Advertisement

வலைத்தளத்தில் படித்ததில் மனதை தொட்ட நம்பிக்கை கதை 

ஒரு இளம் பெண்  காரை ஓட்டிக்கொண்டு சென்றாள். பக்கத்து இருக்கையில், அவளது அப்பா அமர்ந்திருந்தார். சில மைல் தூரம் சென்ற பிறகு, அவர்கள்  ஒரு புயல் காற்றை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் பயந்து, அப்பா! நான் இப்போது என்ன செய்வது?  என்று கேட்டாள்.  தொடர்ந்து காரை ஓட்டு, என்று அமைதியாக தந்தை பதில் கூறினார். அந்தப் பெண்ணும் காரை ஓட்டிக் கொண்டே இருந்தாள். சில மீட்டர் தொலைவு சென்ற பிறகு, மற்ற கார்கள் புயல் காற்றால் ஒரு பக்கமாக இழுத்துத் தள்ளப்படுவதைப் பார்த்தாள். காற்று மிகவும் மோசமாக இருந்தது. 

சவாலான நேரங்களையெல்லாம்நமக்கு வாய்ப்பானநேரங்களாக மாற்றமுயற்சிக்க வேண்டும்…                     …. ஜோடன்
 
Always turn a negative situation into a positive situation

….  Jodan

இந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போன அந்தப் பெண் அப்பாவிடம்,  நாமும் புயல் காற்றால் இழுக்கப்படுவோமா? என்றாள்.     இல்லை. நீ காரை மட்டும் பார்த்து, தொடர்ந்து ஓட்டு, என்றார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு,  நிறைய கார்கள் புயலால், இழுக்கப்படுவதைப் பார்த்தாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் காரின் வேகத்தைக் குறைத்து அப்பாவிடம், புயல் எழுப்பிய தூசியால், என்னால் எதையும்  தெளிவாக பார்க்க முடியவில்லை.  புயல் காற்று மிகவும் பயங்கரமாக வீசுகிறது.  எல்லோரையும் இழுத்துத் தள்ளுகிறது என்றாள். ஆனால், அவள் அப்பா நீ காரை மட்டும் ஓட்டிக்கொண்டு இரு என்றார். இன்னும் கொஞ்ச தூரம், அவள் காரை ஓட்டிக் கொண்டு சென்றாள்.  

புயல் அதன் உச்சத்தை எட்டியது.  இப்போது அந்தப் பெண்ணுக்கு மிகவும் கடினமாக இருந்தது. முன்னால் இருக்கும் எதுவுமே தெரியவில்லை.  பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தலாம் என அவள் விரும்பினாலும், அப்பா புயலின் நடுவே தொடர்ந்து ஓட்டச் சொன்னதால், அவள் காரை தொடர்ந்து ஓட்டினாள். புயலின் ஊடாக சிறிது மைல் தூரம் ஓட்டிய பிறகு, சீக்கிரமே அந்த சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  முன்னால் உள்ள எல்லாமே தெளிவாகத் தெரிந்தன.  

இன்னும் சிறிது மைல் கடந்த பிறகு, அவர்கள் முற்றிலுமாக புயலை விட்டு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்தனர். இப்போது அந்தப் பெண்ணின் அப்பா, அவளிடம்  நீ காரை நிறுத்தி விட்டு வெளியே வரலாம். இப்போதுதான், நாம் புயலை விட்டு பாதுகாப்பாக வந்து விட்டோமே! என்றார். எதற்காக காரை நிறுத்த வேண்டும்? என்றாள். மற்றவர்களைப் போல நீயும் புயலுக்கு நடுவில் நிறுத்தி இருந்தால், நீ இப்போதும் புயலில் போராடிக்கொண்டுதான் இருப்பாய். நீ அப்படிச் செய்யாமல், தொடர்ந்து காரை ஓட்டிக்கொண்டு வந்ததால், நீ புயலைக் கடந்து விட்டாய்.

எடுத்த எடுப்பிலேயே நம் மனதில் சக்தி வாய்ந்த மன உறுதியை எடுத்து அதை முழுவதுமாக பராமரித்து வரும்போது, தோல்வி என்பதே வராது. நிச்சயம் முழுமையான வெற்றியை சாதிக்க முடியும். கடுமையான சோதனைகளுக்கு  ஆளாகும் போது,  வலிமையுடையவர்கள் கூட அதில் இருந்து மீண்டு வர தவறி விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், அதை சமாளித்து விட்டால், நமது வேகத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம். வழியில் ஏற்படும் கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி கடினமான கால கட்டத்தில் இருந்து உறுதியாக வெளியே வந்துவிடலாம்.  உன் மேல் நம்பிக்கை வைத்து, முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடி சவால்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.

தற்போது மக்களின் அவசிய தேவையாக இருக்கக்கூடிய சேவை உரிமைச் சட்டத்தைப் பற்றி  படிக்கலாமே தெரிந்து கொள்ள:

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles