால் கண் போன்ற பயனுள்ள சாதனம் வேறு எதுவும் கிடையாது.எழுத்து மூலம் தொடர்பு கொள்ளும் போது எளிமையான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உபயோகிக்கலாம். பொதுவாக புரிந்து கொள்ளக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்துவது சிறப்பு. சிறிய வாக்கியங்களையும்நம்மை ஜென்ம பகையாளியாக கருதுவோரைக் கூட பார்வையின் ஆற்றலினாலே நட்பு செய்து கொள்ள முடியும். இயன்றவரை மற்றவர்களை ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் பாராட்ட பழகிட வேண்டும். வாழ்க்கைத் துணையை பாராட்டுங்கள் இல்லறம் இனிக்கும். நண்பனைப் பாராட்டுங்கள். உங்களுக்காக எதையும் செய்வார்கள். பணியாளர்களைப் பாராட்டுங்கள். பணியில் வெற்றி பெறுவீர்கள். நாள்தோறும் ஒருவரையாவது பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுவதில் சிக்கனம் காட்டாதீர்கள் எவரிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதத்தால் எவ்வித பயனும் கிடைக்கப் போவது இல்லை. கருத்துப் பிடிக்கவில்லை என்றால் எனது கருத்து இதுதான் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகல்வது நட்பை எப்பொழுதும் உறுதியாக்கும் .மற்றவர்களை கவர்ந்து நம் மீது அவர்கள் கவனத்தை ஈர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் உயர்ந்த வெற்றிகளை எழுத முடியும். அனைவரிடமும் உண்மையான அன்பு கொள்ள வேண்டும். அன்பும் பாசமும் முகமலர்ச்சியும் மக்களை காந்தம் போல் கவர்ந்து உன்னிடம் கொண்டு வரும். அன்பு கிடைக்கும் இடத்தை நோக்கித்தான் மனிதர்கள் வருவார்கள்.பிறரைக் கவரும் இயல்பு படைத்தவர்களே குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பவர்கள். (திரு சிவ கணபதி அவர்களின் வலைதள பதிவிலிருந்து) |
எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள்! |
வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எந்தப் பிரச்சனையும் வரும் போது எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள். ஏன் நேர்ந்தது என யோசியுங்கள் எப்படிச் சரியாகும் என்பதைத் தேடுங்கள். செயல்முறையில் தவறு எனும் போது செப்பனிடப் பாருங்கள். கவலையால் ஆவதென்ன எனத் தீர்வு நோக்கிச் செல்லுங்கள். யார் உன்னை உச்சியில் வைத்து புகழ்ந்தாலும், தரம் தாழ்த்தி இகழ்ந்தாலும்,நீ நீயாகவே இருந்தால் வெற்றி நிச்சயம். (திரு செழியன் குமாரசாமி அவர்களின் வலைதளப் பதிவில் இருந்து) |
அந்தாளு வீட்டுக்கு வரட்டும், அன்று இருக்கு கச்சேரி |
சார் எம்புருசனை ரெண்டு நாளா காணோம்? “பேரு என்னம்மா?” “லியோ” “நீ தானா அவன் ஒயிஃப். இந்தாம்மா ‘நீ தேடி வருவ, வந்து கம்பளைண்ட் கொடுக்கும் போது இந்த லெட்டரை கொடுங்கன்னு கொடுத்துட்டு போயிருக்கான்’ “மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி கருவாட்டு குழம்பு வைத்தார். செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் கருவாட்டு குழம்போடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது கருவாட்டு குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்’ என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது. இன்றோடு ஐந்தாம் நாள் கருவாட்டு குழம்புக்கு கெடு முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை நானே வீடு திரும்புவேன் என்று கூறிக்கொள்கிறேன். நன்றி” “அந்தாளு வீட்டுக்கு வரட்டும், அன்று இருக்கு கச்சேரி” “ஏம்மா அதான் வர்றேன்னு சொல்லிட்டார்ல. திரும்ப ஏம்மா பிரச்சினை?” “கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆச்சு, ஏழு வருசம்னு எழுதியிருக்கார் பாருங்க |
சாதி-ஒரு மதில் மேல் பூனை சு. திவ்யா கார்த்திகேயன், அரசு சட்ட கல்லூரி மாணவி, நாமக்கல். |
“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்; நீதிநெறி யினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்”-மகாகவி பாரதியார் மேலே கண்ட கூற்று காலப்போக்கில் காணாமல் போகவும் கூடும் போல. என்னதான் சாதியில்லை என்று கூறினாலும், கோஷமிட்டலும் சரி பள்ளி முதல் வகுப்பு சேர்க்கைக்கே சாதிச் சான்றிதழ் கேட்கும் நிலை தான் இன்றளவும் உள்ளது. குழந்தைகள் படிக்கும் போதும், வளரும் போதும் “அனைவரும் சமம்” என்று இந்த சமூகமும், மக்களும் கூறுகின்றனர். ஆனால் அந்த குழந்தை வளர்ந்த பின்னர் அவர்களுடைய சாதிபற்று தானாகவோ அல்லது சமூகத்தாலோ சாதி வாரி கொள்கைக்குள் திணித்துவிடுகிறது.இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் உள்ள அனைவரும் சமம் என்ற கோட்பாடு காலப்போக்கில் சாதிகள் தான் எங்களின் உயிர் மூச்சு என்றாகிவிடும் போல. அதற்கேற்றாற் போல தற்போதுள்ள அரசியல் கட்சிகள் செயல்முறையும், சமூகத்தின் நிலைமையும் உள்ளது.சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா சாதியை ஒழித்து சமூக நீதியைப் பின்பற்ற முயற்சித்தது. இதற்கு ஷ்கிசோஃப்ரினியாவின் கொள்கைக்கு ஒரு சிறந்த உதாரணம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கிட மறுப்பது சாதி குருட்டுத்தன்மை கொள்கையின் ஒரு விளைவாகிடும். ஆனால் அரசியலமைப்பு சட்டம், கல்வி, பொது வேலைவாய்ப்பு மற்றும் தேர்தல் தொகுதிகளில் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியைப் பெறுவதை வெளிப்படையாகக் கட்டளையிடுகிறது.அரசியலமைப்புச் சட்டம் “வர்க்கம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், உச்ச நீதிமன்றம், பின் தங்கிய நிலையை அடையாளம் காண சாதி என்பது ஒரு செல்லுபடியாக கூடிய ஒன்று என மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறது. மேலும் இட ஒதுக்கீடு கொள்கைகளை நிலைநிறுத்த விரிவான சாதி வாரியான தரவை அது வலியுறுத்தியுள்ளது.2010-ம் ஆண்டு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கிட பாராளுமன்றம் ஒரு மனதாக தீர்மானித்தது. 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் பதிவு செய்யபட்டன(அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்புகள் என்று அழைக்கப்பட்டவை தவிர). இந்திய மானுடவியல் ஆய்வு 6,325 சாதிகளை அடையாளம் கண்டுள்ளது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி –II அரசாங்கத்தால் நடத்தப்பட்ட 2011-ம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) ஒரு படுதோல்வியாக இருந்தது. இது 46 லட்சம் சாதிகள் என்ற அபத்தமான எண்ணிக்கையை உருவாக்கியது மற்றும் அதை ஒருபோதும் வெளியிடப்படவில்லை.1931-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 20011-ல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021-ல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.இவ்வாறு ஒவ்வொரு முறையும் சாதி வாரி கணக்கெடுப்பு முரண்பாடாகவே இருந்துள்ளது. இதனை துள்ளியமாக கணக்கிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அப்போது தான் இட ஒதுக்கீட்டு கொள்கை சரியாக திட்டமிடுதல் முடியும். 10 பேரின் உணவை 100 பேருக்கு தருவதும், 100 பேரின் உணவை 10 பேருக்கு தருவதும் அநீதியாகும். இதே அநீதி இடஒதுக்கீட்டிலும் நடந்துவிடக்கூடாது. இட ஒதுக்கீட்டு உரிமையை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக்கொடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்தியா சாதி வாரி கணக்கெடுப்பை சரியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு பக்கம் சாதிகள் இல்லையடி பாப்பா, மறுபக்கம் சாதிகள் உள்ளதடி பாப்பா, இதற்கிடையில் நாம் அனைவரும் ஒரு மதில் மேல் பூனை. |
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிறந்த கருத்துக்களை வாசிப்பது வாழ்க்கையில் சரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது.