Tuesday, July 15, 2025
spot_img

பள்ளிகளில் “ப” வடிவ இருக்கையில் உள்ள நன்மைகள் மற்றும் சிரமங்கள் + நூறு ரூபாயில் புற்று நோயை அழிக்க, வராமல் தடுக்க சிறந்த மருந்து என வலைத்தளத்தில் உலா வரும் செய்தி உண்மையா?

பள்ளிகளில்ப” வடிவ இருக்கையில் உள்ள நன்மைகள் மற்றும் சிரமங்கள்

வழக்கமாக, பள்ளிகளில் மாணவர்கள் முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசை வரை இருக்கையில் இருக்கும். இந்நிலையில், தமிழக அரசு பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கையில் “ப” வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். 

இத்தகைய வரிசை முறை மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடமிருந்து சமமான கவனம் கிடைப்பதும் கிடைப்பதில்லை என்றும் கருதப்படுகிறது. இதனை மாற்றும் நோக்கத்துடன் அரை வட்ட வடிவ வடிவில் மாணவர்கள் இருக்கை பள்ளி வகுப்புகளில் இருப்பது போன்று ஒரு படம் கேரளாவில் வெளியானது. இந்த படத்தின் மூலம் பள்ளி வகுப்பறை இருக்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர்   உள்ளிட்ட மாநிலங்களில் “ப” வடிவ இருக்கை முறையை பள்ளி வகுப்புகளில் ஏற்படுத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இந்த முறையில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான நிலை வழங்கப்படுகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதே சமயத்தில், தற்போது உள்ள வகுப்பறைகளில் இந்த வகையில் மாணவர்களை அமர வைப்பதற்கு போதிய இடம் இருக்காது. மேலும், வகுப்பறையில் உள்ள கரும்பலகை 360 டிகிரியில் இல்லாமல் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டு இருக்கும். இத்தகைய சூழலில் “ப” வடிவ இருக்கை முறையை அமல்படுத்தும் போது மாணவர்களுக்கு முதுகு கழுத்து வலி ஏற்படும். இத்தகைய இடர்பாடுகளை நீக்கும் வகையில் வகுப்பறைகளை அமைத்தால் மட்டுமே “ப” வடிவ வகுப்பறை திட்டம் சிறப்பானதாக அமையும்.

“ப” வடிவ வகுப்பறைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுக்கு வாழ்த்துக்கள். இதனை அமல்படுத்த தொடங்கிய பின்னர் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புவோம். Beginning new type seat arrangement in classes. Something is better than nothing. 

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து என உலா வலைத்தளத்தில் உலா வரும் செய்தி உண்மையா?

சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மருந்துவ உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால், அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

அப்படிப்பட்ட புற்று நோயை, படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாழை 400 கிராம்

சுத்தமான தேன் 500 கிராம்

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேனுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மில்லி வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை வைத்துக் கொள்ள கூடாது.

வழக்கம்போல மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. 

https://www.echocommunity.org/fr/resources/3e3fc903-552e-459c-8f9d-1fa291a624da என்ற இணையத்தில் கிடைத்த  விவரங்கள்.

Father Romano Zago, a Franciscan Friar and scholar, wrote the book Cancer Can Be Cured to reveal to the world an all-natural Brazilian Recipe that contains the juice made from the whole leaf plant of Aloe Arborescens and honey that has been shown to rapidly restore the body’s health so it heals itself of all types of cancer. The book tells how it was while administering to the poor in the shantytown of Rio Grande dol Sul , Brazil that he and the provincial Father Arno Reckziegel, witnessed the healing of simple people of cancer who used this recipe. Later, when he had assignments in Israel and Italy where this aloe species grows naturally he continued to see great success in the chronically ill being cured when he recommended, they use this recipe. This inspired for him to spend the next 20 years in researching the science behind this aloe species and the publication of that research in this book along with his numerous first-hand anecdotes of cancer healing by those using the Brazilian

Informations de publication

Éditeur: Waid Group Inc.

ISBN-10: 098198990X

ISBN-13: 978-0981989907

Dewey Decimal: 615.8

Bibliothèque ECHO: 615.8 ZAG

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது இதில் உள்ள உண்மை தன்மையை மருத்துவரோடு ஆலோசித்து பயன்படுத்தலாம்.

விலைவாசி உயர்வுக்கும் வரி உயர்வுக்கும் ஊழல் முக்கியமான காரணம் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து – நுகர்வோர் பூங்கா

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு கேரள மாநில நுகர்வோர் ஆணைய தீர்ப்பு வரப்பிரசாதமா? – நுகர்வோர் பூங்கா

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles