Advertisement

புதிய இணையதளங்கள்! புதிய வாய்ப்புகள்! பார்வையிடுங்கள்! பயன்படுத்துங்கள்!

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் அறிவுசார் இணைய இதழ்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தொடக்க விழா நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் டி. ஆர். அருண் தலைமையில் கடந்த 01 அக்டோபர் 2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளரும் வழக்கறிஞருமான திருச்செங்கோடு கே. ராஜு முன்னிலை வைத்தார்.

அமைதிக்கான உத்திகள் நிறுவனமானது (Tranquility Strategies Private Limited) இந்திய நிறுவனங்கள் சட்டப்படி கடந்த 15 செப்டம்பர் 2024 அன்று பதிவு பெற்றதாகும். இந்த அமைப்பில் வெளியீடு மற்றும் ஊடகப்பிரிவு, மேம்பாட்டு நடவடிக்கைகள் பிரிவு மற்றும் சமூக பொறியியல் பிரிவு ஆகியன செயல்படுகின்றன.

கடந்த 01 ஜனவரி 2024 அன்று வெளியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சார்பில் நுகர்வோர் பூங்கா தமிழ் இணைய இதழ் (https://theconsumerpark.com/) தொடங்கப்பட்டு நுகர்வோர் விழிப்புணர்வுக்கும் பாதுகாப்புக்கும் வழிகாட்டும் வகையிலான கட்டுரைகளும் பொதுவான கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த 01 ஏப்ரல் 2024 அன்று வெளியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சார்பில் பூங்கா இதழ் தமிழ் இணைய இதழ் (https://thenewspark.in/) தொடங்கப்பட்டு நாட்டு நடப்பு, தொழில், அறிவியல், வர்த்தகம், விவசாயம், மக்கள், சுற்றுலா, இயற்கை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுவான கட்டுரைகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் வெளியாகி வருகின்றன.

கடந்த 01 ஜூலை 2024 அன்று அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் இணையதளம் (https://tranquilitystrategies.com/) தொடங்கப்பட்டது. அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட உள்ள அறிவு சார் மேம்பாட்டு திட்டங்கள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய இலக்காக சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தை (International Institute of Peace Strategies) அமைப்பதாக உள்ளது.

கடந்த 01 அக்டோபர் 2024 அன்று வெளியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சார்பில் கீழ்காணும் பொதுவான இணைய இதழ்களையும் ஆய்வு இணைய இதழ்களையும் மற்ற பிரிவுகளையும் இணையதள வடிவமைப்பாளர் பி. திபேன் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடங்கப்பட்ட இதழ்கள் மற்றும் அமைப்புகளின் விவரம் பின்வருமாறு.

நுகர்வோர் பூங்கா ஆங்கில இணைய இதழ்   https://english.theconsumerpark.com/  
பூங்கா இதழ் ஆங்கில இணைய இதழ்                https://english.thenewspark.in/
ஆய்வு பூங்கா படிப்பு மற்றும் ஆய்வு இதழ்களின் தளம்https://researchpark.in/
சட்டம் மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு இதழ்https://jlmssr.researchpark.in/
அமைதிக்கான உத்திகள் ஆய்வு இதழ்https://jopsar.researchpark.in/
வாக்காளரியல் ஆய்வு இதழ்https://jovar.researchpark.in/
செய்தி பூங்கா மொபைல் அப்ளிகேஷன்The News Park Tamil Mobile Application
அமைதி பூங்கா பதிப்பகம்Peace Park Publication (Books)
அமைதி பூங்கா ஊடகம்Peace Park Media (Social, Digital, Electronics)

அறிவு மேம்பாட்டுக்கும் ஆய்வு மேம்பாட்டுக்கும் அமைதிக்கான மக்கள் அமைப்பின் இணைய இதழ்கள் வழி வகுக்கும் என்று  நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் டி. ஆர். அருண் தலைமை உரையில் தெரிவித்தார். சமூக செயல்பாட்டாளர் கண்ணன், பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் ஆசிரியர் கே. கதிர்வேல் வரவேற்புரையும் இறுதியாக அமைதிக்கான உத்திகள் அமைப்பின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் நன்றி உரையும் ஆற்றினார்கள். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கணக்கன்பட்டி சி. ஈஸ்வரன், கணக்கன்பட்டி பொன். ராஜதுரை ஆகியோர் பங்கேற்றனர். நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் ஆகியவற்றில் பயிற்சி கட்டுரையாளர்களாக பணியாற்றும் 27 அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles